Independence Day: பாரதியாருக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் யார் தெரியுமா?

இந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்ட வீரர்களில் தவிர்க்க முடியாத தமிழர் மகாகவி. தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, சாதி மறுப்பு என தமிழர்களால் இன்றும் நினைவுகூரப்பட்டு வரும் மாபெரும் போராளி.

 
Independence Day: பாரதியாருக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் யார் தெரியுமா?

மொழிப் பற்று மட்டுமின்றி, அன்று நாட்டின் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக இவர் எழுதிய கட்டுரைகளும், கவிதைகளும் இன்றும் நம் மத்தியில் ஒருவித போராட்டத் தீயை எரியவிட்டுக்கொண்டே இருக்கிறது. மகாகவி பாரதி குறித்த மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம் வாங்க.

பாரதியாரின் சொந்த ஊர்

பாரதியாரின் சொந்த ஊர்

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் 1882 டிசம்பர் 11 அன்று பிறந்தவர் பாரதி. பெற்றோர் சூட்டிய பெயர் சுப்பிரமணியன். தனது இளம் வயதிலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டிருந்த இவருக்கு எட்டையபுரம் சமஸ்தான புலவர்கள் வியந்து அளித்த பட்டம் தான் பாரதி. அன்று முதல் சுப்பிரமணிய பாரதியார் என அழைக்கப்பெற்றார்.

பள்ளி படிக்கும்போதே திருமணம்

பள்ளி படிக்கும்போதே திருமணம்

பாரதியார் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். வாழ்நாள் முழுவதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும், மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

விடுதலைப் போரில் பாரதியின் பங்கு
 

விடுதலைப் போரில் பாரதியின் பங்கு

இந்திய சுதந்திரப் போரில் பாரதியின் பங்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர் எழுதிய உணர்ச்சிப் பூர்வமான பாடல்கள் காட்டுத்தீயார் தமிழர்களை வீருகொள்ளச் செய்தது. பாரதியாரின் இந்திய பத்திரிகையின் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டும் வகையில் பல கட்டுரைகள் வெளிவந்தன. தொடர்ந்து, சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தூக்கி வீசிய யானை

தூக்கி வீசிய யானை

விடுதலைக்காக வீர தமிழ் முழக்கம் எழுப்பிய பாரதி 1921 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த கோவில் யானையால் தூக்கி வீசப்பட்டு மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921 செப்டம்பர் 11 அன்று தனது 39 வயதில் உயிரிழந்தார்.

டிஎன்பிஎஸ்சி பாரதியார் கேள்விகள்

டிஎன்பிஎஸ்சி பாரதியார் கேள்விகள்

பாரதியார் வாழ்ந்த காலம் - 11.12.1882 முதல் 11.09.1921

பாரதியாரின் சொந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்

பாரதியாரின் பெற்றோர் - சின்னச்சாமி ஐயர் - லட்சுமி அம்மாள்

பாரதியாரின் இயற்பெயர் - சுப்பிரமணிய பாரதியார்

பாரதியாரின் சிறப்பு பெயர்கள் - மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்

பாரதிக்கு மகாகவி என பட்டம் கொததவர் - வ.ரா. (ராமசாமி அய்யங்கார்)

பாரதியார் தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

பாரதியார் எந்த பத்திரிகையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் ? இந்தியா என்ற வாரப் பத்திரிகை

பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி எது ? மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி (1904)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Independence Day: unknown facts about Subramniya Bharathi
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X