மாணவ வாழ்கையில் பெற்றோர்களின் பங்கு

Posted By:

மாணவ வாழ்கையில் பெற்றோர்கள் மிகச்சிறந்த பங்கு வகிக்கின்றனர் . பிள்ளைகளின் வாழ்வில் பெற்றோர்களின்  பங்கு அதிகரித்து காணப்படுவது இயல்பானது .இந்தியா போன்ற நாட்டில் அது என்றும் மாறதது நமக்காக சிந்திக்கும் அதிசிறந்த உறவுகள் என்றால் அது பெற்றோரேர்களே .

மாணவ வாழ்கையில் பெற்றோர்கள் மிகச்சிறந்த பங்கு வகிக்கின்றனர் .

 • நல்ல பள்ளி , படிப்பதற்கான சூழல் , படிப்பதற்கான சிறப்பு வகுப்பு ஏற்ப்படுத்தி தர வேண்டும் .
 • மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
 • பெற்றோர்கள் பிள்ளைகளின் பள்ளி கூட்டத்தில் தவறாது பங்கு கொண்டு ஆசிரியர்கள் கூறுவதை செயல்படுத்த வேண்டும் .
 • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற  பொண் மொழியை மாணவர்கள் வாழ்வில் செலுத்தி  செயல்பட வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை ஆகும் .
 • பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநலன் அறிந்து செயல்பட வேண்டும் . 
 • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் வயதுகேற்றவாறு தங்களை மேம்படுத்திகொள்ள வேண்டும் . 
 • இளம்பிள்ளைகளை அணுகுபோது தோழமையோடு இருப்பதுடன், அவர்களிகளின் படிப்பில் கவனம் செலுத்த உதவ வேண்டும் . ஏதேனும் இடையூறுகள் இருப்பின் அதனை இனம் கண்டு சரி செய்ய வேண்டும். 
 • பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதுடன் , மதிபெண்களுக்காக அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் . மேலும் தோல்வியை சந்திக்கும் தங்களது பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருப்பதுடன் தோல்வியில் இருந்து மீண்டு வர உதவ வேண்டும் . 
 • பெறோர்கள் பிள்ளைகளின் நலன் கருதி செயல்பட வேண்டும் அவர்களின் மற்ற தனித்திறமைகளை ஊக்குவித்து அவர்களின் எதிர்காலத்தில் தனித்திறமைக்கு ஏதேனும் சாதக சூழல் இருப்பின் ஆதரவு தரவேண்டும் .
 • பெற்றோர்கள் பள்ளி , கல்லுரிமாணவர்களுக்கு அவர்களின் முடிவு குறித்து சாதக பாதகங்களை தெரிவியுங்கள் , முடிவெடுத்து செயல்பட சுதந்திரமளியுங்கள் அதனால் உங்கள் பிள்ளைகள் சந்திக்க நேரிடும் நேர்மறை , எதிர்மறை நிகழ்வுகள் எதுவானாலும் ஆதரவளியுங்கள்  மீட்டு வாருங்கள் அதுவே  சாலச்சிறந்தது . 
 • பிள்ளைகளுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறீர்களோ அவ்வளவு கடினசூழல் கொடுத்து பழக்கப்படுத்துங்கள் அப்பொழுதுதான் உங்களது பிள்ளைகளுக்கு வாழ்வின் அர்த்தங்கள் பிடிப்படும் . 
 • பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை பனிரெண்டு வயதுவரை தொலைக்காட்சி பார்க்க, கார்டூன் சேனல்களை காண அனுமதிக்காதீர்கள் . தாய்மொழியில் கல்விகற்க அனுமதியுங்கள் சுயசிந்தனை வளர்ச்சி அதிகரிக்கும் . பல்வேறு மொழிகளை தாய்மொழியின் மூலம் கற்றுகொடுங்கள் எளிதில் குழந்தைகளால் கற்க முடியும்.

 

English summary
Here article mentioned about parents role in students life.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia