ராமன் எங்கு முதல் தீபாவளி கொண்டாடினார் ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள்

By Sobana

ஐஏஎஸ் கனவு கொண்டவர்களே துன்பம் வரும் வேலையில்  சிரியுங்க என்று வள்ளூவர் சொல்லி வச்சார் சரியுங்க அதுக்கு என்னங்க அப்பிடின்னு கேக்ரீங்களா அதாங்க ஏன் வள்ளுவர் அப்படி சொன்னார்ன்னா.
எந்த ஒரு சூழலிலும் நிலைத்த தன்மை மற்றும் தடுமாறத போக்கு இருக்க வேண்டும். ஆனால் நாம என்னதான் சரியாக இருந்தாலும் நம்மால் நிச்சயம் தடுமாறமல் இருக்க முடியாது அதுவும் இண்டர்வியூ நேரத்தில் சொல்ல வேண்டுமா என்ன அதற்குதான் எப்பொழுதும் சகிப்புத் தன்மை நிதானம் தவறாது பண்புடன்  இருக்க வேண்டும் .

கிளவரான ஐஏஎஸ் கேள்விகள் கூலான பதில்கள்

 

இந்த சகிப்புதன்மையும் பொறுமையும் அழகாக டீல் செய்யும் விதம்தான் நிறை அட்டராக்ஸன் கொடுக்குது அதுவும் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியாளரின் செயல்பாடுகள் நம்மில் பலருக்கு அந்த பதவியின்  மீது மோகமும் அதற்கான முயற்சியும் எடுக்க வைத்திருக்கும் அதென்னவோ உண்மைதான் அதே பிராப்ளம் எனக்கும் உண்டு நானும் அந்த யூபிஎஸ்சி தேர்வினை முயற்சித்தவள்தான்.  
இந்த ஐஏஎஸ் தேர்வினை பொறுத்தவரை பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வுக்கெல்லாம் பயபடாமல் அடிச்சி வீசும் நம்ம ஆட்கள் ஏன் இண்டர்வியூன்னா இப்படி ஆகுறாங்கன்னு தெரிஞ்சுக்கனும் . தேர்வர்களிடம் கிடுக்கு பிடி கேள்விகளை கேட்டு தினர வைத்து அவர்களை உணர்ச்சி வசப்பட வைத்த பல கேள்விகள் யூபிஎஸ்சி போர்டில் நடந்துள்ளன.

கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா

கடினமான கேள்வி ஒன்று வேண்டுமா அல்லது எளிய கேள்விகள் வேண்டுமா என்று யுபிஎஸ்சி போர்டில் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்வர் ஒருவர் எனக்கு கடினமான கேள்விதான் வேண்டும் என்றார். அதன் பொருட்டு கேக்ப்பட்ட கேள்வி
கடினமான கேள்வியாக கோழியிலிருந்து முட்டை வந்தந்தா முட்டையில் இருந்து கோழி வந்ததா என கேள்விகள் கேட்கப்பட்டது!
இண்டர்வியூ போர்டிக்கான 
கேண்டிடேட் கொடுத்த விடையானது முட்டையிலிருந்துதான் கோழி வந்தது என்றார்
இண்டர்வியூவர் அதெப்படி என கேட்க, அதற்கு தேர்வர் சார் நீங்க கஷ்டமான கேள்வி ஒன்று கேக்ரிங்கன்னு சொன்னிங்க சோ இப்ப நீங்க இரண்டாம் கேள்வி கேட்கரிங்க சார், நீங்க சொன்னது என்னாச்சு என்றார்.
இந்த சாமார்த்தியமான பதிலால் கேள்வி கேட்டவர் மகிழ்ச்சியுற்றார்.
விடைகொடுத்த தேர்வர்க்கு வேலை கொடுத்தார்.

உங்கள் தாயை பிராஸ்டியூட் என்று அழைத்தால்

உங்கள் தாயை பிராஸ்டியூட் என்று நான் அழைத்தால் இந்த கேள்வியை கேள்விப்பட்ட தேர்வர்கள் மிகுந்த கோபமும் எமோசனல் ஆனதுடன் இண்டர்வியூவினை இழந்தனர் ஆனால் இந்த கேள்விக்கு ஒரே ஒருவர் மட்டும் கூலாக பதில் அளித்தார்.

அவர் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வர் கொடுத்த விடை என் தாய் பிராஸ்டுயூட் ஆனால் அவர்க்கு என் தந்தை மட்டும்தான் கஷ்டமர் என விடை கொடுத்தவர்க்கு வேலை கிடைத்தது.
இம்மாதிரியான கேள்விகளின் பின்னனி தெரியாமல் இண்டர்வியூவில் பலர் தடுமாறுகின்றனர். இதனை விடுத்து   பறந்துப்பட்ட யோசனையில் விடை சொல்ல வேண்டும்

எள்ளுண்ணா எண்ணெய்யாக இருக்கனும்

கேட்கும் கேள்விகளுக்கு நச்சுன்னு நாலு பதிலோடு நாசூக்காக இருப்பதுடன் எள் என்றால் எண்ணெய்யாக   இருக்க வேண்டும். அதனைதான் இண்டர்வியூவர் ஒரு கப்பில் நீரை நிரப்ப கேண்டிடேடிடம் கேட்டார்.
கேண்டிடேட் உடனே கப் நிறைய தண்ணீர் ஊற்றினார் மேலும் நிரம்ப வழிந்தப்பின் நீரை ஊற்றினார். இண்டர்வியூவர் என்ன இது ஏண் நிரம்பி வழிய விடுகிறிர்கள் என்று கேட்டார் அதற்கு கேண்டிடேட் கொடுத்த பதிலானது. செய்யும் வேளையில் எப்பொழுதும் 110 % இருக்க வேண்டும் என்றார். இப்பதிலானது கேள்வி கேட்போரை திகைக்க வைத்தது. வேலை கொடுக்க வைத்தது

விரிசலின்றி முட்டையை கான்கிரிட் தளத்தில் கிரேக் இல்லாமல் உடைப்பது எப்படி

என்னப்பா இதெல்லாம் கேள்வியா என்றால் ஆம் இதுவும் கேள்விகளாக கேட்கப்பட்டது. கேண்டிடேட்
காங்கிரிட் மிகுந்த கனமானது ஆகையால் முட்டையால் காங்கிரிட் தளத்தை கிரேக் செய்ய முடியாது என பதில் கொடுத்தார். இதுவே கிளவர் ஆன்சர் ஆகும்.

ராமர் எங்கு தன்னுடைய் முதல் தீபாவளியை கொண்டாடினார்

ராமர் தன்னுடைய முதல் தீபாவளியை அயோத்தியாவில் கொண்டாடினாரா அல்லது வேரெங்கு கொண்டியிருப்பார் என்று சாமனியரை சிந்திக்க வைக்கும். ஆனால் இந்த கேள்வியானது பள்ளி படிப்பில் நாம் படித்த பாடத்தை சோதிக்கச் செய்யும் கேள்வியாகும் . இந்த கேள்வி நாம் ஏற்கனவே பிரியமான தோழி என்ற படத்தில் பார்த்துவிட்டோம் என்ற நினைக்கிறிர்களா அந்த கேள்விகள் யூபிஎஸ்சியில் கேட்கப்பட்டது அதனைதான் நாம் பார்த்த படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இந்த கேள்விக்கான விடையானது நரகாசுரனை கொன்றதால் தீபாவளி கொண்டாடுகின்றோம் என்ற பதத்தில் விடை இருக்கின்றது.
நரகாசுரனை கொன்றது யார் கிருஷ்ணன் ஆக கிருஷண் அவதாரத்திற்கு முன்பு ராம அவதாரம் இருந்தது எனவே ராமரருடைய காலத்தில் தீபவாளி இல்லை என்ற விடை கிடைத்தது. இம்மாதிரியான கேள்விகளுக்கு எப்பொழுதும் எங்கும் பி அலாட்டாக இருந்து பதில் கொடுக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றது.

சார்ந்த பதிவுகள் :

முட்டையிடாத மயில் எவ்வாறு குஞ்சு பொறிக்கும் ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  here article tells about Ias Interview questions practice for aspirants

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more