ஒருவேள ஜாயினிங் தேதி நெகோஷியேட் செய்யிற சூழல் வந்தா, இதெல்லாம் மறந்திடாதீங்க!

Posted By: Gowtham Dhavamani

இருக்கற வேலைய விட்ட உடனே இந்த வேலைல வந்து சேருங்கன்னு புது நிறுவனத்தோட மனிதவள துறை சொல்லுவாங்க. ஆனா நமக்கு வேற எதாச்சும் யோசனைகள் இருக்கும். கெடைக்கற அந்த சில நாட்கள் இடைவெளிய கொண்டாடிட்டு புது வேலைல சேரலாம்னு யோசிப்போம். ஆனா அத எப்படி புது நிறுவனதுக்கிட்ட சொல்லமுடியும்? அவுங்க நம்மள தப்பா நெனச்சுகிட்டா? எப்பிடி அவுங்கள நம்ம தேதிக்கு ஏத்த படி சம்மதிக்க வெக்கறது?

ஒருவேள ஜாயினிங் தேதி நெகோஷியேட் செய்யிற சூழல் வந்தா, இதெல்லாம் மறந்திடாதீங்க!

வழிகள்:

சாதாரணமா ஒரு புது வேலைய ஒத்துக்கிட நாள்ல இருந்து 2 வாரம் கழிச்சு அந்த வேலைல நீங்க இணையணும். சில நிறுவனங்கள பொறுத்து அவுங்க அவசரத்த பொறுத்து இது மாறுபடும். சில நேரங்கள்ல உங்களால அவுங்க சொன்ன தேதில சேர முடியலைன்னு வேலைய விட வேண்டாம். அந்த தேதில சேர முடியலைன்னு சொல்ல வேண்டாம். அவுங்க கிட்ட பேசி அனுமதி வாங்க முடியுமான்னு பாருங்க. சரியான விதத்துல நாம நம்ம கோரிக்கைய வெச்சா நமக்கு ஏத்த மாதிரி தேதி மாற வாய்ப்பு இருக்கு.

சம்பளம் மட்டும் தான் நாம பேசி படிய வெக்கணும்னு இல்ல. நீங்க வேலைல ஜாயின் பண்ற தேதி, வேலைல சம்பளம் தவிர்த்து உங்களுக்கு கெடைக்கற மத்த விஷயங்க, இதையும் நீங்க பேசி படிய வெக்கலாம்.

முதல்ல நன்றி சொல்லி ஆரம்பிங்க. முதல்ல அந்த வேலை கெடச்சதுக்கு நாம நம்ம சந்தோஷத்த வெளிப்படுத்தணும். வேலை குடுத்தவங்களுக்கு எந்த விதமான சந்தேகமும் அதுல இருக்க கூடாது.

அந்த வாய்ப்ப ஒப்புக்கிட்டு அதுக்கு அப்பறம் உங்க தேவைக்கும் அவுங்க தேவைக்கும் ஏத்த மாதிரி கோரிக்கை வெச்சா அத மாத்தி அமைக்கலாம்.

ஒருவேள ஜாயினிங் தேதி நெகோஷியேட் செய்யிற சூழல் வந்தா, இதெல்லாம் மறந்திடாதீங்க!

தாமதமா சேர என்ன என்ன சொல்லலாம் :

1. உங்களோட காரணம் வலுவனதா இருக்கணும்.

2. இப்போ வேலை செய்யற நிறுவனத்துல அதிக நாள் நீங்க இருக்க வேண்டியதா இருக்கலாம். இல்ல, வேலைய விட்டதுக்கு அப்பறம் சில காலம் வேற நிறுவனத்துல சேரக்கூடாதுன்னு நீங்க ஒப்பந்தம் போட்டுருக்கலாம். அந்த விஷயத்த பேசி புரிய வையுங்க. எதாச்சும் வாய்ப்பு இருக்கான்னு கேளுங்க.

3. அடுத்து வர நபர தயார் படுத்தீட்டு போவேன்னு இப்போ வேலை செய்யற நிறுவனத்துக்கு நீங்க தந்த ஒரு வாக்கா இருக்கலாம். இப்படி சொல்லும்போது வேலைல உங்களோட அர்ப்பணிப்பு அப்பறம் நிறுவனத்து மேல நீங்க வெச்சுருக்கற மரியாதை தெரிய வரும்.

4. உங்க பொண்ணோட கல்யாணம், உங்க கல்யாணம், இல்ல வெளிநாடு பயணம் இப்படி முன்கூட்டியே நீங்க திட்டம் வெச்சுருந்தா அத காரணமா சொல்லலாம்.

5. புது வேலைல சேர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் பயிற்சிகள் எடுத்துக்க நேரம் வேணும்னு கேக்கலாம்.

உடனே சேர வேண்டாம் உங்க நிறுவனம் சொல்ல என்ன காரணம் :

பொறுமையா வேலைல சேருங்கன்னு புது நிறுவனம் சொல்ல வாய்ப்புகள் ரொம்ப குறைவு. ஆனா அப்படி சொன்னா...

1. உங்கள பத்தி விசாரிக்க நேரம் எடுத்துகறாங்கன்னு சொல்லலாம்.

2. உங்களுக்கு முன்னாடி அந்த வேலைய விட்டு போறவரு கொஞ்சம் அதிக நாள் இருந்துட்டு போறேன்னு சொல்லிருக்கலாம். அதனால எதுக்கு ரெண்டு பேர் ஒரே வேலைக்குன்னு உங்கள லேட்டா சேர சொல்லலாம்.

3. சொன்ன தேதில இருந்து தான் சம்பளம் அந்த வேலைக்கு ஒதுக்கப்பட்டுருக்கலாம்.
நீங்க எப்போ உடனே வேலைல சேரலாம் :

4. உங்களுக்கு ஒரு புது வேலை கெடச்சுருச்சுன்னு தெரிஞ்சா, இப்போ வேலை செய்யற நிறுவனம், நீங்க போகலாம்னு சொல்ல வாய்ப்புகள் இருக்கு (1/100 சொல்லுவாங்க). அப்போ நீங்க அந்த நேரத்துல சீக்கரம் ஜாயின் பண்றது நல்லது

5. புது நிறுவனத்து கிட்ட நான் சீக்கரம் ஜாயின் பண்ணலாமான்னு கேக்கலாம். அவங்க சரின்னு சொல்ல வாய்ப்பு ஜாஸ்தி.

6. முடிஞ்ச அளவுக்கு எந்த நெருக்கடியும் இல்லாம புது வேலைல சேர பாருங்க.

7. நீங்க கேக்கறது கெடைக்கும் போது அவுங்க கேக்கறதும் குடுக்கணும். அதனால சீக்கரம் சேர சொன்னா அதுக்கு முயற்சிகள் எடுங்க.

8. இப்போ இருக்கற நிறுவனம் சீக்கரம் போக விடமாட்டோம்னு சொன்னா முடிஞ்ச அளவுக்கு நீங்க பேசி பாக்கலாம். ஏன்னா மனிதர்கள் தான் நிறுவனம். எதுவும் இங்க கல்லுல செதுக்கப்பட்ட சட்டங்கள் இல்ல.

9. ஜாயின் பண்ற தேதி தெரிஞ்சுட்டா ஒரு நாள் முன்னாடியே தயார் ஆகிடுங்க. ஜாயின் பண்றதுக்கு முன்னத்த நாள் தேவையான விஷயங்கள எடுத்து வெக்கறது வேண்டாம்.

English summary
Steps to Negotiating a Start Date for a New Job

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia