ஐஏஎஸ் இணடர்வியூ கேள்விகளின் தன்மை மற்றும் சுமார்ட் விடைகள்

Posted By:

ஐஏஎஸ் இண்டர்வியூ தேர்வும் டிரிக்கி கேள்வி பதில்களும் கேள்விகள் உருவான விதம் சுமார்ட் விடைகள் குறித்து நாம் அறிந்து கொள்வோம்.

பொதுவாகவே ஒரு வேலைக்கு போகனும்ன்னா  அந்த வேலைக்கு போவதில் பல்வேறு வழிமுறைகள் கையாள வேண்டும். ஐஏஎஸ் வேலை என்னும் சிவில் சர்வீஸ் துறையிலும் பிரிலிம்ஸ், மெயின்ஸ், இண்டர்வியூ போன்ற மூன்று தேர்வுகளை வென்று மூன்றிலும் தேர்வு எழுதுவோர்கள் பெற்ற மதிபெண்கள் மதிபிடப்பட்டு அவர்களுக்கான ரேங்கிங் பொருத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆஎஎஸ் என தர வரிசையில் மாற்றம் ஏற்படுகின்றது.

இந்த தர வரிசையில் டாப்பர் லெவலில் ஐஏஎஸ் ரேங்கிங் வரவேண்டுமெனில் இது குறித்து முழுமையாக மூன்று தேர்வுகளையும் வெற்றி பெற வேண்டும். பிரிலிம்ஸ், மெயின்ஸ் தேர்வுகள் எல்லாம் எழுத்து தேர்வுகளாக இருக்க ஐஏஎஸ் இண்டர்வியூ ஐந்து பேர் கொண்ட இண்டர்வியூ பேனலை பொருத்து கேள்விகள் சரமாரியாக விழும். நீங்கள் எந்த அளவிற்கு ஆளுமை தன்மையுடன் சரியாக விடை அளிக்கிறிர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கான விடை கிடைக்கும்.

ஐஏஎஸ் இண்டர்வியூவில் கேட்கப்பட்ட சில டிரிக்கி கேள்விகள் அத்துடன் தேர்வு எழுதுவோர்கள் அந்த கேள்விகளை எவ்வாறு சமாளித்தனர் என்பதை விளக்குகிறோம்.

ஐஏஎஸ் இண்டர்வியூ தேர்வினை பொருத்தவரை ஆளுமை திறன், கரண்ட் அபைர்ஸ் எனப்படும் நடப்பு  நிகழ்வுகளின் முக்கியத்துவங்கள் அதன் பின்னனி, சில சமயம் நமது குணாதிசயங்கள் எப்படிபட்டது எந்த அளவிற்கு நாம் ஒரு சிக்கலை கையாலுகின்றோம்  என்பதை கணிக்கவே இண்டர்வியூவானது மிகச்சிறப்பு பெறுகின்றது.

ஜேம்ஸ் பாண்ட் ஏரோபிளேனிலிருந்து பாராசூட் இல்லாமல் கிழே விழுந்தும் எவ்வாறு உயிரோடு இருக்கின்றார்

கேள்வியின் பின்புலம் :

கேள்வியின் பின்புலம் தேர்வர்க்கு ஒரு சூழல் கொடுக்கப்பட்டு அந்த சூழலை எவ்வாறு சமாளிப்பார், கொடுக்கப்ப்ட்ட சூழலுக்கு குறிப்பிட்ட நேரத்தில் டக்கென்று விடை கொடுக்கும் தன்மை எவ்வாறு என பரிசோதிப்பார்கள். அதற்காகவே இண்டர்வியூவர் இந்த ஜேம்ஸ் பாண்ட் சூழலை கொடுத்து பரிசோதிக்கின்றனர்.

விடை:

ஜேம்ஸ் பாண்ட் கிழே விழுந்தும் உயிரோடு இருக்கின்றார் எனில் அவர் அதிக உயரத்தில் இருந்து விழுந்திருக்க மாட்டார், பாராசூட் இல்லாமல் கிழே விழுந்தார் எனில் பாராசூட்டின் தேவை உயர பறக்கும் போது மட்டும் இருக்கும் ஆகையால் இதனை தேர்வு எழுதுவோர் இதனை சிந்திக்க வேண்டும்.

என்னப்பா இண்டர்வியூ ஹாலில் இதெல்லாம் யோசிக்க முடியுமா என்றால், யோசிக்க வேண்டும் அதுதான் ஐஏஎஸ் இண்டர்வியூ என்பார்கள். சுமார்டாக யோசித்து கொடுக்கப்படட் கேள்விகளுக்குதான் வேலை என்பது தெரிந்த விஷயமே.

ஆகவே தேர்வு எழுதுவோர் இது குறித்து சிந்தித்து  ஜேம்ஸ்பாண்ட் கிழே விழுந்தது ரன்வேயில் அதனால் அவர் உயிருடன் இருக்கின்றார் என்ற விடைக்கே வேலை கிடைத்தது.

 

யானையை ஒத்தகையுடன் எவ்வாறு தூக்குவது

கேள்வியின் பின்புலம்:

ஓரு யானையை எப்படி ஒத்தகையுடன் தூக்குவீர்கள் என்றால் யானைக்கென்று தனியாக கைகள் இல்லையென்பதனை நாம் சிந்திக்க வேண்டும்.கை இல்லாத யானையை எப்படி தூக்க முடியும் என்பது கேள்வி. அத்துடன் முடியாத என்ற ஒரு செயலை  எவ்வாறு லாஜிக்கலாக சுட்டிக்காட்டுகிறிர்கள் என்ற பரிசோதனையே இந்த கேள்வி 

விடை: ஆகவே எந்த யானைக்கும் கையில்லை என்ற சுமார்டாக விடை கொடுக்கப் பட்டது. ஆகவே யானைக்கு கையில்லை அதனால் ஒரு கையுடன் தூக்குவது இயலாது என்ற விடை பொருந்துவதாக இருந்தது. 

Image Source

வெள்ளி, சனி,ஞாயிறு தொடர்ந்து வரும் நாட்களை அவற்றின் பெயர்களின்றி எவ்வாறு சுட்டிக்காட்டுவீர்கள்

கேள்வியின் போக்கு :

தொடர்ந்து வரும் நாட்களை எவ்வாறு குறிப்பிட  முடியும், வேறு எளிய வழி என்ன என்று சிந்திக்க வேண்டும். தொடர்ந்து வரும் நாட்களின் பெயர்களை உச்சரிக்க முடியாது என்னும் பட்சத்தில் எளிதாக கொடுக்கப்பட வேண்டிய விடையானது என்னவென்று சிந்தித்து பதிலளிக்க வேண்டும். தேர்வர்கள் மாற்று வழிகளை சிந்திக்கும் போக்கு எவ்வாறு என்பது இக்கேள்விக்கான விடையை வைத்து  தெரிந்து கொள்ளலாம்.  ஒரு இடத்திற்கு செல்லும் பல்வேறு வழிகளை போல இந்த கேள்வி அமைந்திருக்கின்றது.

விடை:

விடையானது நேற்று, இன்று, நாளை என்று தொடர்ந்து வந்த நாட்கள் பெயர்கள் இல்லாமல் சுட்டிகாட்டப்பட்டது இதுவே சுமார்ட் விடை.

 

சைவம் அசைவப் பிரியர் :

இண்டர்வியூ போர்டினை அனலைஸ் செய்து பதலளித்தல் சிறந்த ஒரு யுக்தி ஆகும்

நண்பர் ஒருவர் இண்டர்வியூ போர்டில் இருக்கும் பொழுது அவருடைய ஹாபியில் சமைப்பது எனறு கொடுத்திருந்தார் இதை வைத்து கேள்விகள் கேட்கப்பட்டது.

இண்டர்வியூவில் உங்களுக்கு பிடித்த உணவை சமைத்து காட்டுங்கள் என்ற பொழுது நண்பர் ஆர்வமாக சிக்கன் வருவல் சமைத்து காட்டினார். ஆனால் இண்டர்வியூவர் முகமோ வேறுவிதமாக   இருந்தது என்னவென்று நண்பர் கேட்டபொழுது, கேள்வி இண்டர்வியூவர் ஒரு சைவ பிரியர் என்றும் தனக்கு சைவம் மட்டுமே தெரியும் என்று கூற நண்பர் ஒருவழியாக நெளிந்து தயிர் சாதம் செய்யும் முறையை பக்குவமாக கொஞ்சம் டெக்ரேசன் செய்து அசத்தினார். இவ்வாறு ஒரு எதிர்ப்பாரத சுழலை நாம் எதிர்கொண்டு சமாளிக்கும் பொழுதுதான் நமது திறனை அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

 

 

சார்ந்த பதிவுகள்:

ராமன் எங்கு முதல் தீபாவளி கொண்டாடினார் ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள்

English summary
Article tells about IAS interview questions and smart answer

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia