ஷேர் மார்க்கெட்டிங் படித்தால்... கோடியில் சம்பாதிக்கலாம்!

நிறைய பேருக்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட, அது கொஞ்சம் புரிந்துகொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று ஒதுங்கிவிடுபவர்களே அதிகம்.

By Kani

நிறைய பேருக்கு ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட, அது கொஞ்சம் புரிந்துகொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று ஒதுங்கிவிடுபவர்களே அதிகம்.

இது முற்றிலும் தவறான எண்ணம். உண்மையில் ஒரு கல்லூரி மாணவன்கூட பங்குச் சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஸ்டாக் மார்க்கெட், ஷேர் மார்க்கெட் துறையில் உள்ள படிப்புகள் பற்றி பார்க்கலாம்.

ஷேர் மார்க்கெட்டிங் படித்தால்... கோடியில் சம்பாதிக்கலாம்!

இந்த வகையான படிப்புகளை முறையாக முடிக்கும் பட்சத்தில் வணிகர்கள், முதலீட்டாளர்கள், ஷேர் மார்க்கெட் தொழில்துறையில் புதிதாக நுழைவோர், என அனைவருக்கும் வழிகாட்டுவதோடு, கைநிறைய சம்பாதிக்க முடியும்.

பொதுவாக ஷேர் மார்க்கெட்டில் பணிபுரிய படிப்பைவிட திறமையே முக்கியம். இருந்தாலும் முறையாக கற்று இதில் நுழையும் போது மிகப்பெரிய ஏமற்றங்களை சந்திக்காமல் மிக சாதுர்த்தியமாக வருமானம் ஈட்டவும், கற்பிக்கவும் முடியும்.

படிப்புகள்: இந்த வகையான படிப்புகள், குறுகிய கால சான்றிதழ் படிப்பாகவும், டிகிரி, டிப்ளமோ போன்ற பல்வேறு விதங்களிலும் வழங்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள்:

பாரெக்ஸ் கீஸ் (VJS அகாடமி), விசாகப்பட்டினம்.

இன்ஸ்டிடியூட் ஆப் கேரியர் இன் பினான்ஸியல் மார்கெட், புது தில்லி.

சிடான்ஹாம் காலேஜ் ஆப் காமர்ஸ் அண்ட் எக்னாமிக்ஸ், மும்பை.

IFMC இன்ஸ்டிடியூட், புது தில்லி

நியூ எர்ரா இன்ஸ்டிடியூட் ஆப் புரொஃபெஷனல் ஸ்டடீஸ் (என்ஐபிஎஸ்), புது தில்லி

ஃபோகஸ் எடுகேர் பிரைவேட் லிமிடெட், பெங்களூரு

பிஎஸ்இ இன்ஸ்டிடியூட் லிமிடெட் மும்பை.

ஐ-பிளான், புது தில்லி

சிஎஸ்இ இன்ஸ்டிடியூட் ஆஃப் கேபிடல் மார்க்கெட், கொச்சி

பி.ஆர்.ஆர்.எஸ்.எ.எ.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ், புது தில்லி

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பினான்ஸியல் மார்க்கெட், புதுதில்லி

தத்தா இன்ஸ்டிடியூட் பார் ஸ்டாக் மார்கெட் எஜிகேஷன், ஹைதராபாத்.

வேலை விவரங்கள்:

குறிப்பிட்ட படிப்புகளை முடிக்கும்பட்சத்தில் கீழ்கண்ட பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உங்கள் மீது முழுமையாக நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் நீங்களே ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கலாம்.

  • நிதி ஆலோசகர்கள்.
  • முதலீட்டு ஆலோசகர்.
  • சந்தை வல்லுநர்கள்.
  • பத்திரங்கள் ஆய்வாளர்.
  • நிதி மேலாளர்கள்.
  • பாதுகாப்பு வர்த்தகர்கள்.
  • பாதுகாப்பு விற்பனை பிரதிநிதி.
  • செக்யூரிட்டிஸ் ப்ரோக்கர்.

வேலைவாய்ப்புகள்:

அரசு நிறுவனங்களில் இருந்து முண்ணனி தனியார் நிறுவனங்கள் வரை பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

  • புரோக்கிங் நிறுவனங்கள்.
  • பெரிய நிறுவனங்கள்.
  • காப்பீட்டு நிறுவனங்கள்.
  • முதலீட்டு வங்கிகள்.
  • ஓய்வூதிய நிதி.
  • பாரம்பரியமான வங்கிகள்.
  • இதழ்கள் மற்றும் செய்தித்தாள்கள்.
  • முதலீட்டு ஆலோசனைகள்.
  • நிதி நிறுவனங்கள்.
  • ஆராய்ச்சி.

வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள்:

குறிப்பிட்ட சில முண்ணனி நிறுவனங்கள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிற பல்வேறு வாகையான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

  • ஏஞ்சல் புரோக்கிங் லிமிடெட்.
  • ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட்.
  • எச்டிஎப்சி.
  • ஜே.பி. மோர்கன்.
  • ஐசிஐசிஐ டிரைக்ட்.
  • இந்தியா இன்ஃபோலைன்.
  • இந்தியா புல்ஸ்.
  • ஷெர்கான் லிமிடெட்.
  • கோடாக் செக்யூரிட்டீஸ் லிமிடெட்.
  • கார்வி கன்சல்டன்சி.

சம்பளம்: இந்த துறையில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. தமது தனிப்பட்ட திறமை மற்றும் நுனுக்கங்களை பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பகட்டத்தில் சம்பளம் வருடத்திற்கு ரூ. 2 முதல் 3 லட்சம் வரை பெறலாம். இதே அனுபவம் பெறும்போது, வருடத்திற்கு ரூ.5 முதல் 7 லட்சம் வரை பெற முடியும்.

சுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா? இதற்கு என்ன படிக்க வேண்டும்?சுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா? இதற்கு என்ன படிக்க வேண்டும்?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Stock Market Trader: Job Description & Career Information
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X