ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டமும் மக்கள் அடையும் நலனும்

By Sobana

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் என்றால் இந்தியாவிலுள்ள நிதி சிக்கலை ஒழிக்கவும் நாட்டு மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னிருத்தி வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட நிலையிலும் இன்னும் நாட்டில் வங்கிகணக்குளற்ற மக்கள் வாழும் நிலை இருக்கின்றது.

பிராதான் மந்திரியின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு

இதனை போக்கவே ஜன்தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. ஜந்தன் யோஜனா திட்டத்தை அறிந்து கொள்வதுடன் அதன் திட்டகால செயல்பாடுகள் இவற்றில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் வங்கி பயன்பாடு

2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 24.7 கோடி குடும்ங்களில் 14.5 குடும்பங்களே வங்கி சேவையை ஏதேனும் வகையில் பயன்படுத்துகின்றன.

இந்திய வங்கியின் சமிபத்திய அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 73% விவசாயிகளுக்கு வங்கி கடன் வசதி கிடைக்கப் பெறுவதில்லை. சரியான வங்கி கணக்குகள் இல்லை.
இந்திய விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் பெறும் சூழல் நிலவுகின்றது,

இந்திய விவசாயிகள் பெரும்பாலும் பருவமழையை நம்பியுள்ளதால், பருவமழை பொய்த்து விளைச்சல் பாதிக்கப்படும் பொழுது வருமானமற்ற நிலை ஏற்படுகின்றது. வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடிவதில்லை இதனால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இல்லையெனில் வாங்கிய பணத்துக்காக தங்கள் நிலத்தை வழங்கி நகரங்களை நோக்கி வேலைக்கு செல்கின்றனர். இதனால் வேளாண் தொழில் பாதிப்பு, வறுமை பெருக்கம், நகர்புற வேலையின்மை அதிகரிப்பு, குடிசை பகுதிகள் வளர்ச்சி சுகாதாரமற்ற நிலைக்கு காரணமாகின்றன.

 

பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் இலக்குகள்:

தேசிய ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநரே ஜந்தன் யோஜனா திட்ட்டத்தின் இயக்குநராக இருப்பார். இந்த திட்டத்தை வெற்றிரகரமாக செலுத்த முதல் திட்டகாலம், இரண்டாம் திட்ட காலம் என இலக்குகளை பிரித்து ஜன்தன் யோஜனா திட்டங்கள் செயல்படும்.

முதல் திட்டகாலம் :

15 ஆஸ்ட்-2014 முதல் 15 இத்திட்டகாலத்தில் மூன்று அம்சங்கள் செயல்படுத்த அரசு செயல்பட்டது .

அடுத்த வரும் ஜனவரி 26, 2015க்குள் 7.5 கோடி குடும்பங்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட வேண்டும். ஜீரோ பேலன்ஸ் தொகையில் வங்கி கணக்குக்கள் துங்கலாம். ஒரு ரூபாய் கூட வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

வங்கி சேவை தொடர்பாக அடிப்படை அம்சங்கள் சேமிப்பு மற்றும் வங்கிகடன் பெறும் வழிமுறைகள் அனைத்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும்.

 

ஜன்தன் கணக்கு :

ஜன்தன் யோஜனாவில் வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடு வழங்கப்படும். ஜந்தன் யோஜனாவில் வங்கி கணக்கு முதல் நூறுநாட்களுக்கு தொடங்குவோர்க்கு இரண்டு லட்சதிற்கான விபத்து கால காப்பீடு வழங்கப்படும். வங்கிகணக்கு தொடங்கி ஆறு மாதம் காலம் ஆனபின்பு தேவைப்பட்டால் 5000 ரூபாய் ஓவர் டிராப்ட் பெறலாம்.

ருபே கார்டு :

ருபே என்ற பெயரில் டெபிட் கார்டு ஒன்றும் பெறலாம். ரூபே கார்டினை கொண்டு டெபிட் கார்டு ஒன்றும் வழங்கப்படும். இதனை வைத்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம். இணைய தளங்களில் பணம் செலுத்தவும் கடைகளில்பொருட்கள் பெற ரூபே கார்டு பெறலாம்.

இரண்டாவது திட்ட காலம் :

ஜன்தன் யோஜனா  திட்டத்தின் இரண்டாவது திட்டகாலம் ஆக்ஸ்ட் 15, 2015 முதல் ஆக்ஸ்ட் 15, 2018 வரையிலான காலகட்டமாகும்.

வங்கியில் கடன்பெறுவோர் அதை செலுத்த தவறும் போது வங்கிகளின் நிதி சுமையை பாதுகாக்கும் வரையில் கடன் உத்திரவாதநிதியம் ஒன்றும் உருவாக்கப்படும்.குறுங் காப்பீடு திட்டம் ஒன்றும் கொடுக்கப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஸ்வயலம்பன் ஓய்வூதிய திட்டத்தை போன்றதொரு ஓய்வூதியத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும்.

இரண்டாம் காலகட்டத்தில் மழை பிரதேசங்களில் வாழும் மக்களின் மீது கவனம் செலுத்தி முக்கியதுவம் கொடுக்கப்படும்.

 

அதிக வட்டிக்கு கடன்:

விவசாயிகளுக்கு கடன் வசதி கிடைக்க வங்கிகள் வழிவகை செய்யும். இதனால் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய அவசியம் இல்லை.

அரசு மானியங்கள், உதவித் தொகைகள் அனைத்தும் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதால் எந்த ஒரு கையூட்டும், இடைதரகர்கள் செயல்பாடு எதுவும் இருக்காது. சுரண்டல் ஒழிந்து முழுமையான தொகை பயணாளியை அடையும்.

 

சேமிப்பு :

வங்கி கணக்கு பலருக்கு முறையாக  இல்லை நிதியியல் தொடர்பான சரியான புரிதல் இல்லாததல்  பெருமாலானோர் தங்களது சேமிப்புகளை தங்கம் மற்றும் பணமாக வைத்திருக்கின்றனர்,

உலகிலேயே அதிகமான தங்க சேமிப்பு இந்தியாவில் இருந்தும் அவற்றில் 35% மட்டுமே வங்கியில் வைக்கப்படுகின்றது. இந்தியாவில் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது மிகக்குறைவான மூலதன திறட்சியே ஆகும்.

அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிகனக்கு இருப்பின் அதனை வங்கியில் சேமிக்கலாம் இதனால் வாடிக்கையாளருகு வட்டி கிடைப்பதோடு நாடு வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருக்கும் மூலதன பற்றாக்குறையால
கல்வி , சுகாதாரம். சமுக கட்டமைப்புகளுக்கு சாலை துறைமுகம் தொழிற் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்ய இயலாத நிலையுள்ளது.

 

கேள்வி தொகுப்புகள் :

1.  ஜன்தன் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
2.  ஜன்தன் திட்டம் எத்தனையாவது திட்ட காலத்தில் தற்பொழுது உள்ளது?
3.  மூலதன பற்றாகுறை என்றால் என்ன?
4.  ரூபே கார்டு என்றால் என்ன?
5.  ஜீரோ பேலன்ஸ் தொகை என்றால் என்ன?
6.  ஜன்தன் திட்டத்தின் முதல் திட்டகாலத்தில் எத்தனை அம்சங்கள் செயல்படுத்தவுள்ளன?
7.  குறுங்காபீட்டு திட்டம் என்றால் என்ன?

சார்ந்த பதிவுகள்:

வங்கி சீர்த்திருத்தம் மற்றும் இந்திய வங்கிகள் குறிந்து தெரிஞ்சுக்குவோம் 

மத்திய அரசின் திட்டங்களை கொண்டு மார்க்குகளை அல்லுவோம்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Article tells about Jandhan yojana plan and for aspirants

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more