ரூ. 10 ஆயிரம் கடனில் துவங்கி இன்போசிஸ் கட்டியெழுப்பிய நாராயண மூர்த்தி - Success Story #004

Posted By: Gowtham Dhavamani

உலக அரங்கில் அறிமுகம் தேவையில்லா மனிதர் நாராயண மூர்த்தி. மென்பொருள் உலகில் பெரிதாக வளர துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், தொழில்முனைவோருக்கும் முன்னுதாரணமாக திகழ்பவர் இவர்தான். இந்தயாவில் மென்பொருள் வளர்ச்சியின் கதையே இவரது கதையாகும். பார்ப்பதற்கு மிக எளிதாக தோன்றும் இவர், இந்தியாவின் மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் இன்போசிஸ்சின் நிறுவனர்.

கல்வி :

1967 - பீ.டெக் (எலெக்டிரிகல் இன்ஜினியரிங்), நேஷனல் இன்ஸ்டிடுட் ஆப் இன்ஜினியரிங்
1969 - ஐஐடீ கான்பூர் மாஸ்டர்ஸ் டிகிரி (கணினி அறிவியல் துறை)

விருதுகள் :

1996 - ஜேஆர்டீ டாடா பெருநிறுவன தலைமைபண்புக்கான விருது
1998 - சிறந்த முன்னாள் மாணவர் விருது - ஐஐடீ கான்பூர்
2000 - பத்மஸ்ரீ
2001 - மாக்ஸ் ஷிமிட்நீ லிபர்ட்டி விருது
2003 - உலகின் முன்னணி தொழில்முனைவோர் விருது - ஏர்நஸ்ட் & யங்
2003 - இந்தோ பிரெஞ்சு போரம் பதக்கம்
கமாண்டர் ஆப் பிரிட்டிஷ் ஆர்டர்
2008 - பத்ம விபூஷன்

வேலை :

நாராயண மூர்த்தி தனது வாழ்க்கையை ஐஐஎம் அஹமதாபாத்தில் சிஸ்டம்ஸ் இஞ்சினியராக துவக்கினார். நேரமுரையில் ஒரு கணினியை பகிர்ந்து கொண்டு, ஈசில் நிறுவனத்திற்காக ஒரு மொழிப்பெயர்க்கும் மென்பொருளை வடிவமைத்தார்.

பின்பு புனேவில் உள்ள பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்ல் இணைந்தார்.

பின்பு 1981ல் தனது மனைவி சுதாவிடம் 10000 ருபாய் கடனாக பெற்று 6 நண்பர்களோடு இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தை துவக்கினார்.

மென்பொருள் சேவை நிறுவனங்களின் தேசிய சங்க தலைவராக 1992 முதல் 1994 வரை பதவி வகித்தார்.

டீபீஎஸ் வங்கி சிங்கபூர், ரிசர்வ் வங்கி, என்டீடீவி, ஹெஎஸ்பீசீ, யூனிலீவர் போன்ற பல நிறுவங்களில் மேலாண்மை குழுக்களிலும் பதவி வகித்தார்.

தற்போது இன்போசிஸ் தலைமை பொறுப்பில் இருந்து விலகி, ஆலோசகராக பதவியில் உள்ளார்.

 

தனக்கான முன்னுதாரணத்தை கண்டறிதல் :

நாராயணமூர்த்தியின் வாழ்கையை மாற்றிய நிகழ்வு ஐஐடீ கான்பூரில் நிகழ்ந்தது. அங்கு ஓய்வு எடுப்பதற்காக பிரபலமான கணணி விஞ்ஞானி ஒருவர் வந்திருந்தார். அப்போது அவர் நாராயண மூர்த்தியை கணணி துறையில் மேல்படிப்பு படிக்குமாறு வலியுறுத்தினார்.

இதை பற்றி பின்னாளில் மூர்த்தி அவர்கள் கூறுகையில் "என்னால் அந்த எண்ணத்தை மனதில் இருந்து அகற்ற இயலவில்லை. காலை உணவை முடித்து நேராக நான் நூலகத்திற்கு சென்றேன். அவர் கூறிய நான்கு ஐந்து நாளிதழ்களை படித்து முடித்தேன். பின்னர் கணணி கற்கும் எண்ணத்தோடு அங்கிருந்து வெளியேறினேன். இப்போதும் அந்த சந்திப்பை நினைத்து பார்க்கையில், ஒருவர் எவ்வாறு ஒரு மாணவனின் எதிர்காலத்தை மாற்ற இயலும் என்பதை நினைத்து பிரம்மிப்பாக இருக்கும். எந்த நேரத்திலும், யாரிடமிருந்தும் எதிர்பாராத சூழ்நிலையில் உங்களுக்கு கிடைக்கும் அறிவுரை உங்கள் வாழ்கையை மாற்றும் விதமாக அமையும். எனவே எப்போதும் விழித்திருங்கள். வாய்ப்பு கதவை தட்டும்.

 

நம்பிக்கை :

இன்போசிஸ் நிறுவனத்தின் ஆரம்பகட்டத்தில், சங்கடமான சூழல்களில் அனைவரது மனதில் இருந்த நம்பிக்கை மற்றும் நேர்மையான சிந்தனைகள் தான் இன்று அந்நிறுவனம் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைய காரணியாக உள்ளது என்கிறார் அவர். சில நேரங்களில் மற்ற பெரிய நிறுவனங்கள் மிகபெரிய தொகைக்கு இன்போசிஸ்சை வாங்கிக்கொள்ள முன்வந்த போதும், நிறுவனத்தின் மீதும், எங்களது திறமைகள் மீதும் நம்பிக்கை வைத்து உழைத்ததன் பலன் இன்று நாம் காண்கிறோம்" என்கிறார் அவர்.

English summary
Here We have written about the Success Story of NR Narayana Murthy who is the founder of Infosys.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia