நாட்டு நலப்பணி திட்டங்கள் அடங்கிய தொகுப்பு 2 படியுங்க

Posted By:

நாட்டு நலத்திட்டங்களின் தொகுப்பு  நாடு முழுவதும் கிராமம் முதல் நவீன நகரம் வரை  பல்வேறு திட்டங்களை அரசு  அறிவித்து செயலாற்றுகின்றது. இது நாட்டு மக்களை முழுவதுமாக சென்றடைய அரசு பயணாளிகள் இலக்குகளை அறிவித்து  செயல்படுத்தி வருகின்றது.  போட்டி தேர்வர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள பல்வேறு ஊடகங்கள் உதவிகரமாக உள்ளன. போட்டி தேர்வர்கள் இது குறித்து முழுமையாக அறிந்து எந்த தேர்வானாலும் அதிக மதிபெண்கள் பெறலாம். 

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி மீனா யோஜனா:

இத்திட்டத்தின்கீழ் ஆண்டு பிரியம் 330 இல் பொதுமக்களுக்கு ரூபாய் 2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படுகின்றது. காப்பீடுதாரர் இறந்துவிட்டாலும் அவரின் குடும்பத்திற்காக ஆயுள் காப்பீடு வழங்கப்படும் . இந்த திட்டத்திற்காக 18 முதல் 50 வயதுள்ள அனைத்து வங்கி கணக்குடையவர்களும் தகுதி பெற்றவர்களாவார்கள்.

பாதுகாப்பான உணவு திட்டம் :

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவுப் பொருட்கள் வழங்கவும் அவ்வாறு வழங்கப்படுவதை ஒரு தேசிய கலாச்சாரமாக உருமாற்றவும் நுகர்வோரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதுடன் அதை பாதுகாப்பனதாகவும் வழங்கவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் சார்பில் திட்டம் கொண்டு வரப்பட்டது.

பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம் :

வறுமைக் கோட்டிற்கு கிழேயுள்ள குடும்பங்களுக்கு இலவச் சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கும் நோக்குடைய ரூபாய் 8000 கோடி மதிப்பிலான மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் முதல் மக்கள் நலத்திட்டமான இது 2019 ஆம் ஆண்டிற்குள் வருமை கோட்டிற்கு கிழேயுள்ள அனைத்து ஏழைகுடும்பங்களுக்கும் இலவச எரிவாயு இணைப்பினை அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஸ்டாண்ட் அப் இந்தியா :

முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் நினைவு நாளையொட்டி 2016 ஏப்ரல் 5 அன்று துவங்கப்பட்ட இத்திட்டம் மகளிர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் போன்ற பிரிவு இளைஞர்கள் தொழில் தொடங்க முனைவோர்களுக்கு 10 இலட்சம் முதல் 1 கோடி வரை நிதியுதவி வழங்க வழிவகை செய்கின்றது.

கங்கா கிராம் திட்டம் :

கங்கை நதியை தூய்மையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக உத்திரபிரதேச மாநில கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள 1600 கிராமங்களிலிருந்து கங்கை நதியில் வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திக்கரிக்க கங்கா கிராம் திட்டத்தை 2016 ஜனவரி 6இல் தொடங்கியது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பாக முதலில் 200 கிராமங்களைத் தேர்ந்தெடுந்து ஒரு கோடி செலவில் கழிவு நீரை சுத்திகரிக்க உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிவு நீர் மேலாண்மையானது பஞ்சாபில் சிச்சேவால் என்ற கிராமத்தை முன் மாதிரியாக கொண்டு செயல்படுத்தப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

 

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜ்னா :

பயிற் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகையினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நிதிச்சிக்கலை போக்க மத்திய அரசு 2016 ஜனவரியில் ஃபசல் பீமா யோஜ்னா என்னும் திட்டத்தினை துவங்கியது.

தேசிய வகை பயிர்களுக்கான பயிர் காப்பீடு திட்டம் என்ற நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் காரீப் முன்பருவ பயிர்கள், ராபி பருவ பயிர்களுக்களுக்கான காப்பீட்டின் மொத்த பிரிமயத் தொகையில் 5 % செலுத்தினால் போதுமானது ஆகும்.

 

மத்திய அரசின் சுகம்ய பாரத் அபியான்:

சர்வதேச மாற்றுதிறனாளிகளின் தினத்தினை முன்னிட்டு 2015 டிசம்பர் 3 அன்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரத்துரை சார்பில் இந்தியாவை ஊனமுற்றோர்க்கு ஆதரவான நாடாக மாற்றும் வகையில் சுகம்பாரத் அபியான் என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுதிறனாளிகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம், தற்சார்பு, வாழ்க்கை போன்றவற்றை உருவாக்கித் தரமுடியும்.

சேது பாரததிட்டம் :

2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் இரயில்வே கேட்டுகளற்ற நெடுஞ்சாலைகளாக மாற்றும் திட்டத்துடன் இது 2016 மார்ச் 4 அன்று துவங்கபடும்.

சூர்யோதய திட்டம் :

வடகிழக்கில் எட்டு மாநிலங்களில் எயிட்ஸ் நோய் பரவுவதை முன்கூட்டியே தடுக்கும் நோக்குடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சூர்யோதயம் புராஜெக்ட் சன்ரைஸ் என்னும் திட்டத்தை 2016 பிப்ரவரி 5 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.  ஏய்ட்ஸ் மூலம் 1 லட்சம் பேருக்கு இலவச முழு மருத்துவ சேவையை வழங்கும்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் :

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மாதந்தோறும் 42 முதல் 210 ரூபாய் வரை முதலீடு செய்வதன் மூலம், 60 வயது முதல் உள்ளோர்க்கு ரூபாய் 1000 முதல் 5000 வரை ஓய்வூதியத் தொகை கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய 18 முதல் 40 வயதுள்ள அனைத்து வங்கி கணக்குடையவர்களும் தகுதி பெற்றவர்களாவார்கள்.

ஸ்கில் இந்தியா :

சீனா உலகின் உற்பத்தி கேந்திரமாக விளங்குவதுபோல் இந்தியாவை உலகின் மனித வளத்தலைநகராக மாற்றும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட  திட்டம்தான் திறன்மிகு இந்தியா திட்டம் ஆகும். இது உலக இளைஞர் திறன் வள நாளான 2015 ஜூன் 15 அன்று இந்திய பிரதமரால் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டில் சுமார் 23 கோடி நபர்களுக்கு திறன் வளர் பயிற்சிகள் அளிப்படவுள்ளன.

கேள்விகள்:

1. ஸ்கில் இந்தியா யாரால் துவக்கி வைப்பட்டது?
2. ஓய்வூதிய திட்டத்தை பற்றி தெரிவிக்கும் திட்டத்தின் பெயர் என்ன?
3. ரயில்வே கேட்டுகளற்ற திட்டமே சேது பாரத திட்டம் ஆகும் சரியா?
4. சர்வதேச மாற்றுதிறனாளிகளின் திணத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட் திட்டம் எது?
5. ஸ்டாண்ட் அப் இந்தியா என்ற திட்டத்தின் நோக்கம் என்ன
6. பயிற் காப்பீடு குறித்து தெரிவிக்கும் திட்டம் யாது

சார்ந்த பதிவுகள்:

நாட்டு நலத்திட்டங்கள் அவற்றின் பயன்கள்

English summary
The article tells about developments schemes of Indian Government

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia