அழகு மிளிரும் ராஷ்டிராபதிபவன் மற்றும் அதன் வரலாறும்

By Sobana

ராஷ்டிராப்தி பவன் நாம் இன்றும் காணும் அழகுமிகு ராஷ்டிரபதிபவன் பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் காலத்தில் வைசிராய் தங்குமிடமாக பயன்படுத்த கடட்ப்பட்டது. இன்று உலக அளவில் மிகப்பெரிய மக்களாட்சியின் ஜனாதிபதியால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ராஷ்டிராபதிபவன் வரலாறு மற்றும் கட்டிட்டக்கலை

ராஷ்டிராபதிபவன் 1929 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்த மிகப்பெரிய மாளிகையாகும். மொத்தம் 340 அறைகளையும் 2.5 கிமி காரிடர்களை தன்னகத்தே கொண்ட பில்டிங் அடுத்து அதன் மொத்த பரப்பளவு மட்டும் 190 ஏக்கர்க்கு விரிந்துள்ளது. 4 புளோர்களையும் கொண்டது.

1000 கணக்கான கார்பெண்டர்கள், தொழிலாளிகளை கொண்டு கட்டப்பட்டதுதான்

ராஷ்டிராபதிபவன் ஆகும். ராஷ்டிராபதிபவன் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க வலிமையை பறைசாற்றும்விதமாக பிரிட்டிசாரால் கட்டப்பட்டது ஆகும்.

இன்று இந்திய மக்களாட்சியின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இயற்கை மற்றும் கட்டிடக்கலை மாற்றத்தினை கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டது ராஷ்டிராபதிபவன் ஆகும்.

ராஷ்டிராபதிபவன் வரலாறு :

பிரிட்டிஸ் வைசிராயின் இல்லமாக ராஷ்டிராபதிபவன் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதல் முதலில் ராஷ்டிராபதிபவன் கட்டிமுடிக்கப்பட்ட பின்பு இது வைசிராயின் வீடு என அழைக்கப்பட்டு வந்தது. 1947 இல் மொண்ட்பேட்டன் கடைசி வைசிராய் வரை இந்த மாளிகையை பிரிட்டிஷார் பயன்படுத்தி வந்தனர். அதன்பின் அந்த மாளிகையை நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரசுதலைவர் மாளிகையாக இந்தியா பயன்படுத்திவருகின்றது.

ராஜாஜிக்கு பிடிக்காத வைசிராய் அறை:

1947இல் லார்டு மௌண்ட்பேட்டன் முன்னிலையில் முதல் முதலாக நேரு பிரதமராக உறுதிமொழி எடுத்து கொண்டது ராஷ்டிராபதிபவன் மாளிகையின் மத்திய பகுதியாகும். 1948, ஜூன் 21இல் முதல் இந்திய கவர்னராக ராஜாஜி பதிவியேற்றதும் இந்த மாளிகையில்தான். ராஜாஜிக்கு வைசிராய்கள் தங்கும் அறை பிடிக்காததால் விருந்தினர் அறை ராஜாஜிக்கு ஒதுக்கப்பட்டது அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து ராஜாஜி பயன்படுத்திய ஒரிஜினல் விருந்தினர் அறையையே தங்கள் அறைகளாக அடுத்தடுத்து இருந்துவந்தகுடியரசு தலைவர்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.


முதல் குடியரசு தலைவராக ராஜேந்திர பிரசாத் 1950இல் இங்குதான் தனது அலுவலகத்தில் வைத்திருந்தார். புகழ்பெற்ற காந்தி இர்வின் ஒப்பந்தம் கூட இங்கு நடைபெற்றது.

 

 

விருந்தினர் அறை :

ராஷ்டிராபதிபவனில் வீரதீர சாதனைகள் புரிபவர்களுக்கு விருது வழங்குதல் அத்துடன் பதிவியேற்பு உறுதிமொழிகள் அனைத்தும் நடைபெறுவது வழக்கமாகும். இந்தியாவிற்கு வருகை புரியும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இங்குதான் தங்குமிடம் ஒதுக்கப்படும். குடியரசுதின விழாவில் பங்கேற்க வரும் சிறப்பு விருந்தினர்கள் ராஷ்டிராபதிபவன் மாளிகையில்தான் தங்க வேண்டும்.

அசோகா மற்றும் தர்பார் ஹால்:

அசோக ஹால், தர்பார் ஹால், பான்காட் ஹால் போன்ற அறைகள் மிக முக்கியமான பெரிய அறைகளை கொண்டு சிறந்து விளங்கியது ராஷ்டிராபதிபவன் ஆகும். தர்பார் ஹாலில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். அசோக ஹாலில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் உறுதிமொழி நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும். மாநில நிகழ்வுகளும் நடக்கும்.
அசோகா ஹாலில் உள்ள பெயிண்டிங்குகள் மிகுந்த கவனத்தோடு அழகாக பெர்சியன் மாடலில் அமைந்த ஒன்றாகும். வண்ண நிறங்களால் கூரைகள் அழங்கரிக்கப்பட்டு அடர் நிறங்களால் அழகு மிளிரும்.
தர்பார் ஹாலில்தான் 1947, ஆக்ஸ்ட் ,15 இந்தியாவின் சுதந்திரத்தை மௌண்ட்பேட்டன் அறிவித்தார்.

தர்பார் ஹாலில் இரண்டு பிரிவுகள் உண்டு நார்த் பிளாக் மற்றும் சௌத் பிளாக் என அழைக்கப்படும்.

 

பான்ஹாட் ஹால்:

பான்காட் ஹாலில் மாநிலத்தை சேர்ந்த விழாக்கள் மாநிலம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படும். அதனை ஸ்டேச் டைனிங்ஹால் என அழைப்பார்கள் இங்கு சுமார் 104 பேர் அமர முடியும். இங்குள்ள சுவற்றில் அனைத்து குடியரசு தலைவர்களின் போட்டோக்களும் இருக்கும்.

முக்கிய நிகழ்வுகள் மற்றும் உறுதிமொழி நிகழ்வுகள் அனைத்தும் நடைபெறும்.

 

கட்டிககலை :

ராஷ்டிராபதிபவனில் கட்டிடக்கலையில் மிகமுக்கியத்துவம் வாய்ந்தவராக எட்வர்டு லுடியன்ஸ் நவீன டெல்லியை வடிவமைத்தவர் ஆவார். அவரே குறைந்த செலவில் 1.45 கோடி செலவில் மாளிகைப் பணியை முடித்தனர். தர்பார் ஹாலில் வலது ஒரத்தின் வெளியே இவரது மார்பளவு சிலையிருக்கும்.

1914இல் கட்ட தொடங்கப்படட் ராஷ்டிராபதிபவன் முதன் முதலாக பன்பாட்டுக்கு 1931இல் தொடங்கப்பட்டது. வைசிராய்க்கான தங்குமிடமாக 1914இல் முதன்முதலில் கட்ட தொடங்கினார்கள்.

 

 

நாட்டின் பாதுகாப்புமிகுந்த இடம்:

நாட்டின் உயர்பாதுகாப்புகள் மிகுந்த இடங்களில் ஒன்றாக ராஷ்டிராபதிபவன் சிறந்து விளங்குகின்றது. அதன் அழகை சாலையோரத்தில் நின்று ரசித்தாலே ரம்மியமாக இருக்கும்.

ராஷ்டிராபதிபவனில் மியூசியம் :

முதல் நுழைவு சிறிய அறையில் அறிவியல் சார்ந்த கண்டுப்பிடிப்புகளை கொண்டுள்ள அறையாகும்.

ராசிடிராபதிபவனில் சிறிய நூலக அறையும் உள்ளது. குடியரசு தலைவர்கள்
நூலகங்களில் புத்தகங்கள் படிக்க உருவாக்கப்படட்து. முகல் கார்டன் வண்ணமயமானது பொது மக்களின் பார்வைக்கு திறந்திவிடபடட் ஒன்றாகும். முகல் கார்டனில் நிறைய வெரைட்டிகளில் கலர்புல்லாக அமைந்து காட்சிதரும் இத்தகைய மாளிகை என்றும் பெருமை வாய்ந்த ஒன்ராக இருக்கும் என்பது உன்மையாகும். 2012 முதல் லுதியன் கேட்டுகள் பொதுமக்களுக்காக திறந்திவிடப்பட்டுள்ளது.

 

யூபிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளில் கேட்க வாய்ப்பு இருக்ககூடிய கேள்விகள்

நாட்டின் முக்கியமான இந்த சிறப்பு வாய்ந்த குடியரசு மாளிகையை குறித்து கட்டிடக்கலையிம் சிறப்பு குறித்து கேள்விகள் யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சியில் கொள்குறி வகையில் இரண்டு மதிபெண்களுக்கும் அத்துடன் யூபிஎஸ்சியில் பிரிட்டிஷ் ஆர்ட் அண்டு கல்ச்சரில் 500 வார்த்தைகள் அடங்கிய விடைகளை டிஸ்கிரிப்சன் பகுதிகளிலும் கேள்விகள் கேட்கலாம்.

சில கேள்விகள் :

1 எந்த ஆண்டு குடியரசு தலைவர் மாளிகை கட்டப்பட்டது?

2 குடியரசு தலைவர் மாளிகை குறித்து குறிப்பு எழுதுக?

3 ராஜாஜி முதன் முதலாக எங்கு தன் பதவியேற்றுக்கொண்டார்?

4 இந்தியாவுக்கான சுதந்திர அறிவிப்பை மௌண்ட் பேட்டன் எங்கு அறிவித்தார்.

5 ராஷ்டிராபதி பவனின் கட்டிடக்கலை வல்லுநர் பெயர் என்ன?

6 பிரிட்டிசார் ராஷ்டிராபதி பவனை எதற்கு பயன்படுத்தினார்கள்?

7 இந்தியா எதற்கு ராஷ்டிராபதி பவனை பயன்படுத்துகின்றது?

8 ராஷ்டிராபதிபவன் பற்றி எழுதுக?

9 ராஷ்டிராபதி மாளிகையின் சிறப்பு என்ன?

10 இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு இடமாக ராஷ்டிராபதிபவன் அமைந்துள்ளது ஏன்?

இவ்வாறு பலகேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது. போட்டி தேர்வுகள் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்ற லட்சியம் கொண்டவர்கள் இவ்வாறு நாட்டின் முக்கிய இடங்கள் நிகழ்வுகள் பற்றி படிக்க வேண்டியது அவசியம் ஆகும்

 

 

நாட்டின் முக்கிய விழாக்களான குடியரசுதினம் மற்றும் சுதந்திரதின கொண்டாட்டங்களில் வண்ண ஒளி விளக்குகளால் அழங்கரிக்கப்படுகின்றன. 

சார்ந்த பதிவுகள்:

தேசிய பெண் குழந்தைகள் தினமும் அவர்களுக்கான வளமும்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    Article tells about Rashtrapati bhavan History And Architecture

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more