பேலன்ஸ்டு வாழ்க்கையை வாழ்வோம் வாங்க !

Posted By:

பேலன்ஸ் வாழ்க்கை பாடம் மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர்கள், பெரியோர்களுக்கான பேலன்ஸ் லைப் லெசன்ஸ் .
ஹாய் நீங்கள் 20 வயதில் இருக்கின்றிர்களா அல்லது 40 வயது பெற்றோரா உங்களுக்கான சில என்ர்ஜிடிக் மந்திரங்கள் உங்களுடைய எண்ண ஓட்டத்தில் இருக்க வேண்டும். நீங்கள் மாணவர்களாக இருக்கலாம் அல்லது வேலை செய்பவராக இருக்கலாம் அல்லது படிப்பு மற்றும் வேலை இரண்டையும் செய்பவராக இருக்கலாம். என்ன செய்தாலும் அதில் ஒரு எதிக்கல் இருக்க வேண்டும். சரியோ தவறோ  ஏதாவது திருத்தம் வேண்டுமனா அதனை திருத்திகோங்க வாழ்க்கையில் கற்றுகொள்ள ரெடியா இருங்க. எப்பொழுதும் அடுத்தவங்க உங்களிடம் பேசும் போது மதிப்பு கொடுங்க காது கொடுத்து கேட்டு யோசிச்சு தேவைன்னா ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லைன்னா அப்படியே விட்டுவிடுங்க இந்த மாதிரி நிறைய வாழ்க்கை பாடங்கள் இருக்கு நாம் அதை எல்லாம் கண்டுக்கிறது இல்ல அதனாலதான வாழ்க்கையின் ஓட்டம் எந்திரத்தனமா இருக்கு.

இந்தியா போன்ற தேசங்களில் 20 வயது என்பது ஓடுர பாம்பை மிதிக்கும் வயது ஆகும். 40களில் என்னதான் நாய் குணம் இருந்தாலும் நல்லது கெட்டது தெரிஞ்சிருக்கும் வயசு அந்த வயசுக்குன்னு ஒரு பொறுப்புணர்ச்சி இருக்கும் அது நம்மை சிறப்பாக செயல்பட  நம்மை பின்தொடரும் கொஞ்சம் திரும்பி பருங்க.   
20 வயது அடைந்த இந்திய இளைஞர்கள் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைவருக்கும் சில அடிப்படை எனர்ஜி என்பது தானாகவே இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் எந்த ஒரு நிகழ்வையும் சிக்கலாகவே கருத மாட்டார்கள். நீங்கள் சிக்கலாக நினைக்கிற  இங்க உங்க கண்ணு முன்னாடி நடக்கிற பிரச்சனைளை ஒரு பிரச்சனையாகவே நின்னைக்க்காதிங்க. அப்போ நீங்க ரொம்ப ஆக்டீவா இருப்பிங்க.

நான் இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த கல்லுரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பெரியோர்களை  சந்தித்தேன். என்ன வேகம் என்ன துருதுருப்பு பைனல் இயர் படிச்ச்சுட்டு தொழில் செய்யும் அந்த யங்ஸ்டர்ஸ் மற்றும் சில்லுன்னு பேசும்  பெரியவர்களை  பார்த்துட்டு மெர்சலாயிட்டேன்.

டக்குடக்குன்னு செயல்படுற வேகம் அதோட எதிர்கால ஆலோசனை எப்படி என்ஜாய் பன்னனும்னு அவங்கலோட பிளான்ஸ் காமிசாங்க உங்களோட அதை சேர் பன்ரேன்.
தெரிஞ்சுகோங்க நீங்க்தான் உங்களுக்கான முதல் நாயகன் அதை நினைவில் வையுங்கன்னு சொல்லும் போது வாவ்ன்னு தோனுச்சு 

நீங்கள் அழகு :

நீங்கள் அழகு என்பதை ஒருநாளைக்கு எத்தனை முறை உங்களுக்குள் சொல்லிக்கொள்கிறிர்களோ அந்த அளவிற்கு நீங்கள் அழகுதான். இயற்கை எப்பொழுதும் தன்னை அழகு என நினைப்பதால்தான் அது பார்க்க அழகாக இருக்கின்றது. உங்களின் குறைகளை பாசிட்டாவாக மாத்துங்க அதுவே உங்களை உயர்த்தும்.

கேட்டதெல்லாம் கிடைக்கும்:

நீங்கள் விரும்பும் எதுவும் நீங்கள் கேட்ட மாறியே ஒரே நேரத்தில் ஒன்றும் செய்யமால் கிடைக்காது. நீங்கள் விரும்பும் எதுவும் உங்கள் முயற்சியின்படியே கிடைக்கும். கரைக்கட்டா சரியா முயற்சி செய்யுங்க கேட்டதெல்லாம் கிடைக்கும். தேவைக்கு ஏற்ப  கேழுங்க நிச்சயம் கிடைக்கும்.

பயப்படுறத முதல்ல செய்யுங்க:

எது உங்களை பயப்படுத்துதோ அதை முதலில் செய்யுங்க உங்களை எது பயத்துள்ளாக்குதோ அதனை நீங்கள் முதல்ல செய்யும் போது உங்களுக்கான செயல் வேகம் கற்றலில் ஆற்றல் அதிகரிக்கும்.
நீங்கள் காராத்தே கிட் படம் பார்த்திருப்பிங்க அதுல வர்ர குழந்தை ஜாக்கியும் பைனல் ரவுண்டுல அந்த குழந்தை கால் உடைக்கப்பட்டும் தொடர்ந்து விளையாடுனுங்க. காரணம் அந்த குழந்தை வெற்றி தோழ்வியை பற்றி சிந்திக்கல்ல பயத்த ஜெயிக்க தொடர்ந்து செயலப்பட்டு போட்டியை வென்றான்.
அதுதான் சிறப்பான ஒரு முடிவும் கூட நீங்கள் ஜெயிக்கிறிங்க தோக்குறிங்க அது முக்கியமில்லை ஆனால் நீங்கள் சிறந்து செயல்படுறிங்களா அதுதான் முக்கியம் .

நல்ல நண்பன்

நீங்கள் உங்கள் வாழ்கையில் தொடர்ந்து ஜெயிக்க மற்றும் தோழ்வியிலிருந்து மீட்க வாழ்வில் நீங்கள் விழுந்தால் உங்களை தொடர்ந்து செயல்பட வைக்க ஒரு சிறந்த நண்பர் நிச்சயம் தேவை, வாலிப காலத்து தோழர்கள் எப்போதும் ஸ்பெஷல்  தான் நமக்கு. ஆக உங்களை சுற்றி ஆயிரம் பேர் தேவையில்லை ஆனால் உண்மையான ஒருத்தர் தேவை என்பதை உணர்ந்து உங்களுக்கான நண்பரை தேடுங்க. நிச்சயம் உங்களுக்கான உண்மையான நன்பர் கிடைப்பாங்க நம்புங்க, கிடைக்கின்ற நண்பரை எப்பொழுதும் எதுக்காகவும்  இழக்காதிங்க.

வாய்பை வசமா பிடிங்க:

வாய்ப்புக்கள் உங்கள் கதவை தட்டும்பொழுது கதவை திறங்க பயன்படுத்துங்க. எப்பொழுதெல்லாம் உங்கள் வாய்ப்பு கதவுகள் மூடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் நீங்கள் உங்கள் ஜன்னலை திறந்து விடுங்கள் உங்களுக்கான நல்ல மாற்றம் நிச்சயம் கிடைக்கும் எனபதை முழுமையாக நம்புங்க.உங்களுக்கான வாய்ப்புகளை நீங்களே உருவாக்குங்க. தன்னம்பிக்கை தைரியம் எப்பொழுதும் இருகண்களாக இருக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

20களின் இறுதியில் வாழ்க்கை தடுமாறுகிறதா? வாங்க கொஞ்சம் அலசலாம்!

English summary
here article tells about life lessons to all

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia