ஸ்டைலா! கெத்தா சம்பாரிக்க உதவும் வித்தியாசமான இன்ஜினீயரிங் படிப்பு!

Posted By: Kani

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் என்று வழக்கமான பொறியியல் படிப்புகளை படித்து விட்டு வேலையில்லை என சொல்லிவரும் இளைய சமுதாயம் இதைத் தவிர்த்து, சில வித்தியாசமான அனுபவங்களை வழங்கும், இன்ஜினீயரிங் படிப்புகளை தேர்வு செய்ய தயங்குவது ஏன்? இந்த வகையான படிப்புகள் குறித்து அதிகப்படியான மாணவர்களுக்கு தெரிவது இல்லை என்பதும் ஒரு காரணம். அந்த வகையில் இன்று மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பற்றி பார்க்கலாம்...

பணி என்ன?

பூமிக்கடியில் கிடைக்கும் தாதுக்களை எப்படித் தோண்டி எடுப்பது, அதை சுத்திகரிக்கும் முறை, பதப்படுத்தும் விதம், உபயோகிக்க ஏற்றபடி மாற்றும் திறன் என்று அனைத்து வகையான அறிவையும் இப்படிப்பின் மூலம் பெற முடியும்.

உதாரணமாக, இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் முறையைச் சொல்லலாம். எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சையின்போது பிளேட் வைப்பார்கள். இதுபோன்ற பிளேட்டுக்கு எந்த மாதிரியான மெட்டீரியலை உபயோகிப்பது என்பது பற்றியெல்லாம் இப்படிப்பில் கற்றுக்கொள்ள முடியும்.

பூமிக்கடியில் கிடைக்கும் பொருள்கள், செயல்கள், நிகழ்வுகள் ஆகியவற்றைக் கண்டறிதல் - வகைப்படுத்துதல், மதிப்பிடுதல், வேறுபாடுகள் அல்லது ஒற்றுமைகள் ஆகியவற்றைக் கண்டறிதல், சூழ்நிலைகளில் அல்லது நிகழ்வுகளில் மாற்றங்களைக் கண்டறிதல்.

கண்டு பிடிப்புகள் குறித்து மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குதல், தொழில்நுட்ப அமைப்புகள் அல்லது கல்விநிலையங்களில் இதன் செயல்முறை தொடர்பான தலைப்புகளில் வழிகாட்டல், ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை செய்ய முடியும்.

 

தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படும் கல்லூரிகளின் பட்டியல்:

1. அரசு பொறியியல் கல்லூரி- சேலம் கருப்பூர்
2. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி-கோவை
3. கிண்டி பொறியியல் கல்லூரி- சென்னை
4. தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஐடி)- திருச்சிராப்பள்ளி
5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி)- சென்னை
6. வேல் டெக் ரங்கராஜன் டி.சுகுந்தலா ஆர் அண்ட் டி இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ( டீம்டு யுனிவர்சிட்டி), ஆவடி

பாடப் பிரிவுகள்:

4 வருட படிப்பாக வழங்கப்படும் இது தனிமங்களை பற்றி ஆழ்ந்த அறிவினை பெற வழிவகை செய்கிறது.

நம்மை முழுமையாக அர்ப்பணித்தால் மட்டுமே இது சாத்தியம். இப்படிப்பை படித்தால் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

பொதுவாக இந்தவகையான படிப்புகள் மூன்று வகையான உட் பிரிவுகளை கருத்தில் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.

 

பிஸிகல் மெட்டலர்ஜி:

பல்வேறு வகையான உலோகங்கள் காலநிலைகேற்ப எவ்வாறு மாற்றமடைகின்றன போன்ற தகவல்களை பெறுவது. மேற்குறிப்பிட்ட உலோகங்கள் காலமாற்றத்தில் எவ்வாறு மாற்றமடைகின்றன. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இந்த துறையில் விசேஷம்.

கெமிக்கல் மெட்டலர்ஜி:

உலோகங்கள் ரசாயன பண்புகள், ரசாயன மாற்றங்கள், செயல் முறைகளின் பயன்பாட்டை உள்ளடக்கியது.

என்ஜினிரிங் அண்ட் ப்ராசஸ் மெட்டலர்ஜி:

உலோகங்களின் ஆய்வு, வடிவமைத்தல், மற்றும் இது குறித்த விழிப்புணர்வு ஆகியவை இதில் அடங்கும்.

வேலை வாய்ப்பு:

ஆராய்ச்சி, வடிவமைப்பு, உற்பத்தி, உற்பத்தி மேலாண்மை மற்றும் தரக் கட்டுப்பாடு என பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, உலோகத்தை ஆய்வுகளை மேற்கொள்ளலாம், கம்யூட்டர் சாப்ட்வேர்களை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யலாம்.

அரசு நிறுவனங்களில் புதிய உலோகங்களில் ஆயுதங்கள் தயாரிப்பது, தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த சோதனை மேற்கொள்ளுதல் போன்ற பணி வாய்ப்புகள் பெறலாம்.

சுரங்கத் துறை, விமான போக்குவரத்து மற்றும் கார் உற்பத்தி உட்பட உலோக அடிப்படையிலான தொழில்களில் மெட்டலர்ஜிஸ்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

 

பணிவாய்ப்புக்கான நிறுவனங்கள்:

1. ஜின்டால் ஸ்டீல்
2. நால்கோ
3. டாடா ஸ்டீல்
4. செயில்
5. இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்
6. ஹெச்சிஎல்
7. லார்சன் குழுமம்
8. ஜான் டீரெ
9. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்
10. இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ, மற்றும் ரயில்வே ஆகிய அரசாங்க நிறுவனத்திலும் வேலை வாய்ப்பு பெறலாம்.

சம்பளம்:

ஆரம்பத்தில் ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.38 வரை சம்பாதிக்கலாம். அனுபவத்தின் அடைப்படையில் மாதம் லட்சக்கணக்கில் வருமானம் பெறலாம்.

வெளிநாடுகளில் பணி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும்.

English summary
scope of metallurgical engineering in India

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia