ஒரு போன் கால், டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக கூட வேலை போக சான்ஸ் இருக்கா?

Posted By: Gowtham Dhavamani

தொலைபேசி மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ உங்களை வேலையை விட்டு நீக்க இயலுமா ?

முடியும். நானே பாதிக்க பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்.
என்னோட அனுபவம் கடைசில இருக்கு. ஆனா உங்களுக்கு நடந்தா என்ன செய்யணும்?

வேலை போறதே ரொம்ப கஷ்டமான விஷயம். நம்ம வேலை எந்த நேரத்துலையும் நம்ம கிட்ட இருந்து போய்டும்னு தெரிஞ்சாலும், நம்ம முதலாளி அன்பா கூப்டு அந்த விஷயத்தை நம்ம கிட்ட பாசமா சொன்னாலும் உள்ள வலிக்கறது கண்டிப்பா இருக்கும். அப்பிடி இருக்க தொலைபேசிலையோ இல்ல மின்னஞ்சல்லையோ உங்களுக்கு இங்க வேலை இல்லைனு சொன்னா வெந்த எடத்துல வேல பாச்சுனத்துக்கு சமம் .

ஆனா வெகுவிரைவில் இது சாத்தியமாக வாய்ப்பு இருக்கு. உங்களுக்கு வேலை இல்லைன்னு சொல்ல அவுங்க ரொம்ப சிரமப்பட தேவை இல்ல. ஒரு மாசம் உங்களுக்கு முன்னாடியே சொல்லணும், ஒரு எச்சரிக்கை குடுக்கணும் இப்பிடி எதுவும் கிடையாது .

உங்களுக்கும் உங்க நிறுவனத்துக்கும் ஒரு ஒப்பந்தம் இருந்தால், இல்ல அதுக்குன்னு சட்ட திட்டங்கள் இருந்தால், உங்க நிறுவனத்தால அப்பிடி செய்ய முடியாது. இத படிக்கறப்போ உடனே உங்க மனசுல தோணும்,

நான் தான் வேலைக்கு சேரும்போது பத்து பக்கத்துல கையெழுத்து போட்டனே, அப்போ எனக்கு பாதிப்பு வராதுலன்னு. ஆனா அந்த பத்து பக்கத்துல என்ன இருந்துச்சுனு படிச்சு பாத்திங்களா? படிச்சுருந்தா கண்டிப்பா நிறுவனத்துக்கு தேவைப்பட்டா எந்த நேரத்துலையும் உங்க வேலைய காலி செய்ய இயலும்னு ஒரு கிளாஸ் இருக்கறது தெரிஞ்சுருக்கும்.

பணிநீக்க கொள்கைகள் :

தொலைபேசி மூலமோ அல்லது இ-மெயில் மூலமோ ஒருவரை பணிநீக்கம் செய்யறது நிறுவனத்துல நல்ல ஒரு சூழல்ல உருவாக்காதுன்னு நிறுவனத்துக்கு தெரியும். நிறுவனத்துல பணியாளர்கள் அதிக நாட்கள் உழைக்கறது இதுனால குறையும். ஒரு வித பயஉணர்வு எப்போமே வேளையாட்டாகள் கிட்ட இருக்கும்.

அதனால தான் மனிதவளத்துறைன்னு ஒண்ணு எல்லா நிறுவனத்துலையும் இருக்கும். எந்த சூழல்யுலையும் பணியாளர்களை அவுங்க தான் கையாளுவாங்க. ஒருத்தர பணிநீக்கம் செய்தா முதல்ல மனிதவளத்துறை கூட ஒரு நேர்காணல் இருக்கும். வேலைய விட்டு போறப்போ சில தகவல்களை உங்ககிட்ட இருந்து வாங்குவாங்க, அப்பறமா சில கையெழுத்தும் நீங்க போடவேண்டியதா இருக்கும். (exit formalities)

ஆனா இது எதுவுமே கண்டிப்பா இருக்கணும்னு அவசியம் இல்ல. அப்பிடி இல்லாம தொலைபேசில ஒரு குறுந்தகவலா கூட நீங்க வேலைக்கு வர வேணாம்ன்னு உங்க நிறுவனம் சொன்னா அதுக்கு நீங்க சட்டபூர்வமா ஒரு தடை கொண்டுவர முடியாது. ஆனா உங்க நிறுவனத்துல அதுக்காக ஒரு தொழிற்சங்கம் இருந்தா கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கு வேலைய தக்க வெச்சுக்க. ஏன் ஐடீ நிறுவனங்கள்ள சங்கம் அமைக்க விடறது இல்லைனு நீங்க புரிஞ்சுக்கலாம். அப்பிடி அமைச்சாலும் எவ்ளோ தூரம் அவுங்களால செயல்பட முடிஞ்சுருக்குனு நீங்க தெரிஞ்சுக்கலாம்.

 

பணிநீக்கம் செய்யப்பட்டா என்ன செய்ய ?

முதல்ல தம்பி படத்துல வர மாதவன் மாதிரி "இப்போ நா என்ன செய்ய? இப்போ நா என்ன செய்யன்னு" கோவப்படக்கூடாது.

1. சூழ்நிலை நிறுவனத்துல எப்பிடி இருக்கு?
2. உங்க மேலதிகாரி உங்கள எப்பிடி நடத்தறாரு?
3. உங்க வளர்ச்சிக்கு இந்த நிறுவனத்துல வாய்ப்பு இருக்கா இல்லையா?
4. நம்ம வேலைக்கு இங்க என்ன மரியாதை கிடைக்குது ?

இதுலாம் நீங்க யோசிக்கற ஆளா இருந்தா வேலை பறிபோகற நிலை வரும்போது நீங்க தயாரா இருப்பிங்க. இல்ல முந்திகிட்டு நீங்களே கிளம்பறேன்னு சொல்லுவீங்க. அதையும் மீறி எதிர்பாக்காம வேலை போயிட்டா, பொறுமையா உங்க மேலதிகாரிகிட்ட பேசுங்க, முடிஞ்சா அளவு நல்ல பேரோட வெளில வர முயற்சி செய்யுங்க. ஏன்னா நாளைக்கு அவுரு வேற நிறுவனத்துல இருந்து அங்க நீங்க வேலைக்கு போற வாய்ப்பு அமையலாம். அப்போ இந்த நல்ல பெயர் உங்களுக்கு பயன்படும். இத Dont burn the bridges ன்னு சொல்லுவாங்க.
அடுத்து நிறுவனம் உங்களுக்கு வேலைக்குடுக்கும் போது சொன்ன மாதிரி என்ன என்ன சலுகைகள் இருக்கோ அத்தனையும் சீக்கிரமா வாங்க பாருங்க. அடுத்த வேலை தேடற நேரத்தில அந்த பணம் பயன்படும்.

 

 

சரித்திரம் முக்கியம் அமைச்சரே!

முக்கியமா நீங்க வேலை செஞ்ச நிறுவனத்த பத்தி தவறா உங்க சமூக வலைத்தளங்கள்ள எழுதாதீங்க. ஏன்னா அடுத்த நிறுவனத்துல உங்களுக்கு நல்ல ஒரு வரவேற்பு இல்லாம போக அதுவும் காரணமா இருக்கலாம்.

என்னோட அனுபவம் :

3 வருஷம் ஒரு நிறுவனத்துக்காக வேலை செஞ்சேன். எந்த விதத்துலையும் என்னோட வேலைல குறை வெக்கல. நேரம் காலம் பாக்காம முடிஞ்ச அளவுக்கு அவுங்களுக்கு எந்த எந்த முறைல என்னால பயன் பட முடியுமோ அந்த அளவுக்கு பயன்பட்டேன். ஆனா GST ரூபத்துல எனக்கு வேட்டு வந்து சேந்துச்சு.

"எங்களால இதுக்கு மேல உங்களுக்கு இதே சம்பளம் தர இயலாது. வேணும்னா கம்மி சம்பளத்துக்கு நீங்க வேலை செய்யலாம். இல்ல freelancer வேலைக்கு இருங்க. வேலை இருந்தா உங்களுக்கு பணம் கண்டிப்பா வரும். சில நேரங்கள்ள இல்லாமையும் போகலாம்னு" சொன்னாங்க. அதுவும் தொலைபேசி மூலமாதான். 5 நிமிஷம் கூட அந்த பேச்சு நீடிக்கல. காரணம் நான் ரொம்ப சீக்கிரமா இல்லைங்க பரவால்ல நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேன். ஆனா இன்னமும் அந்த நிறுவனம் தேவை படரப்போ என்னை கூப்பிட்டு சில வேலைகள் செய்ய சொல்லி அதுக்கான சம்பளமும் குடுத்துட்டுதான் இருக்காங்க.

 

உங்க அனுபவம்?

அதுமட்டும் இல்லாம அந்த நிறுவன மேலதிகாரி மூலமா வேற ஒரு நல்ல வேலையும் அத விட அதிக சம்பளத்துல எனக்கு இப்போ கிடைச்சிருக்கு. அதனால இந்த கட்டுரை அனுபவத்துல எழுதுவது. முடிஞ்சா உங்க கருத்துகளை அனுபவங்களை கீழ கமெண்டுங்க!!

English summary
Is There Any Chance to Fire an Employee By Phone or Email?

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia