அப்பாடா இதுதான் ஸ்டிரெஸ் இல்லாத வேலை

Posted By:

வேலை செய்யும் பொழுது நமக்கு  அதிகமாக இருக்கும் கொடச்சல் எதுன்னா டார்கெட் அய்யோ இந்த மாசத்துக்குள்ள இது பண்ணனுமே அத எப்படி கொண்டு வரதுன்னு ஒவ்வொரு முறையும் மண்டைய பிச்சுக்கோவோம்.
தனியார்த் துறையில் இருக்கின்ற சிக்கலில் அது தவிர்க்க முடியாதது ஆகும்.

 

நீங்க என்னதான் அடிச்சு புடிச்சாலும் உங்க தாட்ஸ் ஒர்க் அவுட் ஆவதில்லை என்ற குழப்பம் இருக்கா காரணம் என்னவெனில் அது முழு மனதோடு செய்வதில்லை அதுதான் பிரச்சனை ஆகும்.

எந்த ஒரு வேலைக்கும் எப்பொழுதும் சிக்கல் இருக்கதான் செய்யும் அதற்கேற்ப நாம் வளைந்து கொடுத்து  செயல்டுவதில்லை.

அனுபவங்களின் வேறுபாடு :

உங்களிடம் திறன் கொட்டி கிடக்கின்றன் ஆனால் அதனை முறையாக கொண்டு செல்ல தெரியவில்லை அதாவது நீங்கள் தயாரித்த பொருட்களை முறையாக மார்க்கெட்டிங் செய்ய தெரியவில்லை என்னும் போது நீங்கள் தயாரிக்கும் எந்த ஒரு தரமான பொருளுக்கும் முறையான மதிப்பு கிடைக்காது ஆகையால் முறைப்படி அதனை உங்களிடம் உள்ள பொருளை இடம் மாற்றும் வல்லமை உங்களிடம் இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட அந்த திறன் உங்களிடம் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது நீங்கள் சார்ந்த அந்த நிர்வாகத்தின் தலைமை உங்களிடம் கேள்வி கேட்கும் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு ஆவீர்கள் அதனை உணர்ந்து உங்களை விட அனுபவம் குறைந்திருந்தாலும் அவர்களின் அறிவிற்கும் அவர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் மேலும் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் கற்று கொள்ள தயாராகும் ஒருவர் மிகச்சிறந்த இடத்தை பெறுவார்.

வேலையில் வளைந்து கொடுங்கள்

எதையும் மகிழ்வுடன் ஏற்று செயல்படும் போது நெருக்கடிகள் நம்மை நெருங்காது

மனதுவிட்டு பாராட்டுங்கள்

மனதுக்கு பிடித்தை செய்யும் வேலையில் வரும் தடைகள் நெருக்கடிகள்  பொருட்டாக இருக்காது 

செய்யும் வேலை எதுவானாலும் மனதிருப்தி

செய்யும் வேலை எதுவானாலும் இக்கட்டான சூழலிலும்  வெற்றி பெற முடியும் 

குழு ஒற்றுமை பணியை சிறப்பாக்கும்

உங்கள் பணியிடத்தில் குழுவுடன் ஒற்றுமையாக இருங்கள் அது உங்களை சிறப்பாக்கும் 

 

நான் பெரிதா நீ பெரிதா :

தலைமை பொறுப்பை வகிக்கும் ஒருவரின் பொறுப்பின்மையால் உடன் இருக்கும் அந்த ஒட்டு மொத்த குழுவும் மிகுந்த திறன் இருந்து செல்லா காசாக நிற்கும் நிலை ஏற்படுகின்றது.

பெரிய நிறுவனத்தின் அந்த குறிப்பிட்ட குழுவின் செயல்பாடு சிறப்பாக இல்லையெனில், அதன் தலைமைக்கு தகுதி குறைவு எனில் அவர் முக்கியமாக அந்த தலைமையை விலக்கிவிடுவது நல்லது. குழு உறுப்பினர்கள் நலன் கருதி விலகுதல் நலம் பயக்கும் ஆனால் அதனை செய்ய முடியாத பொழுது அந்த தனிநபரால் ஒட்டு மொத்த குழுவும் திறனற்றதாக இருக்கும். குழு உறுப்பினர்கள் அங்கே நான் பெரிதா நீ பெரிதா என ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வார்கள்.

இந்த கழகத்தை நிறுத்த சில அதிரடி வேலைகளை நிறுவனம் செய்யும். அப்பொழுது அந்த ஒரு சில மணிநேரம் நமக்கு வேற்று கிரகத்தில் இருப்பது போல் இருக்கும் ஆனால் அந்த சிக்கலான சூழலில் சற்று அமைதி காத்து செயல்படுங்கள் உங்கள் நிறுவனம் கொடுக்கும் சமபளத்திற்கு நீங்கள் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்கும் அதற்கேற்ப ஏற்ப ஏற்ப்பட்ட நட்டத்தை சரிக்கட்ட உங்கள் நிறுவனம் காட்டும் வழியை பின்ப்பற்றுங்கள் முழு மனதோடு பின்ப்பற்றுங்கள் அந்த சிக்கலான டைமிங்கில் நாம் சிறப்பாக செயல்ப்படத் தயாரானோமானால் மற்ற எந்த ஒரு சமயத்திலும்  சமாளிக்கலாம்.

அப்பாடா ஸ்டிரெஸ்லெஸ் ஜாப் இதுதான் என எதையும் நம்பி போனாலும் நமக்கு இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றம் ஒன்றே ஆகும். 

சார்ந்த பதிவுகள்:

தேர்வுக்கு திட்டமிடலின் மேலாண்மையை அறிந்து செயல்படுவோம் மாணவர்களே

English summary
here article tells about managing stressless job

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia