மருத்துவப் படிப்பில் சேர உதவும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (மார்ச் 9) நெருங்கிவிட்டது. எனவே, தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவிகள் கடைசி நாளுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்புவது நல்லது. மாணவ, மாணவிகள், nta.ac.exams, nta.ac.in.neet ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, 2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது பிப்ரவரி மாதம் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி 10-ம் தேதி நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும், www.nta.ac.in, exams.nta.ac.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்
இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டில் நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. நீட் விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1600ல் இருந்து ரூ.1700 ஆக அதிகரித்து உள்ளது.
அதேபோல், ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500ல் இருந்து ரூ.1600 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.900ல் இருந்து ரூ.1000 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. நீட் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களும், கடந்த ஆண்டு நீட் தேர்ச்சி பெறாத மாணவர்களும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
வெளிநாட்டில் மையங்கள்...:
இதனிடையே இந்தியாவிற்கு வெளியே நீட் தேர்வு எழுதும் வகையில் மாணவர்களுக்கு எந்தெந்த மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் சில மாணவர்கள் கவலை அடைந்தனர். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு அவர்கள் வெளிநாடு தேர்வு மையங்கள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் உலகம் முழுவதும் 12 வெளிநாடுகளில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமையின் மூத்த இயக்குநர் சாதனா பராசரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், "நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தில் இந்தியாவில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வு மையங்களை மாற்ற வாய்ப்பளிக்கப்படும். விண்ணப்பம் பதிவு நிறைவடைந்த உடன் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசம் வழங்கப்படும். அப்போது தங்களுக்குரிய நாடுகளையும் தேர்வு மையங்களையும் அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள பட்டியலின்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களிலும் குவைத் நகரம், தாய்லாந்தின் பாங்காக், இலங்கையின் கொழும்பு, கத்தாரின் தோஹா, நேபாளத்தின் காட்மண்டு ஆகிய தேர்வு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மலேசியாவின் கோலாலம்பூர், பஹ்ரைனின் மனாமா, ஓமனின் மஸ்கட், சவுதி அரேபியாவின் ரியாத், சிங்கப்பூர் ஆகிய 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுகளால் நடத்தும் இலவச பயிற்சி மையங்கள்
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சில மாநிலங்கள் இலவசமாக தங்கி படிக்கும் வசதியுடன் பயிற்சி மையங்களை நடத்துகிறது. சில மாநிலங்கள் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு பயிற்சியை வழங்குகின்றன.
அந்த மாநிலங்கள் விவரம்:அசாம்
அசாம் அரசாங்கம் JEE முதன்மை மற்றும் NEET UG ஆர்வலர்களுக்கு இலவச வழிகாட்டுதல் திட்டத்தை வழங்குகிறது. இருப்பினும், மாணவர்கள் விண்ணப்பித்து தகுதித் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்பிகார்
பிகார் பள்ளி தேர்வு வாரியம் (BSEB) பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக ஜேஇஇ, நீட் தேர்வர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்குகிறது. இலவசப் பயிற்சித் திட்டத்திற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பரில் தகுதித் தேர்வு நடைபெறும். இலவச தங்குமிடம் அல்லாத திட்டங்களுக்கான பயிற்சி மையங்கள் பாட்னா, முசாபர்பூர், சாப்ரா, தர்பங்கா, சஹர்சா, பூர்னியா, பாகல்பூர், முங்கர் மற்றும் கயா ஆகிய இடங்களில் உள்ளன.

டெல்லி டெல்லி அரசு பொறியியல் மற்றும் மருத்துவ ஆர்வலர்களுக்கு இலவச ஜேஇஇ(JEE) முதன்மை, ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்டு மற்றும் நீட் பயிற்சியை வழங்குகிறது. விண்ணப்ப தேதிகள் மற்றும் இலவச பயிற்சி திட்டம் தொடர்பான பிற விவரங்கள் டெல்லி அரசின் SC, ST மற்றும் OBC களுக்கான நலத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா தெலுங்கானா பழங்குடியினர் நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கம் (TTWREIS) தெலுங்கானா சமூக நல குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கத்துடன் (TSWREIS) இணைந்து SC மற்றும் ST பிரிவின் கீழ் உள்ள ஆர்வலர்களுக்கு இலவச IIT JEE மற்றும் NEET பயிற்சியை வழங்குகிறது. பயிற்சி மையம் ஹைதராபாத்தில் மட்டுமே அமைந்துள்ளது. உத்தரப்பிரதேசம்
உத்தரபிரதேச அரசு அபியுதயா திட்டத்தின் கீழ் ஐ.ஐ.டி ஜே.இ.இ மெயின்ஸ் மற்றும் நீட் யு.ஜி தேர்வர்களுக்கு இலவச வழிகாட்டுதலை வழங்கி வருகிறது. இதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இலவச பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். உ.பி மாநில இலவச பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பதிவு பொதுவாக மார்ச் மாதம் தொடங்குகிறது. மேற்கு வங்கம்
மேற்கு வங்க அரசு ST மற்றும் SC சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் நீட் மற்றும் JEE முதன்மை பயிற்சியை இலவசமாக வழங்குகிறது. இலவச பயிற்சித் திட்டத்திற்கான விண்ணப்பம் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தொடங்கும் மற்றும் மேற்கு வங்க அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையால் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஜே.இ.இ தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
நீட் தேர்வு விண்ணப்பத்துக்கு கடைசி நாட்கள் நெருங்கியுள்ள
விண்ணப்பிக்கும் போது மேற்கொள்ளவேண்டிய விதிமுறைகள் என்னவென்று பார்ப்போம்.
1). கல்வித் தகுதி அளவுகோல்கள் என்ன:
2024-ம் ஆண்டுக்கான நீட் (NEET) தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடங்கும் முன், மாணவர்கள் தேசிய தேர்வு முகமை நிர்ணயித்த தகுதி அளவுகோல்களை முழுமையாக மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடைசி நிமிட முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு வயதுத் தேவைகள், கல்வித் தகுதிகள் மற்றும் பிற முன்நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2.தனிப்பட்ட தகவல் முக்கியம்:
தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யும்போது துல்லியம் முக்கியமானது. உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற தகவல்களை இருமுறை சரிபார்த்த பின்னர் தகவல்களைப் பதிவு செய்யும். இல்லாவிட்டால், பின்னர் சிக்கல்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே, பிழைகளின்றி விண்ணப்பங்களை பதிவேற்றவும்.

3. தேர்வு மையங்களின் தேர்வு செய்வது எப்படி:
சரியான தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். அருகாமை, அணுகல் மற்றும் வசதி போன்ற காரணிகளைக் கவனியுங்கள். உங்களின் விருப்பங்களோடு ஒத்துப்போகும் மற்றும் பயணம் தொடர்பான மன அழுத்தத்தை குறைக்கும் தேர்வு மையத்தை தேர்வு செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்பது முக்கியம்.
4. எப்படி ஆவணங்களைப் பதிவேற்றுவது:
புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களை கவனமாகப் பின்பற்ற வேண்டும். பதிவேற்றிய படங்கள், தொழில்நுட்ப குறைபாடுகளைத் தவிர்க்க, குறிப்பிட்ட பரிமாணங்கள் மற்றும் வடிவங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்து கொள்வது நல்லது. புகைப்படங்களின் அளவுகளை முன்கூட்டியே குறைத்து வைத்துக் கொள்வது நல்லது.
5. பணத்தை எப்படி செலுத்துவது
பணம் செலுத்தும் செயல்முறையை கவனத்தில் கொள்ளுங்கள். பாதுகாப்பான கட்டண முறையைத் தேர்வுசெய்து, பரிவர்த்தனை விவரங்களைக் கைவசம் வைத்திருங்கள் மற்றும் கட்டண ரசீது நகலை வைத்திருக்கவும். விண்ணப்ப செயல்முறையை வெற்றிகரமாக முடிக்க இந்த செயல்முறை முக்கியமானது.
6. விண்ணப்ப மதிப்பாய்வு முக்கியம்
சமிட் அல்லது சமர்ப்பி பொத்தானை அழுத்துவதற்கு முன், உங்கள் விண்ணப்பத்தை முழுமையாக மதிப்பாய்வு செய்யவும். அனைத்து விவரங்களும் துல்லியமானவை மற்றும் புதுப்பித்தவை என்பதை உறுதிப்படுத்தவும். சமர்ப்பித்தவுடன், மாற்றங்கள் சவாலானதாக இருக்கலாம், எனவே பின்னர் வருந்துவதை விட பாதுகாப்பாக முன்கூட்டியே எச்சரிக்கையாக அனைத்துத் தகவல்களையும் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
எனவே, மாணவர்கள் கடைசி நாளுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக தங்களது படிவங்களை சமர்ப்பியுங்கள். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக சமர்ப்பிக்காமல் இன்றே ஆற அமர உட்கராந்து விண்ணப்பங்களை பதிவேற்றுவது நல்லது.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே..!


Click it and Unblock the Notifications












