நீட் தேர்வெழுத போறீங்களா? இந்த தவற மட்டும் பண்ணீடாதீங்க..!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்தியர்கள் கட்டாயம் நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்தியர்கள் கட்டாயம் நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வின் அடிப்படையிலே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

நீட் தேர்வெழுத போறீங்களா? இந்த தவற மட்டும் பண்ணீடாதீங்க..!

இன்னும் ஓர் மாதத்திற்குள் 2019-20ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பின் வரும் தவறுகளை எல்லாம் தவிர்த்தாளே வெற்றிக்கான வாய்புகள் கைகூடிவிடும். வாங்க, அது என்னவெல்லாம் என பாக்கலாம்.

கேள்வியை கவனமாக வாசிக்கத் தவறுதல்

கேள்வியை கவனமாக வாசிக்கத் தவறுதல்


நம்மில் பெரும்பாலானோருக்கு உள்ள மிகப் பெறிய குறையே இதுதான். கேள்வியில் உள்ள ஓரிரு வார்த்தையை மட்டும் படித்துவிட்டு விடையை பூர்த்தி செய்வது. குறிப்பாக, இதுபோன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் இந்த கவனக்குறைவான செயலால் தவறான விடையை எழுத நேரிடுகிறது. எனவே, அனைத்து கேள்விகளையும் அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுடன் கவனமாகப் படித்து புரிந்துகொண்டு விடை எழுத வேண்டும்.

நேரத்தை கடைபிடிக்கத் தவறுதல்

நேரத்தை கடைபிடிக்கத் தவறுதல்


நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் ஒவ்வொரு கேள்வியும் ஒரு குற்பிட்ட நேரத்தை கணக்கில் கொண்டு எழுதும் வகையில் அமைக்கப்படுகிறது. வினாக்களுக்கு விடையளிக்க குறிப்பிட்ட நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள், வேகமாக பதிலளிப்பதோடு ஆரம்பம் முதல் முடிவு வரை சீரான வேகத்தில் விடை எழுத கற்றுக் கொள்ள வேண்டும்.

போதிய நேர மேலாண்மை இன்மை

போதிய நேர மேலாண்மை இன்மை


வினாத்தாளில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வசதியாக ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அளவு நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தேர்வு நேரம் முடிவதற்கு 20 நிமிடங்கள் முன்பே அனைத்து கேள்விகளுக்கு விடையளித்து முடித்திருக்க வேண்டும். அப்போதுதான் அனைத்தையும் ஒரு முறை மீண்டும் சரிபார்த்துக்கொள்ள முடிவும்.

துல்லியமான விடையை எழுதத் தவறுதல்

துல்லியமான விடையை எழுதத் தவறுதல்


கேள்விகளுக்கான விடையை வேகமாக எழுத வேண்டியது கட்டாயம் என்றாலும் அதற்கான விடைகளும் துல்லியமானவையாக இருக்க வேண்டியதும் அவசியம். இதனைத் தவறினால், நெகட்டிவ் மார்க் பெற நேரிடும். அடிப்படையான விஷயங்களைத் தெளிவாக புரிந்து விரல் நுனியில் வைத்திருப்பது, இத்தவறைத் தவிர்க்க பெரிதும் உதவும்.

அது இல்லைனா இது வேண்டாம்

அது இல்லைனா இது வேண்டாம்


இது பொதுவாக நாம் அனைவரும் செய்யக் கூடிய தவறுதான். ஒரு கேள்விக்கு சரியான விடை தெரியாத பட்சத்தில் ஊகித்து ஒரு விடையைத் தேர்வு செய்வது பெரிய தவறு. பதில் தெரியவில்லை என்றால் அந்தக் கேள்வியைத் தவிர்த்துவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்ல வேண்டும். pவடை தவறாக இருந்தால் நெகட்டிவ் மார்க் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

கணக்குப் பிழை

கணக்குப் பிழை


தேர்வு பதற்றத்தில் வேகமாக எழுதிவரும்போது சில எளிமையான கணக்குக் கேள்விகளுக்குக் கூட பிழை வந்துவிடக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நேரத்தை வீணாகச் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, கணக்கீடுகளைச் செய்யும்போது சற்று கவனமாக செயல்பட வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NEET 2019: Six common mistakes to avoid during the exam
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X