லட்சங்களில் சம்பளம் தரும் ரயில்வே துறை படிப்புகள்!

ரயில்வே துறையை பொறுத்தமட்டில் டிகிரி முடித்தவர்களில் இருந்து 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் வரை 'குரூப் ஏ' பணியில் தொடங்கி 'குரூப் பி' சி, டி என பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

By Kani

170 ஆண்டுகள் பழைகொண்ட இந்தியன் ரயில்வே 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 1.308 மில்லியன் ஊழியர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது

இந்தியா முழுவதும் பயணிகள் சேவை, பார்சல், பார்கிங், சுற்றுலா,மருத்துவம் என பல்வேறு வகையான சிறப்பம்சங்களுடன் பொதுமக்களுக்கு சேவையாற்றி வரும் நிலையில் 2018 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.1.874 டிரில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.

ரயில்வே துறையை பொறுத்தமட்டில் டிகிரி முடித்தவர்களில் இருந்து 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் வரை 'குரூப் ஏ' பணியில் தொடங்கி 'குரூப் பி' சி, டி என பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

இந்திய ரயில்வே பணிகளை பொறுத்தமட்டில் குரூப் ஏ மற்றும் குரூப் பி கெஸடெட் அதிகாரி நிலையானது முதல்நிலை பணியாக கருதப்படுகிறது. முதல் நிலை அதிகாரிகள் ஆண்டு தோறும் நடத்தப்படும் யுபிஎஸ்சி., தேர்வு மூலமாக நியமிக்கப்படுகிறார்கள்.

ரயில்வே டிராபிக் சர்வீஸ் மற்றும் இந்திய ரயில்வே அக்கவுண்ட்ஸ் சர்விஸ் இந்தப்பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வு 'இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு' என்று அழைக்கப்படுகிறது.

இந்த தேர்வில் நீங்கள் பெறும் மதிப் பெண்ணின் அடிப்படையில் தரவரிசை வழங்கப்படும். உங்கள் தர வரிசைப்படி உங்களின் விருப்பம் கேட்கப்படும்.

உங்களுக்கு எந்தப் பணி விருப்பமோ (அந்தப் பணியில் காலியிடங்கள் இருந்தால்) அந்தப் பணியைத் தேர்ந்தெடுக்கலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பது மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட பட்டப் படிப்பு அல்லது அதற்கு நிகரான கல்வித் தகுதி இருக்க வேண்டும்.

குரூப் சி பணியானது டெக்னிகல், நான் டெக்னிகல் ஊழியர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் கலெக்டர், கார்டு, ஓட்டுநர், ஒர்க்சாப் சார்ஜ்மேன், போர்மென் போன்ற பணிகள் இதில் அடங்கும். பொறியியல், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நான் டெக்னிகல் பணிகளுக்கு 10ம் வகுப்பு தகுதியாக கொள்ளப்படுகிறது. சில பணிகளுக்கு ஐடிஐ தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கான ஊழியர்கள் ஆர்ஆர்பி., எனப்படும் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதை தவிர்த்து அசிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டர், டிரெய்னி கார்டு, கூட்ஸ் கார்டு, என்கொயரி கம் ரிசர்வேஷன் கிளார்க், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட் போன்ற பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப்பணிகளுக்கு 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது.

ரயில்வே தேர்வில் வெற்றி பெற 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை பயிற்சி செய்தால் எளிதாக வெற்றிபெறலாம். பொது அறிவு, கணிதம், ரீசனிங், ஆங்கிலம் ஆகியவற்றில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

டெக்னிகல் பணிகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்டகப்படும். ரயில்வே துறையில் பணி வாய்ப்பு என்பது குறிப்பிட்ட பிரிவுகளில் ஏற்படும் காலியிடங்களை பொறுத்து நிர்யிணயிக்கப்படுகிறது.

ரயில்வே துறை தொடர்பான படிப்புகள்:

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மெண்ட் (IRITM)-லக்னோஇங்கு மேலாண்மை தொடர்பான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய லிங்க்
இன்ஸ்டிடியூட் ஆப் பெர்மனேன்ட் வே என்ஜினியர்- புணேஇங்கு டிப்ளமோ படிப்புகள் (ஐ.டி) பயிற்றுவிக்கப்படுகின்றன.இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய லிங்க்
இந்தியன் ரயில்வே மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் இன்ஸ்டிடியூட் (IRIMEE)-ஜமால்பூர் (பட்னா)இங்கு மெக்கானிக்கல் மற்றும் எம் & சி படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய லிங்க்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட்-புது தில்லிரயில் போக்குவரத்து மற்றும் மேலாண்மை, போக்குவரத்து பொருளாதாரம், போக்குவரத்து மேலாண்மை, சரக்கு போக்குவரத்து ஆகியவை சம்பந்தமான படிப்புகளை இக்கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது.இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய லிங்க்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் (IRILMM)-புது தில்லி இங்கு டிப்ளமோ படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய லிங்க்

இக்கல்வி நிறுவனத்தில் படித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும் ரயில்வே துறை வேலை வாய்ப்புகளில் அது கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நுழைவு தேர்வுதேர்வு தகுதி வயது
இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆப் என்ஜினிரியர்ஸ்(IRSE)இந்தியன் என்ஜினிரியரிங் சர்வீஸ்பொறியியல் பட்டம்21 முதல் 30 வரை
இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆப் எலெக்ட்ரிகல் என்ஜினிரியர்(IREE)ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுபொறியியல் பட்டம்21 முதல் 30 வரை
இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆப் மெக்கானிக்கல் என்ஜினிரியர் (IRSME)ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுபொறியியல் பட்டம்21 முதல் 30 வரை
இந்தியன் ரயில்வே சர்வீஸ் ஆப் சிக்னல் என்ஜினிரியர் (IRSEE)ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுபொறியியல் பட்டம்21 முதல் 30 வரை
இந்தியன் ரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ் (IRSS)ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வுபொறியியல் பட்டம்21 முதல் 30 வரை
இந்தியன் ரயில்வே டிராபிக் சரவீஸ்(IRTS)சிவில் சர்வீஸ் தேர்வுபட்டம்21 முதல் 30 வரை
ரயில்வே பாதுகாப்பு படைசிவில் சேவைகள் தேர்வுபட்டம்21 முதல் 30 வரை
இந்தியன் ரயில்வே பெர்சனல் சர்வீஸ்(IRPS)
சிவில் சேவைகள் தேர்வுபட்டம்21 முதல் 30 வரை
இந்தியன் ரயில்வே அக்கவுண்ட் சர்வீஸ்(IRAS)
சிவில் சேவைகள் தேர்வு பட்டம்21 முதல் 30 வரை
இந்தியன் ரயில்வே மெடிகல் சர்வீஸ் (IRMS)ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு
மருத்துவ பட்டம்21 முதல் 30 வரை
கமர்ஷியல் அப்ரண்டிஸ் அஸிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டர், டிராஃபிக் அப்ரண்டிஸ், கிளார்க்நான் டெக்னிகல் கேடார் தேர்வுடிகிரி, கிரேடு பி, சி பணி18 முதல் 27 வரை
ரயில்வே ரெக்யூர்மெண்ட் சர்வீஸ்நான் டெக்னிகல் கேடார் தேர்வுபொறியியல் பட்டம்18 முதல் 27 வரை
துணை ஆய்வாளர்கள் / கான்ஸ்டபிள்ஸ்ஆர்பிஎப் துணை ஆய்வாளர்கள் / கான்ஸ்டபிள்ஸ் தேர்வுஇடைநிலை / 10 + 2 அறிவியல் பின்னணி20-25 வரை துணை ஆய்வாளர்கள்

18-25 வரை கான்ஸ்டபிள்ஸ்

உதவியாளர், கிளார்க் (LDC), டிரைவர், கான்ஸ்டபிள், கிராம நிர்வாக அதிகாரி (VAO), ஸ்டெனோகிராபர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஜூனியர் அசிஸ்டண்ட்ஸ், பீயுன்
ரயில்வே ரெக்யூர்மெண்ட் தேர்வுஇடைநிலை / 10 + 2 18-25 ஆண்டுகள்

ரயில்வே துறை தொடர்பான ஓராண்டு டிப்ளமோ:

ரயில்வே துறை தொடர்பான ஓராண்டு டிப்ளமோ:

ரயில்வே துறை தொடர்பான ஓராண்டு டிப்ளமோ படிப்பு குறித்து இந்த வலைதளத்தில் தேவையான அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

ஊதியம்:

ஊதியம்:

ரயில்வே துறையை பொறுத்தமட்டில் கல்வி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.

ரயில்வே ஊழியர்களில் நான்கு குழுக்களாக D, C, B, A என பிரிக்கப்பட்டு சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது.

குரூப் டி ஊழியர்களான கிளீனர்கள், காவலர்கள் மாதம் ரூ.7000 முதல் ஊதியம் பெறுகின்றனர்.

குரூப் C ஊழியர்களுக்கு ரூ.7730 - 18150 வரை வழங்கப்படுகிறது. குரூப் பி அதிகாரிகளுக்கு (தொழில்நுட்ப வல்லுநர்கள், டிக்கெட் கலெக்டர்கள், ஜூனியர் பொறியாளர்கள்), ஊதியங்கள் மாதத்திற்கு ரூ.21000-30000 வரையிலும், குரூப் எ அதிகாரிகள் (IRAS, IRPS, IRSSE) சம்பள அளவு வீதம் மாதம் ரூ.46,000- 53000 வரை வழங்கப்படுகிறது.

 

 

வேலை வாய்ப்பு:

வேலை வாய்ப்பு:

இந்தியா முழுவதும் வேலை செய்யலாம், இது தவிர சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி, நிரந்தரமான வேலை, இலவச ரயில் பயணம், கை நிறைய சம்பளம் ஆகியவற்றைத் தாண்டி இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவதினால் பல்வேறு கலச்சாரங்களை கற்றுக்கொள்ள ஏதுவான துறை.

போனஸ்:

போனஸ்:

சம்பளங்கள் தவிர, பணியாளர்களும் சலுகைகளும் போனஸும் கொடுக்கப்படுகிறது. ஊதிய விகிதம் ஆறாவது சம்பள கமிஷன் படி குறிப்பிடப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Railways: A journey to a dynamic career
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X