பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் முன் பள்ளியின் தரம் மற்றும் செயல்பாடு அறிதல் அவசியம்

Posted By:

பள்ளிகளின் தரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு கல்வி பயில அளவிட்டு அறிய   வேண்டியது  அவசியம் ஆகும் .

பள்ளிகளின் கடந்த ஐந்து வருட மாணவ தேர்ச்சி சதவீதம் ஒரே அளவில் இருந்தால் அந்த பள்ளியின் கல்வித்தரம் நல்ல நிலையில் இருப்பாதாக கணிக்கலாம் .
பள்ளிகளின் கட்டமைப்பு வகுப்பறை , கழிப்பிட வசதிகள் மற்றும் கணினி வசதிகள் , விளையாட்டுத்திடல், பேருந்து வசதி மற்றும் ஆசிரியர்களின் தரம் . மற்றும் மற்ற பள்ளியின் செயல்பாடு அனைத்தும் ரேங்கிங் அனைத்தும் மதிப்பிட வேண்டும் .

பள்ளி எதிர்கால இந்தியாவின் மனித ஆக்கம் ஆகும் அத்தகைய பள்ளியின்திறன் மற்றும்  கட்டமைப்புகள்


பள்ளியில் ஆசிரியர்களின் தரம் மற்றும் அவர்களின் கற்பித்தல் முறை நன்றாக ஆராய்ந்து அறிதல் நலம் . பள்ளியின் ஒழுங்கு மற்றும் பள்ளியின் கற்பித்தலுக்கடுத்து மாணவர்களின் தனித்திறமைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவற்றில் அப்பள்ளியின் போட்டித்தன்மை அறிந்து பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தால் குழந்தைகளின் தனித்திறமை வளர்ச்சி அபரிதமாக இருக்கும் .

பள்ளியில் மாணவர்களை நடத்தும் போக்கு அவர்களின் கற்றல் திறனுக்கேற்ற வகையில் கற்பித்தல் நன்மை பயக்கும் . அனைத்து மாணவர்களையும் கற்ப்பித்தலில் ஒருங்கிணைக்கும் திறன் பள்ளிகள் கொண்டிருக்க வேண்டும் .

கற்றல் , சுய சிந்தனை, ஒழுங்கு கட்டுப்பாடு, திறன் மேம்படுத்துதல் , நட்பு பழகுதல் ஒற்றுமை வளர்ப்பு போன்ற அடிப்படை தகுதிகளில் பள்ளிகள் பலம் பெற்றிருக்க வேண்டும் .

பள்ளி எதிர்கால இந்தியாவின் மனித ஆக்கம் ஆகும் அத்தகைய பள்ளியின்திறன் மற்றும்  கட்டமைப்புகள்


ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நல் இணைப்பும் பரஸ்பர போக்கு கொண்ட பள்ளிகள்தான் சமுதாயத்திற்கு அவசியம் ஆகும் . மாணவர்களை மதிப்பெண்களோடு செயமுறை கற்பித்தலிலும் அவர்களை சிறப்பாக செயல்பட வைத்து புத்தகங்களை தாண்டி பள்ளிகள் கற்பிக்க வேண்டும் .
உடற் பயிற்சி ஆசிரியர்கள் , கைவிணை கற்பிக்கும் ஆசிரியர்கள் , யோக போன்ற மற்ற கலைகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் இருக்க வேண்டியது அவசியம் . அவர்களின் கற்பித்தல் திறன் மாணவர்களை மேம்பட வைக்கும் அளவில் இருக்க வேண்டும் .

English summary
here article mentioned about standards of school

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia