டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெல்லும் யுக்தியில் கணிதம் வெற்றிக்கான ஜோக்கர்களில் ஒன்றாகும்

Posted By:

குரூப் 2 போட்டி தேர்வு எழுதுவோர்க்கு டிஎன்பிஎஸ்சி டிப்ஸ்
போட்டி தேர்வு எழுதும் மாணவர்களான நீங்கள் கணிதம் குறித்து அறிந்துள்ளிர்கள் அத்துடன் கணித பாடத்தில் அதிக முக்கியத்துவம் குடுக்கும் போது சுமார்ட் ஒர்க் வேலை செய்கின்றது என்று அர்த்தமாகும் . ஆம் கனிதத்தை முயற்சி செய்யுங்க வெற்றிக்கு அதுவே பக்கபலம் . கணிதம் தொடர்பான அனைத்து சார்ட்கட்டுகளையும் கற்றுகொள்ள வேண்டும் அது முக்கியமாகும். தேர்வு மையத்தில் நானும் பார்த்துள்ளேன் நன்கு தெரிந்த கணித கேள்விகளை விட்டு வரும் வழக்கம் கொண்டவர்கள் அதிகம், காரணம் நேரமேலாண்மை குறைவு மற்றும் கணிதம் தெரிந்தும் அவற்றை முறையாக பயிற்சி செய்யாதது ஆகும் .

கணிதத்தை எளிதாக கையாள கற்றுகொள்ளுங்கள் தேர்வில்  வெற்றி பெறுங்கள்

 

குரூப் 2ஏ தேர்வில் அந்த தவறை செய்ய வேண்டாம் நமது கையில் இன்னும் 20 நாட்கள் இருக்கின்றது அதனை மனதில் வைத்து கணிதம் வெல்ல நேரம் ஒதுக்குங்கள் அதுவே போதுமானது ஆகும் . மற்றும் தேர்வு மையங்களில் தேர்வுத்தாள் குறித்து அச்சம் கொள்ள அவசியமில்லை மேலும் கணித பகுதிக்கு செல்லும் போது விடைகள் சரியாக வரவில்லையெனில் குழப்பம் தேவையில்லை. மீண்டும் படபடப்பு இன்றி கேள்விளை அணுகவும் வெற்றி நிச்சயம் . டிஎன்பிஎஸ்சியில் நேரமேலாணமை எந்த கேள்வியை எங்கு அடித்து எவ்வளவு மதிபெண் பெறுவது என்ற யுக்தி போதுமானது ஆகும் .

அறிவியல்:

டிஎன்பிஎஸ்சி தேர்வை பொருத்தவரை அறிவியல் பாடப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அறிவியல் பாடத்தில் இருந்து 15 முதல் 20 கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. அறிவியல் பாடத்தில் விருப்பமில்லையெனில் குறைந்த பட்சம் விலங்கியல் பாடங்களை அதிலும் மனித உடல் குறித்து இதய செயல்பாடு, நரம்பு, மூளை, சிறுநீரகம், நோய் தொற்று, அரோக்கிய உணவுகள், அடிப்படை வைட்டமின்கள் அறிந்து கொள்ள வேண்டும். அடிப்படை உணவு வகைகள் மற்றும்  மூலிகைகள் தெரிந்திருக்க வேண்டும். இவற்றிலிருந்து நிச்சயமாக 5 முதல் பத்து கேள்விகள் கேட்கப்படும். அடுத்த பதிவில் நாம் அறிவியல் பாட பகுதியில் மற்ற பகுதிகளில் குறைந்த பட்சம் படிக்க வேண்டியவற்றை அறிவோம். பிளிஸ் அதுக்குள்ள விலங்கியல் பகுதிகளை படித்து வையுங்கள் வெற்றி பெறுங்கள்.

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வை வெல்ல எளிய பயிற்சிகள் அறிந்துகொள்வோம்

 டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொது அறிவை கடலை தாண்ட ஆயுத்தமாவோம்

 டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காக பயிற்சி கேள்விகள்

 

 

English summary
here article tell about easy way to crack tnpsc exams

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia