10-வது முடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தில் உள்ள ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்களை அனுப்பலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.
தமிழக மாநிலத்தில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-2025-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 10-ம் தேதி (மே 10) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 07.06.2024 (ஜூன் 5) ஆகும்.
இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்.
இந்த மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
அலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் (WhatsApp) : 9499055612
10-வது முடித்த மாணவர்கள் அதிக அளவில் சேர்வது 11-ம் வகுப்பில்தான். அதற்கு அடுத்தபடியாக பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து டிப்ளமோ படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். மூன்றாவதகா ஐடிஐ போன்ற தொழிற்படிப்புகளில் சேர்ந்து படிக்க மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஐடிஐ போன்ற தொழில் படிகப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் நல்ல வேலைவாய்ப்புகள் இருப்பதால் மாணவர்கள் இதை அதிகம் தேர்வு செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications












