பள்ளிகள் திறந்தாச்சு அட்மிசன் சேர்க்கனுமா, வேற ஸூகூலுக்கு பிள்ளைகளை இடமாற்ற தகவல்கள்

Posted By:

மனமே எல்லாம் , எதை நீ எண்ணுகிறாயோ அதுவாய் ஆகீறாய்

பள்ளிகள் திறந்தாச்சு மாணவர்கள் புதிதாக வகுப்பறை மாற்றம் , புதிதாக மாணவர்கள் பள்ளியில் சேர்ப்புகள் வேறு பள்ளிக்கு இடமாறல் என பள்ளிகள் முழுவதும் பெற்றோர்கள் மாணவர்களின் கூட்டமாக இருக்கும் . இதனை குறித்து ஒன் இந்தியா உங்களுக்கு முழுமையான ஆலோசனைகள் வழங்குவதுடன் ஸ்கூலிங் சீசன் குறித்து உங்களுக்காக தொகுத்து வழங்குகின்றன .

பள்ளிகள் திறப்பு புது கல்வியாண்டு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை


உங்கள் குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்க போகிறிர்களா , என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பதை ஒன் இந்தியா தொகுத்து வழங்கும் . பிரைமரி பள்ளி , தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு என்று பிரிவுகளாக தொகுத்து வழங்கும் ஒன் இந்தியா .

பொதுவான வழிமுறகள் :

உங்கள் பிள்ளைகள் எந்த வயதானாலும் எந்த வகுப்பிற்கு புதிதாக சேர்ந்தாலும் பெற்றோர்கள் முதலில் உங்கள் பிள்ளைகளின் சரியான பிறப்பு சான்றிதல்கள் வைத்திருக்க வேண்டும் . பள்ளியில் அந்த தேதியினை தெளிவுபட அறிவியுங்கள் மற்றும் உங்க்ள் பிள்ளைகளின் பெயர் தமிழ் ஆங்கிலத்தில் சரியாக வரும்படி குழப்பங்களுக்கிடமில்லாமல் தெளிவுப்பட தெரிவிக்கவும் . பிறப்பு சான்றிதல் , சாதிச்சான்றிதல் , ரேசன் கார்டு , வங்கி என அனைத்திலும் சரியாக விவரங்களுடன் பெயர் இருக்க வேண்டும் .

சான்றிதல்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதல், இருப்பிட சான்றிதல், வருமான சான்றிதல் மற்றும் ரேசன் கார்டு மற்றும் சாதி சான்றிதல்கள் சரியாக முறையாக நீங்கள் வசிக்கும் சரியான பகுதிக்கேற்ற அரசு அலுவலர்களிடம் முறைப்படி கையெழுத்து வாங்கி சரியாக பாதுகாக்கவும் .

பள்ளியில் சேர்க்கை :

குழந்தைகளை பள்ளி சேர்க்கையின் போது பள்ளியின் விதிமுறைகள், பள்ளியின் கட்டணம் , பிள்ளைகளுக்கான பேருந்து, பள்ளி தொடங்கும் நேரம், பள்ளி முடியும் நேரம் மற்றும் பள்ளியின் அட்டவனைகள் பெற்றோர் கூட்டம் அனைத்தும் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். பள்ளியுடன் நல்ல இணைப்பில் இருக்க வேண்டும். பள்ளியில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறம் அறிந்திருக்க வேண்டும். பள்ளியில் மற்ற வசதிகள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா, பள்ளிக்கான அங்கிகாரம் முதலியவற்றை நன்கு ஆராய வேண்டும் . அடுத்தடுத்து மாணவ சேர்கை பள்ளிகள் பற்றி அறிவோம் .

மனமே எல்லாம், எதை நீ எண்ணுகிறாயோ அதுவாய் ஆகீறாய் ஆனால் எண்ணங்களில் தெளிவு வேண்டும் ,,,

English summary
here article mentioned about school open and admission guidance to parents .
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia