ஆசிரியர் மனித வாழ்வின் மைல்கல்

Posted By:

"ஆசிரியர்கள் மனித வாழ்வின் முதல் மைல்கல் , மோசமான ஆசிரியரிடமிருந்து ஒரு நல்ல மாணவன் கற்றுகொள்ளலாம் "
மனிதவாழ்வின் மாணவப் பருவம் ஒரு மைல்கள் ஆகும் அதனை வெற்றிகரமாக கடக்கும் மனிதன் வாழ்வின் சிறப்பை அடைவான் .அத்தகைய மைல்கல்லை கடக்கும் வேளையில் நமக்கான பாடங்களோடு , ஒழுங்கையும் கற்றுத்தரும் பொறுப்பையும் கொண்ட ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களை செதுக்கி சிலையாக்கும் சிற்பிகளே ஆவர். அத்தகைய பெருமை வாய்ந்த ஆசிரியர்களுக்கான சில குறிப்புகள் ,,

ஆசிரியரிடமிருந்து ஒரு மாணவர்கள் தரமான பாடம் கற்கலாம் .

  • வகுப்பு அறையில் மாணவர்கள் தேவையறிந்து செயல்படுங்கள் மாணவர்களின் வருகை பதிவேடு நிறைந்திருக்கும் .
  • பாடங்களை அறைகுறையாக முடித்து படிக்க வைப்பதைவிட முழுமையாக பாடங்களை விளக்கி படிக்க வையுங்கள் மதிபெண் அதிகம் பெற்று உங்களுக்கான மதிப்பை உயர்த்துவார்கள்.
  • அறிவியல் பாடங்களுக்காக லேப் பயன்பாட்டை அருகில் இருந்து விளக்குங்கள் , மாணவர்களின் அறிவை விரிவாக்குங்கள் முழுமதிபெண் பெற்றால் உங்களுக்கே அதற்கான பெருமைகள் சேரும்.
  • அவசர கோலமாக செயல்,பேச்சு போக்கை நிறுத்துங்கள் .
  • ஆசிரியர்கள் சிறப்பாக இருக்க தலைமை பேராசிரியர்கள் ஒத்துழைப்பு தேவை ஆகவே பள்ளி மற்றும் துறை தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கும் , ஆசரியர்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் அமைத்து ஆசிரியருக்கு முழு சுதந்திரம் வழங்கும்போது மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு பள்ளி வளர்ச்சிக்கு உதவுவர் .
  • ஆசிரியர்கள் தங்களைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் சரியாக பாடம் நடத்தினீர்களா , மாணவர்களின் கவனம் எவ்வாறு இருந்தது என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் அதுவே உங்களை சிறந்த ஆசிரியராக உருவேற்றம் செய்யும் .
  • மாணவர்களை புத்தக புழுவாக இயங்க வைக்காமல் , சுயமாக சிந்தித்து செயல்பட வையுங்கள் , ஆராயும்திறன் கற்றுகொடுங்கள் , எழுதவையுங்கள் விளக்கங்களுடன் விமர்சிக்கவும் , ஒப்பீடு செய்யவும் கற்றுகொடுங்கள் மாணவர்கள் எதிர்காலம்தனில் அவர்களையறியாமல் சிறந்தபோக்கை பின்பற்றவைத்து உயர்வடையச் செய்யும் .

English summary
students can get quality lesson from teacher that was mentioned above the article

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia