முதலீடு 200 டாலர், வருமானம் 125 மில்லியன்.! சஷாங்-யின் வெற்றி ராகசியம் தெரியுமா?

பிராக்டோ நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது, $ 200 டாலர் மட்டுமே முதலீடாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் மதிப்பு இன்று $ 125 மில்லியன் டாலராக உள்ளது.

By Saba

உலகின் முன்னனி நாடுகளில் உள்ள சுகாதாரத்தில் துறையில் தனது முத்திரையை பதித்து இன்று வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் செயலி என்றால் அது பிராக்டோ (Practo) தான். மருத்துவம், சலூன், ஜிம் என அனைத்திலும் முன்னிலையில் செயல்படும் இந்நிறுவனம் துவங்கப்பட்டது வெறும் 200 டாலரைக் கொண்டுதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

முதலீடு 200 டாலர், வருமானம் 125 மில்லியன்.! சஷாங்-யின் வெற்றி ராகசியம் தெரியுமா?

வாங்க, இந்த பிராக்டோவின் நிறுவனர் சஷாங் இதுகுறித்து என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.

பிராக்டோ!

பிராக்டோ!

பிராக்டோ மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், சலூன்கள், ஜிம் ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம் முன் பதிவு செய்வதற்கும், மருத்துவர்களிடம் ஆன்லைன் மூலமாகவே இலவச ஆலோசனைகளை பெறுவதற்கும் உதவும் இந்தியாவின் மிகப்பெரிய தளம் ஆகும். இது சிங்கப்பூர், இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தனது சேவைகளை வழங்குகிறது.

200 டூ 125 மில்லியன் டாலர்!

200 டூ 125 மில்லியன் டாலர்!

பிராக்டோ நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது, $ 200 டாலர் மட்டுமே முதலீடாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் மதிப்பு இன்று $ 125 மில்லியன் டாலராக உள்ளது.

பின்னடைவை கடந்து செல்லுங்கள்!

பின்னடைவை கடந்து செல்லுங்கள்!

பிராக்டோ நிறுவனம் தொடங்கிய காலத்தில் ஆரம்ப ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு விலகினர். அதே நேரத்தில் முழுமையான சேவை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்களும் குறைந்தனர். போதிய பணம் இன்றி நிறுவனத்தை நடத்தியது என பல சோதனைகள் வந்த போதிலும் அதனை கடந்து வருவதிலேயே குறிக்கோலாய் இருந்தேன்.

தெளிவான நோக்கம்!

தெளிவான நோக்கம்!

இந்நிறுவனத்தை துவங்கிய நாள் முதல் ஒரு பெரிய தயாரிப்பை உருவாக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கம் என்னிடம் இருந்தது. அதுபோலவே செயல்களையும் அமைத்துக் கொண்டேன்.

பிரச்சனையை காதலியுங்கள்!

பிரச்சனையை காதலியுங்கள்!

உங்களுடைய பணியில் ஏற்படும் பிரச்சனையை காதலியுங்கள், அதற்கான தீர்வுகளை அதிகம் தேடாதீர்கள். நீங்கள் தொழில் ஆரம்பிக்கும் போது கொண்டிருக்கும் சிந்தனைகள் கொஞ்ச நாள் சென்ற பிறகு வேறு விதமாக மாறலாம். உங்கள் நோக்கம் பிரச்சனைக்கான தீர்வுகளை கொடுப்பதாகவே இருக்க வேண்டும்.

நிறுவனமே நோக்கம்!

நிறுவனமே நோக்கம்!

நிறுவனத்தின் மீதான நோக்கமே முதன்மையானதாக இருக்க வேண்டும். இது ஊழியர்களிடம் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்கும். நீங்கள் நிறுவன நோக்கத்தை மேம்படுத்தும் நடைமுறைகளை செய்தால், எது எனக்கு நல்லது, எது உங்களுக்கு நல்லது என்ற வாதங்களே இருக்காது. மாறாக நோக்கத்திற்கு எது நல்லது என்பதே பிரதானமாக அமையும்.

இங்கொரு கால் அங்கொரு கால்!

இங்கொரு கால் அங்கொரு கால்!

ஒரு சந்தையில் நன்றாக கால் பதித்ததிற்கு பிறகு புதிய சந்தையில் நுழைய திட்டமிடுங்கள். பிராக்டோ உலகளாவிய நிறுவனமாக குறிக்கோள் இருந்தது. ஆனால் இந்தியாவில் நன்றாக வளர்ந்த பிறகுதான் வேறு நாடுகளுக்கு தனது சேவையை விரிவுபடுத்தினோம். முதலில் உள்ள ஒரு சந்தையை கைபற்ற உங்கள் சக்தியை பயன்படுத்துங்கள். பிறகு புதிய சந்தையில் நுழையுங்கள்.

நிபுணத்துவம் மட்டும் போதாது!

நிபுணத்துவம் மட்டும் போதாது!

நிபுணத்துவம் எல்லா நேரங்களிலும் வெற்றியை ஏற்படுத்த உதவாது. ஒரு மருத்துவரிடம் நிறுவனத்தைப் பற்றி கூறியவுடன், அவர் உங்கள் திட்டம் வேலைக்கு உதவாது, தொழில் செய்வதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். மருத்துவரால் அவர் துறை சார்ந்த வாய்ப்புகளை பற்றி யோசிக்க முடியவில்லை. நிபுணத்துவம் சில நேரங்களில் உங்கள் சிந்தனையை குறைத்து விடும்.

இது உங்களுடையது..!

இது உங்களுடையது..!

உங்களுடன் இருப்பவரோ அல்லது வாடிக்கையாளரோ, உங்களது தொழில் ஐடியா வேலை செய்யாது என்று கூறினால் அதற்காக சோர்வடைந்து. பின்வாங்கி விடாதீர்கள். அது போன்ற வார்த்தைகள் உங்களின் நம்பிக்கையை அழிக்கலாம். ஆனால் அவர்களால் உங்களுடைய நிறுவனத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள கற்பனையை பார்க்க முடியாது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Practo CEO Shashank ND shares success tips from his startup journey
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X