அர்னாப் கோஸ்வாமி , ஒரு துணிச்சலான தொகுப்பாளரின் கதை!

Posted By: Gowtham Dhavamani

இந்தியாவில் விரும்பப்படும் அல்லது வெறுக்கப்படும், ஆனால் நிச்சயமாக புறக்கணிக்க முடியாத செய்தி தொகுப்பாளர்களை பட்டியலிட்டால், அதில் அர்னாப் கோஸ்வாமி முதலிடத்தில் இருப்பார். 'தி நேஷன் வான்டஸ் டு நோ' மற்றும் 'யு கேன்னாட் எஸ்கேப் தீஸ் டஃ ப் கொஸ்டின்' போன்ற பஞ்ச் வரிகள் மூலம் , தன் நிகழ்ச்சிக்கு வருபவர்களை திண்டாட வைப்பார். மேலும் அவர்கள் பேசும் போதே இடையில் மறித்து பேசுவார்.

ஆனா, கோஸ்வாமி பத்திரிக்கை துறைய முதல்ல இப்படி அணுகல, சொல்லப்போனா ஒரு சின்ன பையன் மாதிரி கூச்சத்தோட தான் ஆரம்பிச்சிருக்காரு. 2008ல நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அப்புறம் தான் தனது கருத்துக்களை வெளியிடுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மாற்றத்தை கொண்டு வந்துருக்காரு. உடனே , டைம்ஸ் நொவ்-ல ஒளிப்பரப்பான அவரோட நிகழ்ச்சி 'தி நியூஸ் ஹவர்', இந்திய தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்ட நியூஸ் நிகழ்ச்சி ஆயிடுச்சு.

பல்வேறு நகரங்களில் பள்ளி வாழ்க்கை:

11 வயது முதல் விவாதங்களில் பங்கேற்பு!

கோஸ்வாமியின் அப்பா இராணுவ அதிகாரிங்கிறதால, நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் பள்ளிகளில் படிச்சிருக்கார். தனது 10-ஆம் வகுப்பை டெல்லி கண்டோன்மெண்ட்யில் இருக்குற மவுண்ட் செயிண்ட் மேரிஸ் பள்ளியிலும், 12- ஆம் வகுப்பை ஜபல்பூர் கண்டோன்மெண்ட்ல இருக்குற கேந்திரிய வித்யாலயாலயும் படிச்சிருக்காரு. கோஸ்வாமியோட தாத்தாக்கள் கூட புகழ்பெற்ற பிரபலங்கள் தான். அவரது அப்பா வழி தாத்தா ஒரு சுதந்திர போராளி, வழக்கறிஞர் மற்றும் காங்கிரஸ் தலைவர் , மற்றும் அவரது அம்மா வழி தாத்தா ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் அஸ்ஸாமில் எதிர்க்கட்சி தலைவர். கோஸ்வாமிக்கு கூச்ச சுபாவம் இருந்தாலும் பள்ளிகளில் நடந்த விவாத போட்டிகளில் சிறப்பாக தான் கலந்து கொண்டிருக்கிறார்.

 

டியூ மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்:

அச்சு பத்திரிகையில் வேலை!

சமுதாய கல்வியில் ஆர்வம் கொண்டதால், தில்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியில் இருந்து பி.எஸ்.ஏ (ஹன்ஸ்) சமூகவியல் படிப்பை முடித்தார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் செயின்ட் அன்டோனியஸ் கல்லூரியில் சமூக மனிதவியல் துறையில் தனது முதுகலை பட்டம் பெற்றார். அதே வருடம் ,1994-இல் கொல்கத்தாவில் உள்ள தி டெலிகிராப் ஆஃபிஸில் பத்திரிகையாளராக சேர கோஸ்வாமி இந்தியா திரும்பினார். அச்சு பத்திரிகையில் நாட்டம் இல்லாததால், தொலைக்காட்சியில் வாய்ப்புகள் தேட தொடங்கினார். கோஸ்வாமி ஒரு வருடத்திற்குள் தனது முதல் வேலையை விட்டுவிட்டார்.

 

1998 இல் என்டீடிவி 24 × 7 இல் இணைந்தார்:

2003 இல் ஆசியாவில் சிறந்த செய்தி தொகுப்பாளராக இரண்டாவது இடம்!

தி டெலிகிராபிலிருந்து தனது வேலையை விடுவதற்கு முன், தொலைக்காட்சியில் சேர முடிவெடுத்து உள்ளதாக ஆக்ஸ்போர்டு முன்னாள் மாணவர் ராஜ்தீப் சர்தேசாயிடம் கோஸ்வாமி ஆலோசனை கேட்க அவரும் கோஸ்வாமியின் இந்த முடிவுக்கு ஆதரவு அளித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு என்டீடிவி 24 × 7 இல் செய்தி ஒளிபரப்பாளராக கோஸ்வாமி சேர்ந்துள்ளார். மேலும் டிடி மெட்ரோவின் நியூஸ் டுநைட் என்ற நிகழ்ச்சிக்கு நிருபராக வேலை செய்துள்ளார். 1998 ஆம் ஆண்டு இவர் செய்தி ஆசிரியராக மாறி, நியூஸ் ஹவர் என்ற நிகழ்ச்சியை பார்க்கா தத் அல்லது ராஜ்தீப் சர்தேசாய் உடன் தொகுத்து வழங்கியுள்ளார். என்டீடிவியின் 'நியூஸ்நைட்' என்ற மற்றொரு செய்தி நிகழ்ச்சிக்கும் கோஸ்வாமி தான் தொகுப்பாளர். 2003 ஆம் ஆண்டு, ஏசியன் டெலிவிஷன் அவார்ட்ஸ் இல் ஆசியாவில் சிறந்த செய்தி தொகுப்பாளராக இரண்டாவது இடம் பெற்றார்.

 

லுட்யன்ஸ் டெல்லி கலாச்சாரத்தின் மீது வருத்தம்:

பத்திரிகை துறையை விட்டு விலக முடிவு...

சோனியா காந்தியுடன் முதல் நேர்காணலாக ஆகட்டும், நேபாள் கும்பலால் தாக்கப்பட்ட போதுக் கூட 2001 நேபாள ராஜ்ய படுகொலையை நேரலையாக தொகுத்து வழங்கியதாகட்டும். கோஸ்வாமி எப்போதும் ஒரு உணர்ச்சி மிக்க பத்திரிகையாளராக இருந்திருக்கிறார். கோஸ்வாமி 'காம்பாட்டிங் டேரரிஸம்: தி லீகல் சேலஞ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அத்தோடு, சிட்னி சசெக்ஸ் கல்லூரியின் சர்வதேச படிப்புகள் துரையில் சிறப்பு பேராசிரியராகவும் இருந்தார். இருந்தாலும், 2002 ஆண்டு பத்திரிக்கை துறையை விட்டு விலக முடிவெடுத்தார். அந்த துறைல "விட்டுக்கொடுத்து போறது", வாங்கிகிட்டு வேலை செய்யறது, செய்திய கருப்படிக்கற கலாச்சாரம் அவருக்கு புடிக்கல. பத்திரிகைத்துறைக்கு இருக்க வேண்டிய தைரியம் இந்திய பத்திரிக்கைகளுக்கு இல்லைனு நெனச்சாரு. அந்த சமயத்துல "டைம்ஸ் நொவ்" வாய்ப்பு அவரோட கதவ தட்டச்சு.

 

2004ல டைம்ஸ் ஆப் இந்தியா, 2006ல டைம்ஸ் நொவ் :

டைம்ஸ் குழுமத்தோட "டைம்ஸ் நொவ்" தொலைக்காட்சில, அவருக்கு ஏத்த நிகழ்ச்சிய, அவரோட பாணில நடத்தறதுக்கான வாய்ப்ப கொடுத்துச்சு. விவாதங்கள் காரசாரமாச்சு. விவாத மேடை போர்களமாச்சு. சின்னவயசுல பொழுதுபோக்கா விவாதிக்க ஆரம்பிச்ச அர்னாப் அதையே தன்னோட தொழிலா மாத்தினாரு. "நியூஸ் ஹவர்" நிகழ்ச்சி மட்டுமில்லாம, "பிராக்கிலி ஸ்பிக்கிங் வித் அர்னாப்"கிற நிகழ்ச்சியும் நடத்த ஆரம்பிச்சாரு. அந்த நிகழ்ச்சில பல பிரபலங்கள் கலந்துக்கிட்டு, பேசி இருக்காங்க. பிரதமர் மோடி, அமெரிக்கா அரசியல்வாதி ஹிலாரி கிளின்டன், முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், 14வது தலாய்லாமா இப்பிடி அடுக்கிட்டே போலாம். 2008 மும்பைல நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு அப்பறம் தான் அர்னாப் கோஸ்வாமியோட விவாத முறைல மாற்றம் வந்துச்சு.

கொடிகட்டிப்பறந்த "நியூஸ் ஹவர்"

26 - 29 நவம்பர் 2008. மும்பைல தீவிரவாத தாக்குதல் நடந்துச்சு. அந்த சமயத்துல தொலைக்காட்சில அர்னாப்போட அணுகுமுறை மிகப்பெரிய தாகத்த உருவாக்குச்சு. பத்திரிகையாளர்கள் தங்களோட கருத்துகளை சொல்லாம இருக்கறதுல எந்த விதமான நல்லதும் இல்லைனு புரிஞ்சுகிட்டு, தன்னோட கருத்த தைரியமா தொலைக்காட்சி விவாதங்கள்ல சொன்னாரு. இதுனால, விவாதங்கள் சூடாக ஆரம்பிச்சுது, தொலைக்காட்சியோட டிஆர்பீ ரேடிங்ட் உச்சத்துக்கு போச்சு, சமூக வலைத்தளங்கள்ல அர்னாப் ஒரு விவாத தலைப்பா மாறினாரு. இந்தியா டுடே வெளியிட்ட "செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டிய"ல்ல 26வது இடத்துல இருந்தாரு அர்னாப்.

அர்னாப் வாழ்க்கைல இருந்து என்ன கத்துக்கலாம்:

"அவுங்கள விமர்சிக்கலாம், கருத்துக்கு எதிர் கருத்து வெக்கலாம், ஆனா அவுங்கள ஒதுக்கீட முடியாது"ன்னு ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லுவாரு. அதுக்கு ஏத்த மாதிரிதான் அர்னாப் வாழ்க்கையும். சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாறுனது அர்னாப் செஞ்ச சரியான விஷயம். பத்திரிக்கைய விட்டு தொலைக்காட்சிக்கு வந்தாரு. டெல்லிய விட்டுட்டு மும்பைக்கு போனாரு. தனக்கான பாணிய உருவாக்குனாரு. முக்கியமான ஆளு கிட்ட கேக்க முடியாத கேள்விகளை கேட்கக்கூடிய இடத்துக்கு வந்தாரு. இது நாம கத்துக்க வேண்டியது.

English summary
Succeess Story Arnab Goswami!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia