ஆன்லைன் இண்டர்வ்யூ தேர்வுகளில் எளிதாக பாஸ் செய்ய இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

Posted By: Kripa Saravanan

இந்தியாவில் தற்போது பெரும்பாலான போட்டி தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறுகின்றன. பேனா , பேப்பர் போன்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றன இந்த ஆன்லைன் முறை தேர்வு. இதனை நடத்துபவர் மற்றும் எழுதுபவர் ஆகிய இருவருக்கும் பல நன்மைகளைக் கொண்டது. அச்சு மற்றும் காகித செலவுகளை கணிசமாகக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆன்லைன் முறை தேர்வு , நேரத்தை திறமையாக பயன்படுத்துகின்றது . இதன் மிக முக்கிய நன்மையாக கருதப்படுவது இதன் தனி தன்மை. தேவைக்கு ஏற்ற விதத்தில் இதனை பயன்படுத்தலாம்., மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ளலாம், தேர்வு தாள் கசிவு போன்றவற்றிற்கான வாய்ப்புகள் இல்லை.

இது கேள்விக்குரிய ஆவணங்களை மீண்டும் திட்டமிடுவதை தவிர்க்கிறது. பயனர்கள் தேதிகள் மற்றும் நேரங்களை தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை வழங்குகிறது. எனினும், முதன் முறை ஆன்லைன் தேர்வு எழுதுபவர்களுக்கு இது ஒரு சவாலாக இருக்கும். ஆகவே தேர்வுக்கு முன்பே, இதன் அடிப்படையை கற்றுக்கொள்வதால், எளிதில் பயனடைய முடியும்.

தேர்வு எழுதுபவர்கள், தேர்வின் நடைமுறைகளை புரிந்து கொள்வதால், நேரத்தை நிர்வகிக்கலாம் மற்றும் தவறுகளை தவிர்க்கலாம். இதற்கான 10 குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கணினி ஆர்வலராக இருங்க:

கணினியை இயக்குவதில் அதிக திறமை இல்லாதவராக இருந்தால் உடனடியாக அதற்கான பயிற்சியை பெறத் தொடங்குங்கள். தேர்வுக்கு முன்னர், பல முறை கணினியை இயக்கிப் பழகிக் கொள்ளுங்கள். இந்த பழக்கம், தேர்வின் போது நேரத்தை நிர்வகிக்க பெரிதும் உதவும். கர்சரை தேடுவது அல்லது மவுஸ் நிர்வகிப்பதில் சிரமம் இருப்பது போன்றவை, நேரத்தைச் சாப்பிடும் வழிகளாகும்.

 

 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்க:

ஆன்லைன் தேர்வு எழுதும்போது பொறுமை மிகவும் முக்கியம். முழு பக்கமும் பதிவிறக்கம் ஆகும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். இல்லையேல் சில கேள்விகள் காணாமல் போகும் வாய்ப்பு உண்டு. முழுவதும் பூர்த்தி அடையாத உங்கள் பதில் தாள், உங்கள் மதிப்பெண்களை பாதிக்கும். இறுதியில் நீங்கள் குறைந்த மதிப்பெண்கள் பெறலாம்.

ஆன்லைன் தேர்வில் முன் அனுபவம் பெறுங்கள்:

குறிப்பிட்ட தேர்வு எழுதுவதற்கு முன்னர், சின்ன சின்ன ஆன்லைன் தேர்வுகளை எழுதி, அதற்கான அனுபவத்தை பெற்றிடுங்கள். இது முற்றிலும் நன்மை பயக்கும். தேர்விற்கு முன் இந்த அனுபவம் உங்களுக்கு நல்ல பலனை தரும். இந்த அனுபவம் தேர்விற்கான உங்கள் அச்சுறுத்தலை போக்கி, சரியான நேரத்திற்குள் தேர்வை முடிக்கும் திறனை உங்களுக்கு கொடுக்கும். நேரம் அதிகம் மிச்சம் இருப்பதால், மறுபடி நீங்கள் எழுதிய பதில்களை சரி பார்க்க முடியும். இது தவிர, இந்த பயிற்சி உங்களை ஒரு நிபுனராக்கும்.

அறிவுறுத்தல்களை கவனமாக படிக்கவும்:

ஆன்லைன் தேர்வுகள் பெரும்பாலும் முக்கியத்துவம் வாய்ந்த வேறுபட்ட சின்னங்களுடன் வருகின்றன. மேலும், ஒரு பிரச்சனையை மறுபடியும் முயற்சிப்பது, வரிசைமுறையைப் பொருட்படுத்தாமல் கேள்விகளுக்கு பதில் எழுதுவது போன்ற சிக்கல்கள் , சரியாக அறிவுறுத்தல்களை படிப்பதால் தீர்க்கப்படுகிறது

சேவ் பட்டனை ஒவ்வொரு முறையும் அழுத்தவும்:

பதில்களுக்கான உங்கள் விருப்பத்தை க்ளிக் செய்தவுடன் சேவ் பட்டனை அழுத்த மறக்க வேண்டாம். கணினியில், தானாக சேமிக்கும் வசதி இல்லாமல் இருக்கும்போது, பதில் எழுதிய கேள்விகள் கூட முயற்சிக்காத கேள்வி பட்டியலில் இருந்து விடும். பதில்களில் மாற்றத்தை உண்டாக்கும்போதும், சேமிக்கும் பட்டனை அழுத்த மறக்க வேண்டாம்.

கண்காணிப்பாளரை அனுகவும்:

சில நேரங்களில் தேர்வு எழுதுபவர், தவறுதலாக தேர்வு பகுதியை விட்டு வெளியேறும் எதாவது ஒரு பட்டனை அழுத்த நேரிடலாம். அந்த சமயத்தில் உடனடியாக தேர்வு கண்காணிப்பாளரை அணுகி உதவி கேட்கலாம். வீட்டில் இருந்து தேர்வு எழுதுபவர்கள், கையோடு, தேர்விற்கான உதவி எண்ணை வைத்திருப்பது மிகவும் சரியான ஒரு முறையாகும். இத்தகைய பிரச்சனைக்குரிய தருணத்தில் , அந்த எண்ணை அழைத்து உதவி கேட்கலாம்.

 

 

தொழில்நுட்ப கோளாறு:

தொழில்நுட்ப கோளாறு வருவதற்கு முன் எந்த ஒரு எச்சரிக்கையும் விடுப்பதில்லை. எந்த நேரத்திலும் இந்த கோளாறு ஏற்படலாம். அந்த நேரத்தில் பயம் கொள்ளாமல், அமைதியுடன் இருங்கள். உதவி பெறுவதற்கு தேவையான வழிகளை ஆய்ந்திடுங்கள் . பயம் கொள்வதால் எந்த ஒரு நல்லதும் நடக்க போவதில்லை. ஆகவே சரியான செயலை செய்திடுங்கள்.

மூலோபாய அணுகுமுறை:

தேர்வு நேழுதுவதற்கு முன், சில விஷயங்களுக்கான திட்டமிடல் என்பது நல்ல பலனை தரும். எந்த வினாவை முதலில் எழுதுவது, எதனை கடைசியில் எழுதுவது என்பது பற்றி முன் கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது. இந்த முறை, நேர மேலாண்மைக்கு உதவுவதுடன், உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை மற்றும் சௌகரியத்தை தருகிறது.

கேள்விக்கான வரையறை:

ஆன்லைன் தேர்வில், கண்காணிப்பாளர் நேர இருப்பைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடுவதில்லை. தேர்வு பக்கத்தின் வலது அல்லது இடது மூலையில் ஒரு டைமர் பொருத்தப்பட்டு உங்கள் பதட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இத்தகைய பதட்டத்தை போக்க, ஒவ்வொரு கேள்விக்கான நேரத்தை திட்டமிடல் நல்லது. இதனால் நேரம் குறைந்து அதனால் ஏற்படும் பதட்டம் தவிர்க்கப்படும். முன் கூட்டியே திட்டமிடல் என்பது நேர மேலாண்மையை பெருமளவில் வெற்றி பெற செய்யும்.

பதில் எழுதிய பின் அதனை மறுபடி படித்து பாருங்கள்:

சரியான பதில் தெரிந்து அவசரத்தில் தவறான பதிலை தேர்ந்தெடுக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. எல்லா பதிலையும் எழுதி முடித்த பின், அவற்றை மறுமுறை சரிபார்ப்பதால் இத்தகைய தவறுகள் சரி செய்யப்படலாம். . தேர்வு எழுதி முடித்த பின், 10நிமிடங்கள் அதனை சரி பார்ப்பதால், பின்னர் வருந்துவது தவிர்க்கப்படும்.

English summary
Ten Tips That Will Help You Prepare For Online Tests

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia