வழிகாட்டியாக பெற்றோர்கள் இருக்க வரும் இன்னல்கள் இனிமையானவையே!!

Posted By:
 • இந்தியாவை பொறுத்த வரை பிள்ளைகளின் வாழ்வில் பெற்றோர்களின் பங்கானது அபரிதமானது என்பதை நாம் அறிந்ததே , ஆனால் ஒருதனி மனிதனினை பெற்றோர்கள் வைத்து அடையாளப்படுத்திகொள்கிறது இந்த சமுதாயம் . ஆதலால் பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கின்றனர் என்பது கண்கூடாகும் .
 • பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத பங்கு வகிக்கின்றனர் என்பது கண்கூடாகும்


 • இந்திய பெற்றோர்களே பிளைகளை இறுதிவரை காக்கும் பொறுப்புடன் அன்பு கொண்டவர்கள் ஆவர் .
 • உலகிலுள்ள அனைத்து பெற்றோர்களுக்கும்  முன்னுதாரண வழிகாட்டியாக திகழ்பவர் நமது இந்தியபெறோர்களே ஆவர்.கடுமையாக நடந்துகொண்டாலும் பிள்ளைகளை கரைசேர்க்கும் உத்தி அவர்களின் கைவசமே நிரைந்திருக்கும் .  
 • பெறோர்களே நீங்களே பிள்ளைகளின் போக்கிற்கு முழுகாரணம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் பிள்ளைகளின் முன்பு அதிர்ந்து பேசுவது , முகம் காட்டுவது , வீட்டில் சண்டை சச்சரவுக்கு இடம் கொடுக்காதீர்கள் . 
 • முகமலர்ந்து விடையளியுங்கள் ,கணவன் மனைவி சண்டை , அலுவலக சிக்கல்களை குழந்தைகள் , வளர்பருவம் , இளம்பருவத்தினர் முன்பு காட்டாதீர்கள் .
 • பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சமூக போக்கு , சமுகத்தினருடன் கலந்து பழகும் பண்பு , சகிப்புத்தன்மை, போராடும் போக்கு , நிலைத்த தன்மை கற்றுகொடுங்கள் . 
 • நீங்கள் சார்ந்த துறை எதுவாக இருக்கலாம் ஆனால் பிள்ளைகளையும் அதே துறையில் நுழைக்காதீர்கள் ,அவர்கள் சார்ந்த துறையையும் ஆராய தவறாதீர்கள் .
 • பள்ளி , கல்லுரி, அலுவலகத்தில் , விடுதியில் தங்கியுள்ள உங்கள் பிள்ளைகளுக்காக அவர்களின் படிப்பு , வேலை , தங்குமிடங்களில் ஏற்படும் நேர்மறை எதிர்மறை நிகழ்வுகளை பற்றி விசாரியுங்கள் ஏதேனும் பிள்ளைகளின் அனுகுமுறையில் குறையிருந்தால் சரி செய்யுங்கள் அதேபோல் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு உங்கள் அனுபவங்களை கூறி அவர்களின் நடைமுறை சிக்கல்களுக்கு விடையளியுங்கள் 
 • நீங்கள் அவர்களின் ஆதாரம் என்பதை உணருங்கள், பிள்ளைகளையும் உணர வையுங்கள் . 
 • இன்று வாழ்வின் வளர்ந்த உயர்நிலையிலுள்ளவர்கள் அனைவருக்கும் உந்துசக்தி பெறோர்கள்தான் , ஆகவே நீங்களும் உணர்ந்து செயல்படுங்கள் பெற்றோர்களே !!!
 • குழந்தைகளை வீட்டில் அடைத்துவைத்து வளர்க்கும் போக்கு கைவிடுங்கள் அதே சமயம் அதிகம் வெளியில் விட்டு வளர்க்கும் போக்கும் கூடாது .அவர்களின் உடை , நடை , போக்கு உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும் இதுவே நன்மை பயக்கும். 

English summary
above article mentioned tips for parents guidance

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia