இந்தியாவின் அதிவேக ரயில் செய்பாட்டிற்கு வைர நாற்கர ரயில்பாதை திட்டம்

Posted By:

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றான போக்குர்த்தினை விரைவு படுத்த அதிவேக ரயிலினை இயக்க இந்தியா வைர நாற்கர ரயில்பாதை திட்டம்  ஒன்றை செயபடுத்த 2014 முதல் செயல்படுத்த திட்டமிட்டு ஜப்பான் உதவி பெற்று படிப்படியாக செயல்பாட்டினை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. 

வைர நாற்காலி ரயில்பாதை திட்டம் :

இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஆகிய நான்கு பிரதான மாநகரங்களை அதிவேக ரயில் பாதையின் மூலம் இணைக்கும் திட்டமே வைர நாற்கர திட்டம் ஆகும்.
இந்திய சாலையை உலகத் தரத்திற்கு தரமுள்ளதாக உருவாக்க பயணங்கள் எளிதாக்க இந்தியாவின் மிகப்பெரிய நெடுஞ்சாலை திட்டமாக 1999 ஆம் ஆண்டு தங்க நாற்கரச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்திய ரயில்வேகளை மேம்படுத்தி செயல்பட புல்லட் ரயில்களை இயக்க திட்டமிட்டு செயல்படுத்த முடிவு.   இதனையே வைர நாற்காலித் திட்டம் என்கின்றனர்.

அகலரயில் பாதை திட்டங்களாக அமையவுள்ள இந்திய ரயில்வே பாதை 6 இன்ச் முதல் 6 இன்ச் வரை 1676 கி.மீட்டருக்கு ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார், உத்திரபிரதேசம், டெல்லி, ஹரியானா, இராஜஸ்தான், குஜராத், மகாராசிடிரா, கர்நாடாகா, கேரளா, மாநிலங்களில் ஊடாகச் செல்லும்.

 

புல்லட் ரயில் திட்டம் :


அதிவிரைவு ரயில் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 1986 முதல் முன்வைக்கப்படுகின்றது. உலகில் அதிவேக ரயிலினை வளர்ச்சி அடைந்த நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. உலகின் அதிவேக ரயில் தொழில் நுட்பத்தில் ஜப்பானும், சீனாவும் முன்னனியில் உள்ளன. உலகின் முதல் அதிவேக ரயில் 1964இல் ஜப்பானில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அக்டோபர் 29,2013இல் அதிவிரைவு ரயில் கழகம் ஒன்று தொடங்கப்பட்டது . இந்திய ரயிவேதுறையால தொடங்கப்பட்ட நிறுவனம் இந்திய விகாஷ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.

 

இந்தியாவில் அதிவேக ரயில் :

இந்தியாவில் 2014, ஜூலை 3 முதல் ரயில்பாதையில் அதிவேக ரயிலினை இயக்க மணிக்கு 160 கிமீ முதல் 200கி மீட்ட்ர் வேகத்தில் இயக்க டெல்லி முதல் ஆக்ராவில் தொடங்கப்பட்டது. மணிக்கு 160 கிமீட்ட்ர் வேகத்தில் இயங்கி இந்தியாவில் முதல் செமி அதிவிரைவு ரயில் என்று பெயர் பெற்றுள்ளது. காட்டிமன் எக்ஸ்பிர்ஸ் என்னும் பெயரில் டெல்லி முதல் ஆக்ரா வரை இயங்கும் ரயில் சேவைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை 2014 நவம்பர் முதல் இயங்கியது. இந்தியாவில் வணிக ரீதியில் இயங்கும் அதிவிரைவு ரயில் என்னும் பெருமை பெற்றுள்ளது.

இந்தியாவில் செமி-அதிவிரைவு ரயில் வழித்தட திட்டங்கள் :

சென்னை- ஹைதிராபாத் 160- 200
டெல்லி - சண்டிகர் 160- 200
டெல்லி- கான்பூர் 160- 200
மும்பை-அகமதாபாத் 160-200
மும்பை -கோவா 160 200
மைசூர்-சென்னை-பெங்களூர் 160-200
நாக்பூர்-ராய்ப்பூர்-பிலாங்க்பூர் 160 -200
நாக்ப்பூர்-செக்ந்திராபாத் 160-200
இன்றைய நிலையில் இந்திய ரயில்வேயின் அதிக பட்ச வேகம் 130 கிமீட்டர். இந்தியன் ரயில்வேயில் 10,000 மீட்டர் அதிவேக ரயில்களை இணைக்க திட்டமிட்டுள்ளது இதற்கான அறிவிப்பினை வரும் ஏப்ரலில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

அதிவிரைவு ரயில்தடம்:

செமி- அதிவிரைவு ரயில் என்பது மணிக்கு 160-200 கிமீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனில் அதிவிரைவு ரயில் என்பது மணிக்கு மணிக்கு 250 கிமீட்டர் வேகத்திற்கு செல்வது ஆகும். இந்தியாவில் அதிவிரைவு ரயில் வழித்தடத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக வைர நாற்காழி ரயில் பாதை அமைக்கவுள்ளது. நவீன நகரங்களில் டையர் 1, டையர் 2 என்ற நகரங்கள் உருவாக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி :

இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சி திட்டத்திற்கு அதிக அளவில் செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்க அதிவைரைவு ரயில் திட்டத்தை தீட்ட முடிவெடுத்துள்ளது.

அன்னிய நேரடி முதளீடு எனப்படும் பொது மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் இத்திட்டம் எதிர்வரும் 2021இல் பயன்பாட்டிற்கு வரும்.
டெல்லி- கொல்கத்தா அதிவிரைவு பயணியர் வழித்தடம், டெல்லி- அமிர்தசரஸ் அதிவிரைவு பயணியர் வழித்தடம் ஹைதிராபாத் - சென்னை மற்றும் திருவனந்தபுரம் - சென்னை அதிவிரைவு பயணியர் வழித்தடங்களும் அமைக்கப்படவுள்ளது.

 

ஜப்பான் உதவி :

இந்தியா அதிவிரைவு ரயில், புல்லட் ரயில் திட்டத்திற்கான நிதியுதவியை தொழில் நுட்பத்தையும் அளிப்பதாக ஜப்பான அரசு முடிவெடுத்தது உறுதியளித்தது. அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு உதவுதாக 2015 முதல் ஜப்பான் அறிவித்து 33.8 பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக ஒப்பந்ததில் கையெழுத்திட்டது. இன்னும் இந்தியா இது தொடர்பாக நீண்ட திடட்ங்களை அறிவித்து செயல்படுத்த முன்னைப்போடு உள்ளது.

கேள்விகள்:

1.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் போக்குவரத்திற்கு ரயில்வே அமைச்சகம் எடுத்துள்ள புது முடிவு என்ன?
2.   நவீன நகரங்களி ரயில் தடங்களை எவ்வாறு அமைக்க வாய்ப்புள்ளது?
3.  இந்தியாவின் தங்க நாற்கரச்சாலை திட்டம் என்பது என்ன?
4.  இந்தியாவின் முதல் செமி ரயில்வே திட்டம் இயக்கப்பட்டது எந்த இரு நகரங்களில் ?
5. முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்திய நாடு எது ?
6. இந்தியாவின் அதிவேக ரயில் திட்டத்திற்கு உதவ ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ள நாடு எது?

சார்ந்த பதிவுகள்:

வரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன இந்தியாவில் விதிக்கப்படும் வரிமுறை அறிவோம்

English summary
Article tells about new plan of Railways

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia