இளநிலை மருத்துவ படிப்புகள், பிடிஎஸ் படிப்புகளில் சேர உதவுவதற்கான நீட் நுழைவுத் தேர்வு, மே 5-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்காக கடைசி கட்டத்தில் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து கீழே காணலாம்.
நீட் தேர்வு (NEET -தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) முன்பு AIPMT (அனைத்திந்திய மருத்துவத்துக்கு முந்தைய தேர்வு) என்று குறிப்பிடப்பட்டது. இது இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகும். மருத்துவத் துறையில் ஒரு தொழிலை உருவாக்க விரும்பும் மாணவர்களின் திறனைத் தீர்மானிக்க இந்த தேசிய அளவிலான தேர்வு தேசியத் தேர்வு முகமையால் (NTA -National Testing Agency) ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம். மேலும் வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்கவும் இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு (NEET Exam) என்பது தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வைக் குறிப்பதாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவப் பள்ளிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களால் நடத்தப்படும் ஒற்றை நிலை தேசியத் தேர்வாகும். மாநில அளவில் நடத்தப்படும் பல நுழைவுத் தேர்வுகளின் முறைக்குப் பதிலாக, 2020 ஆம் ஆண்டு முதல் AIIMS & JIPMER நிறுவனங்களில் சேருவதற்குத் தேவையான ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்வில், இயற்பியலில் 45 வினாக்கள், வேதியியலில் 45 வினாக்கள், உயிரியலில் (தாவரவியல், விலங்கியல்) 90 வினாக்கள் என மொத்தம் 180 வினாக்கள் இடம்பெறும். சரியான விடையைத் தேர்வு செய்யும் கொள்குறி வழியிலான இந்தத் தேர்வில், மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.
ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் வினாத்தாள் இருக்கும்.
நாளை இந்தத் தேர்வு நாடு முழுவதும் 557 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை, சுமார் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது.
நீட் தேர்வில் தகுதி பெற்றால் தான், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்வு கடைசி நேரத்தில் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
கவலை வேண்டாம்:
நீட் தேர்வுக்கு மாணவர்கள் நல்ல முறையில் தயாராகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் பதற்றம் அடையக் கூடாது. நீட் தேர்வு கடினமாக இருக்குமோ என்பது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் மாணவர்கள் பதற்றம் அடையாமல், அமைதியான மனநிலையில் இயல்பாக இருக்கவேண்டும். எந்தவித அநாவசிய பதற்றமோ, பயத்தையோ மாணவர்கள் கொள்ளக்கூடாது. இயல்பாக இருந்து தேர்வுக்குத் தயாராக வேண்டும்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற புத்திசாலித்தனமாகவும் விடாமுயற்சியாகவும் செயல்பட வேண்டியது அவசியம். நீட் தேர்வு (NEET) ஆர்வலர்கள் முக்கியமாக நீட் தேர்வு பரந்த அளவிலான நீட் தேர்வு பாடத்திட்டத்தை முழுமையாகப் படிக்கவேண்டும். அதிகமாக ரிவைஸ் செய்ய முடியாமல் சிரமப்படும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியாது. தேர்வில் முதல் சுற்றில் வெற்றி பெறுவது கடினம் என்றாலும் கூட, அது சாத்தியமே. முதல் பயணத்திலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான உறுதியான உறுதியுடன் கூடிய நம்பிக்கையான பாடத்திட்டத் தயாரிப்பை நாம் கொண்டிருக்கவேண்டும். இதன்மூலம் தேர்வில் வெற்றி பெறுவதற்கு அவர்களுக்கு அது ஒரு அற்புதமான உந்துதலாக உள்ளது

ரிவைஸ் செய்தல்:
நீட் தேர்வுக்காக இதுவரை படித்ததை நீங்கள் ரிவைஸ் செய்து பார்த்தாலே போதும்.
மேலும் மருத்துவப்படிப்புக்காக நீங்கள் இதுவரை படித்தவற்றை, குறிப்புகளாக எழுதியவற்றை எடுத்து மீண்டும் ஒரு முறை திருப்பிப் பாருங்கள். புதிய பாடங்கள் எதையும் படிக்க வேண்டாம்.
பலவீனமான பகுதி:
மாணவச் செல்வங்கள் நீட் தேர்வுக்கு இதுவரை சிறந்த முறையில் தயார் ஆகியிருப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இருந்தபோதும் மாணவர்களுக்கு கடினமான, பலவீனமான பகுதிகளை மறுபடி ஒருமுறை படிக்கலாம். பலவீனமான பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி படித்தல் நல்லது.
இயற்பியல், வேதியியல் சூத்திரங்கள், அறிவியல் பெயர்கள், சமன்பாடுகள் போன்றவற்றை நினைவுபடுத்தி பார்க்கலாம். முடிந்தால் ஒரு முறை பார்க்காமல் எழுதி பழகலாம்.
மேலும் பாடங்களில் சந்தேகம் ஏற்ப்டடால் பாடப் புத்தகங்களில் மட்டும் அதற்கான தீர்வை தேடவேண்டும். இன்டர்நெட், பிரிண்ட் அவுட் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து பதிலைத் தேடி குழப்பிக் கொள்ள வேண்டாம். தீர்க்கமான சரியான பதில் இருந்தால் அதைப் படித்துக் கொள்ளுதல் நலம்.
நேர மேலாண்மை
தேர்வுக் கூடத்தில் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகும். நேர மேலாண்மையைக் கடைப்பிடித்தால் மட்டுமே தேர்வில் நாம் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும்.
மேலும் நீட் தேர்வுக்கான பாடங்களில் வலுவான பகுதிகள் மற்றும் முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் கண்டுகொண்டு உங்கள் முடிவுகளை பகுப்பாய்வு செய்துகொள்ளுதல் நலமாகும்.
நீங்கள் பலவீனமான இருக்கும் பகுதிகள், பாடங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
நீங்கள் மிகவும் சவாலானதாகக் கருதும் பாடங்கள் அல்லது அத்தியாயங்களுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கிப் படிக்கவேண்டும்.
சிக்கலான கருத்துக்களை விளக்க ஆசிரியர்கள் அல்லது சக நண்பர்களிடம் உதவி பெறுவதற்கு மாணவர்கள் தயங்க வேண்டாம்.

மாதிரித் தேர்வுகள் எழுதுதல்:
மாதிரித் தேர்வு எழுத நேரம் இருந்தால், மாதிரித் தேர்வை எழுதி வெற்றி காண மாணவச் செல்வங்கள் முயற்சி செய்யவேண்டும். மேலும் நீட் தேர்வுகளின் முந்தைய ஆண்டு வினாத் தாள்களை பயிற்சி செய்து பார்க்கலாம்
முக்கியத்துவம்
அதிக அளவில் கேள்வி வரும் பகுதிகளுக்கு கடைசி நேரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு பாடத்திலும், எந்தெந்த அத்தியாயங்களில் இருந்து அதிக கேள்விகள் வந்துள்ளன என தெரிந்து கொண்டு அதுபோன்ற கேள்வி, பதில்களை மாணவச் செல்வங்கள் படிக்கலாம். முக்கிய பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி ரிவைஸ் செய்யலாம்.
மன அழுத்தத்தை குறைக்க தியானம் அல்லது குறுகிய நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்.
ஹால் டிக்கெட் தேவை:
நீட் தேர்வு மையத்துக்கு, தேர்வுக்கு அரை மணி முன்னதாகவே சென்று விடுதல் நலம். மேலும், நீட் தேர்வு வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆடைகள் கட்டுப்பாட்டை பின்பற்றவேண்டும்.
தேர்வுக் கூடத்துக்குச் செல்லும்முன்பு, ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பேனா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லவேண்டும். நாம் எந்த செய்யப்பட்ட பொருட்களை உடன் எடுத்துச் செல்லவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர் நீட் தேர்வு மையத்தில் நுழையவேண்டும்.
தேர்வின்போது...:
தேர்வுக்கூடத்துக்கு செல்லும்போது அநாவசிய பயம் தேவை. கடைசியாக, நீங்கள் படித்த பாடங்களில் இருந்து மட்டும்தான் இருந்துதான் கேள்வி வரும். எனவே பயப்படாமல், வினாத்தாளை எதிர்கொண்டு தேர்வை எழுதவேண்டும்.
ஒவ்வொரு கேள்வியையும் ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்து விடையளித்தல் நலம்.
குழப்பமாக இருந்தால் அந்த வினாக்களுக்கு கடைசி நேரத்தில் விடையளிக்கலாம். தெரிந்த கேள்விகள் அனைத்துக்கும் முதலிலேயே விடையை அளித்துவிடவேண்டும். தெரியாத கேள்விகளுக்கு கடைசி நேரத்தில் யோசித்து விடையளிக்கலாம்.
மேலும் குறிப்பிட்ட கேள்விக்கு விடை சரியாக தெரியவில்லையென்றால் அந்த கேள்வியை எழுதவேண்டாம். ஏனெனில் தவறான ஒவ்வொரு விடைக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
நீட் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...மாணவச் செல்வங்களே...!!


Click it and Unblock the Notifications












