தேசிய பெண் குழந்தைகள் தினமும் அவர்களுக்கான வளமும்

Posted By:

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மேம்படுத்தவும், பெண் குழந்தைகள் பாதுகாப்புகளுக்கான ஒழுங்கு விதிமுறைகளை ஒருங்கிணைக்கவும் தேசிய குழந்தைகள் தினமானது 2006, ஜன்வரி30 முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தேசிய அளவில் வளர் இளம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு வளர்ச்சி திறன் மேம்படுத்தவும் முறைப்படுத்தப்பட்ட கல்வி வழங்குதல் குழந்தைகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றதா என்பதை கண்காணிக்க அரசு தேசிய பெண் குழந்தைகள் தினம் பின்ப்பற்றி வருகின்றது.

நாட்டில் பெண்குழந்தைகளின் முக்கித்துவம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள் எந்திர வேகத்தில் வேலைக்கு போவதால் பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் தேவையும் எந்திர தனமாகின்றது. கொண்டாட்டங்கள் கிடைப்பதில்லை. எது தேவை எது தேவையற்றது என்பதனைப் பெண் குழந்தைகளை கண்டறிய அவர்களது வாழ்வு மேம்பட அரசின் முயற்சிகளுள் இந்த திட்டமும் ஒன்றாகும்.

பெண் குழந்தைகளுக்கான ஆன்லைன் போர்டல் :

பெண் குழந்தைகளுக்கான இளம்பருவத்தினை பாதுகாப்பு உறுதி செய்யவும் அவர்களுக்கு எதிரான வன்முறை கொடுமை தடுக்கவும், வளர் இளம் பெண் குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கான தேசிய தகவல் துறையின் ஒத்துழைப்புடன் ஆன்லைன் போர்டல் ஒன்றை மத்திய அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது வளர்இளம் பெண் குழந்தைகளுக்காக அவர்களின் உடல் நலம் ஆரோக்கியம், தனித்திறமை, சிக்கல்களை எளிதில் தீர்ப்பது தொடர்பாக அனைத்து தகவல்களையும் முறைப்படி வழங்கும்.

விரைவான அறிக்கை:

தேசிய தகவல் மையமானது நாடு முழுவதுமுள்ள மொத்தம் 508 மாவட்டங்களில் வளர் இளம் பெண்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கவுள்ளது. வளர்இளம் பெண் குழந்தைகளான 11 வயதுமுதல் 14 வயதுள்ளோரின் கல்வியை உறுதி செய்கின்றது.

11 முதல் 14 வயதுள்ள வளர்இளம் பெண் குழந்தைகளின் கல்வி கற்கும் வாய்ப்பை உறுதி செய்வதுடன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கல்வி வசதிகள் ஆய்வு செய்யும்.

நாடு முழுவதுமுள்ள 508 மாவட்டங்களிலுள்ள வளர்இளம் பெண்களுக்கு கிடைக்கும் ஆரோக்ய உணவு விகிதம், உடல் நலம், பெண் குழந்தைகளுக்கு கொடுக்கும் வாய்ப்புகள், தனித்திறமைகள் குறித்து ஆய்வு செய்து அவர்களின் வாழ்வு தகவல்களை சேகரிக்கும்.

Image Source

 

திட்டத்தின் நோக்கம்

பள்ளி குழந்தைகளுக்கான முன்னேற்றம் அவர்களுக்கு சமமான வளர்ச்சியுடன் இணைந்த  சேவையை வழங்குவது திட்டத்தின் நோக்கம் ஆகும்.  உடல் நலம், சுகாதாரம், வழிகாட்டுதல், பொது சேவை குறித்து கற்பித்தல் அத்துடன் குழந்தைகளுக்கு முறையான கல்வியின்றி இருப்பவர்களுக்கு கல்வி வழங்குதல் முக்கியமான நோக்கம் ஆகும். குழந்தைகளின் வளர்ச்சி கருதி இந்த திட்டம் முழு மூச்சாய் செயல்ப டும்.

மேற்கூறிய திட்டங்கள் மூலம் குழந்தைகளின் ஒருங்கிணைப்பட்ட வளர்ச்சியை நோக்கமாக ஜனவரி 30 , 2006 முதல் பெண் குழந்தைகளுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Image source

வளர்இளம் பெண் குழந்தைகளின் தேவை :

நாடு முழுவதும் உள்ள வளர் இளம் குழந்தைகளுக்கு தேவையானது என்னவெனில் அன்பு கலந்த வழிக்காட்டல்.

வளர் இளம் குழந்தைகளுக்கு கையில் பொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

தவறு செய்யும் பொழுது தடுத்தல்.

பெண் குழந்தைகளின் உடல், மனதில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களை குறித்து அவர்களுக்கு புரியும் படி தெரிவித்தல்.

வளம்இளம் பெண்களுக்குள் ஏற்படும் பாலியல் மாற்றங்களை முறைப்படி குடுமபத்திலோ அல்லது பள்ளியின் மூலம் கூட வளர்இளம் பெண்களுக்கு அவர்களின் தேவை குறித்தும் அறிவிக்கலாம். தங்களை தாமே எவ்வாறு பாதுகாத்தல் என்பதனை தெரிந்திருக்க செய்தல் அவசியம் ஆகும்.

என்று குழந்தைகளின் இந்த சிக்கல்கள் கலையப்படுகின்றதோ அன்றுதான அவர்கள் வாழ்வு செழிக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கான தேவைகள் இடைவெளியில்லமல் சீரான வேகத்தில் கொடுக்க வேண்டும். அரசை மட்டும் நம்பியருக்காமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கக், வீடு, சமுதாயம், சமுதாயத்தின் பிம்பங்களான ஊடகங்கள், என அனைத்து சூழல்களும் சரியாக இருக்கும் பட்சத்தின் பெண் குழந்தைகளுக்கான முன்னேற்றம் என்றும் தடைப்படாது.

Image source

வளர்இளம் குழந்தைகளின் பிரச்சனை:

சமுக வலைதளங்கள், செல்பி மோகங்களில் குழந்தைகள் சீரழிக்கப்படுகின்றனர்.
வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு தங்களைத் தானே பாதுகாத்து கொள்ள வழிமுறைகள் எதுவும் தெரிவதில்லை.
குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் குறித்து முறையான நடவடிக்கைகள் சீராக இருப்பதில்லை. 

என்று குழந்தைகளின் இந்த சிக்கல்கள் கலையப்படுகின்றதோ அன்றுதான அவர்கள் வாழ்வு செழிக்கும். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கான தேவைகள் இடைவெளியில்லமல் சீரான வேகத்தில் கொடுக்க வேண்டும். அரசை மட்டும் நம்பியருக்காமல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கக், வீடு, சமுதாயம், சமுதாயத்தின் பிம்பளங்களான ஊடகங்கள், என அனைத்து சூழல்களும் சரியாக இருக்கும் பட்சத்தின் பெண் குழந்தைகளுக்கான முன்னேற்றம் என்றும் தடைப்படாது.

Image source

சார்ந்த பதிவுகள்:

பெற்றோர்களே பெரியோர்களே மாணவர்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுங்க!

தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !

English summary
Article tells about National Adult girl child Special

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia