இன்ஜினியர் ஆகணுமா? அப்போ இது உங்களுக்கான டிப்ஸ்!

Posted By: Kani

12 ஆம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு மேற்படிப்பு குறித்த யோசனையில் ஆழ்ந்துள்ளீர்களா? உங்களுக்காகதான் இது...

மேற்படிப்பை பொருத்தமட்டில் வேலை வாய்ப்புடன் தொடர்பு படுத்தாதீர்கள். உங்கள் விருப்பம் என்ன என்பதை முடிவு செய்யுங்கள். பக்கத்து வீட்டு அக்கா கூறினார்கள், அண்ணன் கூறினார்கள் என்று தேர்வு செய்தால் ஒரு கட்டத்தில் ஏமற்றமே மிஞ்சும்.

இன்ஜினிரிங் என்றால் சிவில், மெக்கானிக்கல், எலெக்டிரிக்கல் என்றிருந்த காலம் போய் இப்போது இதில் 50 வகையான பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. எனவே நமது விருப்பம் என்ன என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

அதற்கு வடிவம் கொடுக்கும் படிப்பு எந்த வகையான படிப்பு, அது எங்கு வழங்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து பின் அதைத் தேர்வு செய்து படிப்பது புத்திசாலித்தனம்.

இன்ஜினிரிங் பொருத்தவரை இந்த கோர்ஸ்தான் டாப் என்பதை எப்படி முடிவு செய்கிறார்கள் என்றால், எந்த பாடப்பிரிவுக்கான சீட் அதிகமாக எடுக்கப்படுகிறதோ அதையே உச்சானிக் கொம்பாக நினைத்துக்கொண்டு பெற்றோர்களும், மாணவர்களும் இதன் பின் படை எடுத்து வருகின்றனர். இது முற்றிலும் தவறு.

இன்ஜினிரிங் படிப்பை பொருத்தவரை எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினிரிங் பிரிவு 528 கல்லூரிகளிலும், கம்யூட்டர் இன்ஜினிரிங் 516 கல்லூரிகளிலும், மெக்கானிக்கல் 503 கல்லூரிகளிலும், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் 494 கல்லூரிகளிலும், இதற்கு இணையாக சிவில், ஐடி துறைகளிலும் படிப்பு வழங்கப்படுவதால் ஆட்டோமேட்டிக்காக மேற்கண்ட படிப்புகள்தான் பாப்புலர் என்று என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்ததாக அதிக சீட் கொண்ட 7 இன்ஜினிரிங் படிப்புகள், ஏரோநேட்டிகல் 59 கல்லூரிகளிலும், ஆட்டோ மொபைல் 55 கல்லூரிகளிலும், (EIE) எலக்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ரூமென்டேஷன் 55 கல்லூரிகளிலும், ஆர்க்கிடெக்ஷெர் 44 கல்லூரி, மெக்கட்ரானிக்ஸ் 29 கல்லூரிகளிலும், இதற்கு இணையாக பயோடெக், பயோ மெடிக்கல் கல்லூரிகளிலும் உள்ளன. (கல்லூரிகள் சீட் விகிதம் முந்தைய ஆண்டுக்கானாது).

இதை தவிர்த்து 37 வகையான இன்ஜினிரிங் படிப்புகள் தமிழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. அக்ரிகல்சர், அக்ரிகல்சர் அண்ட் இரிகேஷன். அப்பீரல் டெக்னாலாஜி, கெமிக்கல், கெமிக்கல் அண்ட் எலக்ரோ கெமிக்கல், செரமிக் டெக், என்விரான்மெண்ட், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன், புட் டெக்னாலாஜி, பேஷன் டெக்னாலாஜி, ஜியோ இன்பர்மேட்டிக், இன்டஸ்டிரியல் பயோ டெக்னாலாஜி, இன்ஸ்ரூமென்டேஷன் அண்ட் கன்ரோல், இன்டஸ்டிரியல் இன்ஜி, லேதர் டெக், மெட்டிரியல் சயின்ஸ் அண்ட் இன்ஜி, மெடிக்கல் எலக்ரானிக்ஸ், மைனிங். மேனுபேக்ஷரிங் , மெரைன், மெட்டலஜிகல் (சுந்தர் பிச்சை), மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேஷன், நனோ சயின்ஸ் அண்ட் டெக்னாலாஜி, பிளாஸ்டிக் டெக்னாலாஜி, பெட்ரோ கெமிக்கல் இன்ஜி, பெட்ரோலியம் இன்ஜி, பார்மசிட்டிகல் டெக், பாலிமர் டெக்னாலாஜி, புரெடேக்ஷன் இன்ஜி, பிரிண்டிங் டெக்னாலாஜி, ரோபோடிக் அண்ட் ஆட்டோமேஷன், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக். டெக்ஸ்டைல், டெக்ஸ்டைல் டெக்னாலாஜி உள்ளிட்ட 37 வகையான பிரிவுகள் உள்ளன. இதில் எதைப்படித்தாலும் வேலை நிச்சயம். ஆனால் அதில் நாம் பெறும் புலமையை பொருத்தது. 

இடையில் பிஇ பெருசா? பிடெக் பெருசா என்று ஒரு கேள்வி எழுகிறதா ரெண்டுமே சமம்தான். எனவே உங்களுக்கு எதன் மீது ஆர்வமோ அதைத்தேர்ந்தேடுத்து படிப்பது சிறந்தது.

சான்விச் கோர்ஸ் என்றால் என்ன?: பொதுவாக பிஇ மெக்கானிக்கல் 4 ஆண்டு கோர்ஸாக பயிற்றுவிக்கப்படுகிறது. சான்விச் கோர்ஸ் என்பது 1 ஆண்டு அதிகமாக படிக்க வேண்டியது இருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம். குறிப்பிட்ட பிரிவில் சாற்று ஆழ்ந்த புலமை பெற உதவும். எந்த வகையான படிப்பு படித்தாலும் வேலை ரெடி. ஆனால் படிக்கும் போது படிப்பையும் தாண்டி என்ன கற்றுக்கொண்டோம் என்பதில்தான் அதன் ரகசியம் அடக்கம். யாவும் சாத்தியமே. முயற்சியும், பயிற்சியும் இருந்தால்.

பொறியியல் மட்டுமே படிப்பா? சுவாரஸ்யமான வாழ்க்கைக்கு 6 ஜாலியான படிப்புகள்!

English summary
List of Engineering courses in tamilnadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia