ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 65 காலிப்பணியிடங்கள்.. வேகமாக விண்ணப்பிங்க!

Posted By:

சென்னை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வெல்த் மேமேஜ்மென்ட் சிறப்பு பதவிகளுக்கு 65 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்களுக்கான விரிவான தகவல்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 65 காலிப்பணியிடங்கள்.. வேகமாக விண்ணப்பிங்க!

வேலை - கஸ்டமர் ரிலேசன்சிப் எக்சிகியூட்டிவ்ஸ்

கல்வித் தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

மொத்த காலியிடங்கள் - 65

வேலை இடம் - இந்தியா முழுவதும்

கடைசிதேதி - 10 ஏப்ரல் 2017

விரிவான தகுதிகள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பினான்சியல் புராடக்ட்டிற்கு தேவையான ஆணவங்கள் குறித்த அறிவு மற்றும் அனுபவம் பெற்றவர்கள் மற்றும் நல்ல கம்யூனிகேசன் திறமை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

20 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை விபரம்

கஸ்டமர் ரிலேசன்சிப் எக்சிகியூட்டிவ் வேலையில் சேருபவர்கள் ரிலேசன்சிப் மேனேஜருடன் இணைந்து வேலை செய்யவேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து ஆணவங்களை பெற்று அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியது. அலுவலகத்தில் இருந்து ஆணவங்களை வாடிக்கையாளரிடம் கொண்டு கொடுப்பது மற்றும் வாடிக்கையாளருக்கு ஆணவங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை அளிப்பது ஆகும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

விண்ணப்பதாரர்கள் ஒன்று அல்லது இரண்டுக்கட்ட நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மெரிட் லிஸ்ட் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

ஜென்ரல் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600/- விண்ணப்பக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 100/- விண்ணப்பக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 10ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் . 24 மார்ச் 2017 முதல் 10 ஏப்ரல் 2017 வரை

அப்ளிகேசன் பிரிண்ட் எடுக்க கடைசி தேதி - 25 ஏப்ரல் 2017

ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான தேதி - 24 மார்ச் 2017 முதல் 10 ஏப்ரல் 2017 வரை

English summary
SBI Recruitment 2017 for Specialized positions for Wealth Management in various discipline. suitable candidates can apply this post .

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia