நாட்டில் தற்போது அதிவேகமாக வளர்ச்சி பெற்று வரும் ஆப்டோமெட்ரி என்ற படிப்பைப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது. நாட்டில் மருத்துவத்துறை வேகமாக வளர்ந்துவரும் சூழலில், துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பார்வை அளவையியல் எனப்படும் ஆப்டோமெட்ரி (Optometry) படிப்பானது உடல்நலம் (குறிப்பாக, கண்) சார்ந்த துணை மருத்துவப் படிப்பு ஆகும். தற்போது இந்தப் படிப்பை தற்கால மாணவ, மாணவியர் அதிகம் விரும்பிப் படிக்கின்றனர்.
தற்போதுள்ள கம்ப்யூட்டர், டிஜிட்டல் போன்ற நவீன காலத்தில் ஏறக்குறைய அனைவரும் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இவ்வாறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அதிகளவில் நாம் பயன்படுத்துவதால், கண் சார்ந்த பிரச்சினைகள் மக்களுக்கு அதிகரித்து வருகின்றன.
வரும் 2050ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு கண் தொடர்பான குறைபாடுகள் உருவாக வாய்ப்புள்ளதாக நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், கண் சார்ந்த படிப்புகள் இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றன என்ற மருத்துவ நிபுணர்கள் குறிப்புகளை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பார்வை தொடர்பான பிரச்சினைகளான கிட்டப்பார்வை போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் ஆப்டோமெட்ரிக் படிப்புக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் மயோபியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆய்வுகளின்படி, 5-15 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகளில் ஒருவர் கிட்டப்பார்வையால் அவதிப்படுகிறார். இதை எதிர்த்து திறம்பட சமாளிக்க. இதற்கு, இந்தியாவிற்கு அதிக பயிற்சி பெற்ற கண் மருத்துவர், பார்வை மருத்துவர் மற்றும் ஒளியியல் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.
எனவே, இந்த இடத்தில் ஆப்டோமெட்ரி அதிகம் தேவைப்படுகிறது. குறிப்பாக, கண் மருத்துவத்தில் ஆரம்பநிலை சிகிச்சை மேற்கொள்ளும் பணி வாய்ப்பை வழங்கும் ஆப்டோமெட்ரி படிப்பு என்று அழைத்து வருகின்றனர்.

ஆப்டோமெட்ரி என்பது கண் மற்றும் பார்வைப் பராமரிப்பைக் கையாளும் ஒரு சுகாதாரத் தொழிலாகும். ஒளியியல் நிபுணர்கள் முதன்மை சுகாதாரப் பயிற்சியாளர்களாக உள்ளனர், அதன் பொறுப்புகளில் ஒளிவிலகல் மற்றும் விநியோகம், கண் நிலைமைகளைக் கண்டறிதல் மற்றும் நிர்வகித்தல் மற்றும் காட்சி அமைப்பின் நிலைமைகளை மறுவாழ்வு செய்தல் ஆகியவை அடங்கும்.
சரியாக பார்வைத் தெரியாத நிலை இருத்தல், பரம்பரை ரீதியான பார்வைக் குறைபாடு, கண் தசைகளில் ஏற்படும் குறைபாடுகள் ஆகியவற்றுக்கு, நோயாளிகளின் கண்களைப் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கும் பணிகளை ஆப்டோமெட்ரிஸ்ட்கள் என்று அழைக்கப்படும் நிபுணர்கள் செய்கின்றனர்.
லோ விஷன், கான்டாக்ட் லென்ஸ், ரிப்ரேக்ஷன், பனோகுலர் விஷன் உட்பட சார்ந்த பணிகளில் ஆப்டோமெட்ரி படிப்பைப் படித்த மாணவ, மாணவிகளே பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். சேவை மனப்பான்மை உள்ள மாணவ, மாணவிகளுக்கு மிகவும் உகந்த படிப்பு ஆப்டோமெட்ரி என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முன்பு கண் கண்ணாடிகளை பொருத்துவதற்கு மட்டுமே பார்வையியல் வரையறுக்கப்பட்டது. அதேசமயம் இன்று, ஆப்டோமெட்ரிஸ்ட்களும் கண் நோய்களை பரிசோதித்து கண்டறிய உதவுகிறார்கள். கண்ணாடிகளை வழங்குவதற்கு கூடுதலாக, ஆப்டோமெட்ரிஸ்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் குறைந்த பார்வையை ஆதரிக்கும் சாதனங்கள் போன்ற சாதனங்களை வழங்குகிறது. பார்வை மருத்துவ நிபுணர்கள், ஆரம்ப சுகாதார சேவையாக நீரிழிவு மற்றும் தமனி இரத்தக் குழாயின்மை போன்ற நோய்களால் கண்களில் ஏற்படும் மாற்றங்களை, ஆரம்பகால நோயறிதல் மூலம் கண்டறிந்து சிகிச்சை தருகின்றனர்.

படிப்புகள் என்னென்ன
செயல்முறையை அதிகம் கொண்ட ஆப்டோமெட்ரி துறையில், இளநிலையில் ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் கூடிய பி.ஆப்டோமெட்ரி என்ற 4 ஆண்டு படிப்பும், முதுநிலை பட்டப்படிப்பாக, 2 ஆண்டு கொண்ட எம்.ஆப்டோமெட்ரி என்ற படிப்பும் வழங்கப்படுகிறது. இவற்றில் சேர்க்கை பெற & நீட் தேர்வை மாணவ, மாணவிகள் எழுத வேண்டிய அவசியமில்லை. பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளில் நிறைவு செய்த மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பில் சேரலாம். பிறகு, முதுநிலை பட்டப்படிப்பில் கான்டேக்ட் லென்ஸ், லோ விஷன், விஷன் தெரபி உட்பட பல்வேறு பிரிவுகளில் சிறப்பு பெறலாம். ஆராய்ச்சி வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேநேரத்தில் ஒரு மாணவர், எம்பிபிஎஸ் படிப்பிற்கு பிறகு ஆப்டோமெட்ரியை சிறப்பு பிரிவாக தேர்வு செய்து படித்தால் அவர்கள் ஆப்தமாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகின்றனர்.
கண் மருத்துவராக கருதப்படும் அவர்கள்தான், கண் சார்ந்த நோய்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கவும், நோயாளிகளின் நிலை அறிந்து தேவையான மருந்துகளை பரிசீலிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேர்க்கை செயல்முறை
ஆப்டோமெட்ரிக் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன்பின் தனிப்பட்ட நேர்காணலும் நடத்தப்படும். மாணவர்கள் சேரும் போது சரிபார்ப்புக்காக அனைத்து அசல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கல்லூரியில் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி (MoHFW), 4 வருடங்களுக்கும் குறைவான ஆப்டோமெட்ரி திட்டத்தை முடித்த மாணவர், OPTOMETRIST அல்ல, கண் மருத்துவ உதவியாளராக மட்டுமே கருதப்படுவார். ஒரு கண் உதவியாளர் கண் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே பயிற்சி செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
வாய்ப்புகள் என்னென்ன....
மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகள், கண் கண்ணாடி கடைகள், கண் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆப்டோமெட்ரி படிப்பவர்களுக்கு வெளிநாடுகளுக்கும் சென்று வேலை வாய்ப்பு பெறும் அவசியமும் உள்ளது. சுயதொழில் வாய்ப்பும் உண்டு. நாட்டில் அதிகளவிலான ஆப்டோமெட்ரி கல்லூரிகள் புதியதாக துவங்கப்படுவதால் ஆசிரியர் பணி வாய்ப்பும் இளைஞர்களுக்கு அதிக அளவில் உள்ளது. இதுபோன்ற படிப்புகளைப் படிக்கும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று வேலை செய்து அதிக பொருள் ஈட்டலாம்.
இந்த ஆப்டோ மெட்ரி படிப்பானது பார்வை அளவையியல் என்றும் ஆப்டோமெட்ரி (Optometry) என்றும் அழைக்கப்படுகிறது. உடல்நலம் (குறிப்பாக, கண்) சார்ந்த துணை மருத்துவப் படிப்பாக இது கருதப்படுகிறது. இது கண் நலன், பார்வை கூர்மை, பார்வையோடு இணைந்த மூளையின் நலம், கண் கண்ணாடிகள், கண் ஓர்வுகள், ஒளிக் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டப் படிப்பாக கருதப்படுகிறது. பார்வை அளவையியல் படித்தவர்கள் கண் பார்வை சோதனை வல்லுநர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
கண் பார்வை சோதனை வல்லுநர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் கண் மருத்துவர்கள் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கண் சார்ந்த மருத்துவர்கள் கண் மருத்துவர் (ophthalmologist) அல்லது கண் நரம்பியலாளர் அல்லது அறுவை மருத்துவர் (Eye Surgeon) எனப்படுவார்கள்.
கண் மருத்துவம் மற்றும் கண் அறுவையைச் செய்ய சிறப்பு மருத்துவ பட்டப் படிப்பை படித்த மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.
பார்வை சோதனை வல்லுநர்கள் கண் மருத்துவர்களுக்கு உதவி செய்கிறார்கள். எனவே, மேற்கண்ட ஆப்டோமெட்ரி படிப்பு கண் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்பாக கருதப்படுகிறது.
ஆப்டோமெட்ரி என்பது இந்தியாவில் ஆப்டோமெட்ரி கவுன்சிலால் கட்டுப்படுத்தப்படும் (உரிமம் பெற்ற பதிவுசெய்யப்பட்ட) ஒரு சுகாதாரப் பாதுகாப்புத் தொழிலாக அமைந்துள்ளது,
மேலும் ஆப்டோமெட்ரிஸ்டுகள் கண் மற்றும் காட்சி அமைப்பின் முதன்மை சுகாதாரப் பயிற்சியாளர்களாக உள்ளனர். ஒளியியல் நிபுணர்கள் ஒளிவிலகல் மற்றும் கண்ணாடிகளை விநியோகித்தல் மற்றும் கண்ணில் உள்ள நோயைக் கண்டறிதல் மற்றும் நிர்வகித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைச் செய்கிறார்கள். குறைந்த பார்வை / குருட்டுத்தன்மை உள்ளவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான ஆதரவையும் அவர்கள் வழங்குகிறார்கள்.
ஆப்டோமெட்ரியில் மாஸ்டர் புரோகிராம் ஆப்டோமெட்ரியில் பட்டதாரிகளுக்கு அவர்களின் அறிவை மேம்படுத்தவும், ஆப்டோமெட்ரி & விஷன் சயின்ஸின் பல்வேறு அம்சங்களில் நிபுணத்துவம் பெறவும் உதவுகிறது.
சென்னையில் உளள டாக்டர். அகர்வாலின் ஆப்டோமெட்ரி கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை நிறுவனத்தில் (DAIO) எம்எஸ்சி ஆப்டோமெட்ரி MSc Optometry என்பது புதுச்சேரியில் உள்ள பிரிஸ்ட் (PRIST) பல்கலைக்கழகத்துடன் இணைந்து முழுநேர முதுகலை படிப்பாக வழங்கப்படுகிறது.
இது இரண்டு வருட பட்டப்படிப்பு ஆகும், இது நான்கு செமஸ்டர் படிப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி, டாக்டர். அகர்வாலின் கண் மருத்துவமனைகள் மற்றும் கண் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பிரிவாக இது 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, மேலும் 2021 ஆம் ஆண்டு கல்வியாண்டில் எம்எஸ்சி ஆப்டோமெட்ரியை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்தக் கல்லூரி சங்கத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளது.
அதேபோல், பிஎஸ்சி ஆப்டோமெட்ரி ஒரு முழுநேர இளங்கலைப் படிப்பாக அமைந்துள்ளது. இது நான்கு ஆண்டு பட்டப்படிப்பு திட்டமாகும், இது எட்டு செமஸ்டர் படிப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு செமஸ்டர்களில், ஆறு செமஸ்டர்கள் கோட்பாட்டின் அடிப்படையிலானவை மற்றும் ஒன்று வகுப்பறையில் மேற்கொள்ளப்படுகின்றன, மீதமுள்ள இரண்டு செமஸ்டர்கள் பயிற்சி அடிப்படையிலானவை மற்றும் மூன்றாம் நிலை கண் பராமரிப்பு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகின்றன.
பிஎஸ்சி ஆப்டோமெட்ரி படிப்பு பட்டதாரிகளுக்கு பல்வேறு வகையான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் ஆரம்ப சுகாதாரம், கார்ப்பரேட், பொதுத்துறை போன்ற பல்வேறு அமைப்புகளில் பணியாற்றலாம் அல்லது ஆராய்ச்சி மற்றும் கல்வியாளர்களுக்கு உதவியாகக் கூட செல்லலாம்.


Click it and Unblock the Notifications












