போட்டி தேர்வு எழுதுவோர்களே நீங்கள் நீண்டது என ஒதுக்கும் வரலாறு பாடம் படிக்கும் குறிப்பு அறிவோம்

Posted By:

போட்டி தேர்வுக்கான டிப்ஸ் நாம் இப்போது போட்டி தேர்வின் முக்கிய பகுதியான வரலாறு படிக்கும் முறை அறிந்து கொள்வோம் . பொது அறிவு பாடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தவிர்க்க முடியாத பாடமென்றால் அது வரலாறுதான் அது குறித்து நாம் அறிய வேண்டும் .
வரலாறு பாடம் மிகவும் பெரிதாக இருக்குமென்றும் அது தொன்மை இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா, நடப்பு இந்தியா என்று பிரிக்கப்படுகிறது.இதனை கேட்கும் போது தலைசுத்துகிறதா போட்டி தேர்வாளர்களே ,, இது ரொம்ப ஈஸிதான் ஆனால் இது குறித்து அறிய நாம் ஆர்வம் காட்டுவதில்லை .

வரலாறு பாடம் போட்டி தேர்வின் முக்கிய அம்சம் அத்துடம் மதிபெண் வேட்டைக்கு உதவும்


நீங்கள் எந்த அளவிற்கு பாடங்களில் விருப்பம் காட்டுகிறீர்களோ அந்த அளவிற்கு தேர்வில் வெற்றி பெறலாம் எல்லாம் ஆர்வத்தின் போக்கில்தான உள்ளது .
போட்டி தேர்வு எழுதும் நீங்கள் பழங்கால இந்தியா அல்லது நவீன இந்தியா அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும் . ஆனால் நாம் போதிய ஆர்வம் காட்டுவதில்லை ஆதலால் தான் நாம் வரலாறு என்றாலே அகலமானது நீண்டது என்ற போக்கில் விட்டுவிடுகிறோம் ,அந்த போக்கை நிறுத்துவோம் .
போட்டி தேர்வில் வெல்ல மதிபெண் வேட்டைக்கு வரலாறுதான் என்றும் நல்ல வழியாக கருதப்படுகிறது .

போட்டி தேர்வில் பழங்கால இந்தியா அல்லது இடைக்கால இந்தியா அல்லது நவீன இந்தியா இத்தகைய பாடபகுதிகளில் நீங்கள் மெயினாக படிக்க வேண்டியவற்றை கூறுகிறேன்.
போட்டி தேர்வில் பழங்கால இந்தியாவில் சிந்து வெளி நாகரிக இடங்கள் அதன் பழைய பெயர் மாற்றப்பட்ட பெயர் அல்லது தற்கால பெயர் தெரிந்திருக்க வேண்டும் அத்துடன் பெயர் காரணங்கள் அறிந்திருக்க வேண்டும் உதரணமாக மொகஞ்சதாரோ என்பதன் அர்த்தம் போன்றவை அறிந்து வைத்துகொள்ள வேண்டும் . மேலும் நாகரீக வசதிகள் , குடியிருப்புகள் எந்த இடத்தில் எது சிறப்பு என்பது அறிந்திருக்க வேண்டும் . சிந்து வெளி ஆராய்ச்சியாளர்கள் யார் எந்த பகுதியை கண்டு பிடித்தார்கள் அவர்கள் கண்டு பிடித்த வருடம் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இப்பகுதியில் நிச்சயம் எதேனும் ஒரு கேள்விகள் கேட்க வாய்ப்புண்டு

வேத காலம்,  நான்கு வேதகாலம் அதன் சிறப்புகள் எந்த வேதம் எப்பொழுது என்னசெய்தது, வேதகால் வாழ்கை முறை, வேதகால பழக்க வழக்கங்கள், வேதகால பெண்கள், கல்வி அறிந்திருக்க வேண்டும். வேத காலத்திற்கு பின் என்ன நடந்தது என்பதும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். வேதகாலத்திற்கு பின் மக்கள் வாழ்கை முறை அறிந்திருக்க வேண்டும் .

மகா ஜனபதங்கள் அவற்றின் 16 இடங்கள் தற்போதைய பகுதிகள் அரசர்கள், சிறப்பு பெயர் பெற்ற அரசுகள் அதன் நதிகள் பழைய மற்றும் புதிய பெயர்கள். கோலோச்சிய அரச பகுதிகள் அனைத்தும் அறிந்து கொள்ள வேண்டும் .

பொளத்தம், சமணம் சமயங்களில் மகாவீரர், புத்தர் வாழ்கை முறைகள் அவற்றிற்க்கான சிறப்பு பெயர்கள் , இருவரும் நடத்திய போதனை இருவரையும் பின்பற்றி வந்த அரசர்கள் மற்றும் புத்த , சமண பிரிவுகள் அத்துடன் அவர்கள் அறிமுகப்படுத்திய வாழ்கை முறைகள் மற்றும் புத்த மற்றும் சமண சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள் மற்றும் அவற்றிற்கு தலைமையேற்ற தலைவர்கள் , புத்த சமயம் மாநாடு நடைபெற்ற இடங்கள் அறிந்து கொள்ள வேண்டும் . மேலே நான் குறிப்பிட்ட அந்த குறிப்புளை தனியாக அமர்ந்து தொகுத்து பாருங்கள் உங்கள் கையில் 5 கேள்விகளுக்கு எந்த போட்டி தேர்விலும் விடையளிக்கும் அளவிற்கு திறனுடன் இருப்பீர்கள் .மீண்டும் அடுத்த பதிவில் விளக்குகிறேன் .

சார்ந்த பதிவுகள் :

போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் கேரியர் இந்தியா தொகுத்து வழங்குகிறது 

மாயவலைவெல்வோம் டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வெல்வோம்

 

 

English summary
above article deal about history topics key words to get marks in tnpsc examination

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia