நீங்க வர்க் பண்ற இடத்துல விஷமத்தனம் நெறஞ்சிருக்குன்னு எப்படி கண்டுப்பிடிக்கலாம்...

Posted By: Gowtham Dhavamani

எது எப்பிடி இருந்தாலும், நம்ம வாழ்க்கைல ஒரு தரமாவது நமக்கு சரிப்படாத எடத்துல நாம வேலை செய்ய வேண்டுய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். அதனால அப்பிடி பட்ட இடங்களை எப்பிடி நாம தெரிஞ்சுக்கறதுன்னு உங்களுக்கு தெரியணும். இல்லைனா அதிகமான மனா அழுத்தத்துக்கு உண்டாகி, வேலை செய்யமுடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்படுவோம். இப்போதைக்கு நீங்க வேலை செய்யற இடம் எப்பிடி பட்டதுன்னு தெரிஞ்சுக்கு கீழ படிங்க

வேலை செய்யறவங்க எப்பிடி ?

பாசிட்டிவ் எண்ணங்கள் இல்லாம, எத பாத்தாலும் அதுல ஒரு நெகடிவ் கண்டுபுடிச்சு, தங்களோட வேலைய அவளோ ஆர்வமா பாக்காத மக்கள் உங்க அலுவலகத்துல இருக்காங்களா? செய்ய வேண்டிய வேலைகளை கூட அதிகமா இருக்குன்னு அடுத்தவங்க தலைல சுமத்தறாங்களா? அவுங்கள பத்தி மட்டும் யோசிச்சுட்டு, வேலை செய்யற நிறுவனத்த பத்தி கொஞ்சம் கூட கண்டுக்காத ஒரு போக்கு அவுங்ககிட்ட இருக்கா? இதனால அவுங்க கூட வேலை செய்யறது மட்டுமில்ல, உங்களுக்கு வேலை மேல ஆர்வம் இல்லாம போக வாய்ப்பு இருக்கு.

உங்க வேலைதான் உங்க வாழ்க்கையா ?

வேலைக்கும் வாழ்க்கைக்கும் சரி சமமா நேரம் ஒதுக்கணும். அந்த சமநிலை கிடைக்கறது ரொம்ப சிரமம். அது மாதிரி ஒதுக்க முடியாம, வேலை மட்டும் தான் உங்க வாழ்க்கைனா, உங்க வாழ்க்கை ரொம்ப சீக்கிரமா மோசமாகும். அதுல இருந்து நீங்க மீண்டு வரது முடியாத காரியம் ஆகிடும்.

வேலைக்கு போறதுக்கே புடிக்கலையா?

சில நாட்கள் எல்லாருக்கும் இந்த மாதிரி இருந்துருக்கும். வேலைக்கு போகணுமா இன்னைக்குன்னு யோசிப்பாங்க. ஆனா எல்லா நாளும் அதே மாதிரி இருந்தா? (எப்படியாவது வித்தவுட் ஓகே. எப்போமே வித்தவுட் எப்பிடி?) அப்பிடி நீங்க உணர்ந்தா ஏதோ ஒண்ணு சரி இல்லைன்னு நீங்க புரிஞ்சுக்கணும். அந்த மாதிரி நேரங்கள்ல நமக்கு ஏதோ மனப்பிராந்தினு அசட்டையா இருக்க வேண்டாம் ஏன்னா நீங்க இருக்கற சூழல் சரி இல்லைன்னு சொல்ற மிகப்பெரிய அறிகுறி இது

இங்க என்ன சொல்லுது ? எஸ்கேப் எஸ்கேப்பா

வேலைக்கு சேந்து கொஞ்ச நாளைக்கு புது வேலை புது இடம் புது நிறுவனம்னு பழக நேரம் எடுப்பீங்க. ஆனா ஒரு மாசம் ஆனதுக்கு அப்பறமும் உங்களால அங்க மனசு வந்து வேலை பாக்க முடியலைன்னா? என்னமோ தப்பா இருக்கேன்னு உங்க உள்ள மனசு அலாரம் அடிக்குதா? கூட வேலை செய்யறவங்க மேல வேலை செய்யறவங்க இப்பிடி எல்லா எடத்துலையும் ஒரு தப்பு தெரியுதா? அப்போ அடுத்து என்ன செய்யணும்னு உங்க மனசு சொல்லுதோ அத செய்யுங்க. எஸ்கேப்னு சொன்னா எஸ்கேப் ஆகிடுங்க. அதான் நல்லது.

உங்க பாஸு வளர விடாம பாத்துக்கறாரா?

நிறுவனமும் நல்லா இருக்கனும். நாமளும் நல்லா இருக்கனும். அதான் சரியான வளர்ச்சி. ஏதோ ஒன்னு மட்டும் தான் வளருதுன்னா அது தப்பு. பல நேரங்கள்ல நாம வளராம நிறுவனம் வளரும். அதுக்கு சில நேரங்கள்ல நம்ம பாஸ் காரணமா இருப்பார். வளர விட்டா நம்மள ஏறி மிதிப்பாங்கன்ற நல்ல எண்ணம் அவுங்களுக்கு இருக்கும். உங்க திறமைகளை வெளிப்படுத்தற எந்த சூழலும் உங்களுக்கு அமையாது. உங்களால ஒரு எடத்துல கூட நல்ல பேர் வாங்க முடியாது. உங்க அணில உங்கள தவிர்த்து வேற யாருக்கு வேணாலும் பாராட்டுகள் கிடைக்கும். அப்போ நீங்க சரியா ஆப்பு மேலையே வேலை செய்யறீங்கன்னு அர்த்தம்.

மனசு சொல்றத கேளுங்க ப்ரோ :

சில நேரங்கள்ல நம்ம மூளை அடிவாங்கி அடிவாங்கி அழுத்தத்துல அமுங்கி போய்டும். என்னடா வாழ்க்கைனு யோசிக்கறத நிப்பாட்டிடும். அந்த மாதிரி சமயத்துல உங்க மனசு என்ன சொல்லுதோ அத கேளுங்க. சரியா இருக்கும். முன்னாடியே சொன்னது தான். எஸ்கேப் ஆகிறுன்னு சொன்னா ஆகிடுங்க. வேற வழில சூழ்நிலைய சமாளிக்க சொன்ன முயற்சி பண்ணுங்க. என்ன சொல்லுதோ அத காது குடுத்து கேளுங்க.

சந்தோஷம் போய்டுச்சு வெறும் தோஷம் தான் இருக்கா?

எப்போமே சோர்வா, எப்போமே நிம்மதி இல்லாம, மன அழுத்தம் மலை ,மாதிரி இருக்கா அப்போ நீங்க இருக்கறது அணுகுண்டு மேல. அது வெடிக்கலைனாலும் உங்களுக்கு ஆபத்து ஜாஸ்தி தான். உங்களால உங்க வேலைல கவனம் செலுத்த முடியாது. புதுசா யோசிக்க முடியாது. இப்படியே போனா எங்க போகும் நம்ம வேலை? எப்பிடி இருக்கும் எதிர்காலம்னு கேள்விகள் மனசுல வந்தா, சீக்கிரமா நடைய கட்டறது நல்லதுன்னு அர்த்தம்.

உங்களுக்கு நெருக்கமானவங்க உங்க கிட்ட மாற்றங்கள் இருக்குனு சொன்னா ....

சொன்ன புரிஞ்சுக்கணும். கட்டுரை முடியற வரைக்கும் உங்க மனசுல உங்க அலுவலகத்த பத்தி ஒப்பிட்டு பாத்துட்டே வந்துருப்பீங்க. இப்போ கடைசி வாய்ப்பு. உங்களுக்கு நெருக்கமானவங்க என்ன சொல்றாங்க? இந்த வேலைக்கு போனதுக்கு அப்பறம் நீ நீயா இல்லை. எரிஞ்சு எரிஞ்சு விழற. எப்ப பாத்தாலும் மூஞ்சி உம்முனு இருக்கு. சதா சர்வ காலமும் போன் பேசற. உடம்பு குண்டாகுது. தூங்கறது இல்ல. யோசிச்சுட்டே இருக்க. இப்பிடி எது இருந்தாலும், அடுத்து நிறுவனத்துக்கு ரெஸ்யூம் அனுப்பறது நலம்.

மறக்காம உங்க கருத்துகள் பதிவு செய்ய கீழ இடம் இருக்கு, அதுல கமெண்டுங்க.

 

English summary
Signs That Reveal That You Are In a Toxic Workplace!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia