மாயவலைவெல்வோம் டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வெல்வோம்

Posted By:

நாம் குரங்காரா :

டிஎன்பிஎஸ்சி மாணவர்களே ... உங்களுக்கான என்னுடைய அடுத்த டிப்ஸ் நேற்று வரை நாம் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழில் நாம் எவ்வாறு கையால்வது பாதிகிணரை தாண்டும் வழியறிந்தோம் அத்துடன் முடியவில்லை இது எப்போதும் முடியாது . நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்புத்தன்மையுண்டு .அத்துடன் மனிதம் என்ற நாம் ஒரு குரங்கு ,, என்ன குரங்காரா என்று நினைக்க வேண்டாம் கோபமும் வேண்டாம் ,, ஆம் நம்முள் பலமாற்றங்கள் ஏற்ப்படுவது இயல்பே , அத்துடன் நாம் எவ்வாறு அந்த மாற்றங்களை கடக்க வேண்டும் என்பது எவ்வாறு என்று அறிவோம் . ஆனால் நம்முள் அறியவேண்டியது பல உண்டு .

என்னடா இது ஒன் இந்தியா ஆத்தர் இப்படி பன்றாங்களேனு நினைக்க வேண்டாம் . டிப்ஸ் விட்டு எங்க போறாங்கன்னு யோசிக்க வேண்டாம் . உங்களுக்காக நான் யோசித்து போட்டிதேர்வாளர்களுடன் பேசி, பழகி கற்றுகொண்டேன் . உங்களுக்காகவே எழுத ஆரம்பித்துள்ளேன்.

டிஎன்பிஎஸ்சியில் என்னை அறிந்தால் என்றும் வெல்லாலாம்

 

டிஎன்பிஎஸ்சி மாயவலையா !!

டிஎன்பிஎஸ்சி என்பது ஒரு மாயவலையில்லை ஆனால் மனிதர்களால் பின்னப்படுகின்ற வலையாகும் இது எப்போதும் யாருக்கும் தலைவணங்கா ஒன்றுதான் இருப்பினும் ஒரு சந்தேகம் இருக்கின்றதா! இருக்கட்டும் அதுதான் வேண்டும் . ஆனால் நான் அதை கிளர விரும்பவிலலை , அதை வெல்லும் வழியை கற்றுத்தருக்கிறேன். இன்று உங்களுக்குள் எதோ ஒரு சந்தேகம் இந்த பதிவில் தெரியலாம். அந்த புரிதல் இருந்தால் நலம்,,.... நீங்கள் எவ்வாறு அந்த மாயவலையை கடக்க வேண்டும் என்று மட்டும் முடிவெடுங்கள் . அந்த மாயவலைக்கு விளக்கங்கள் தேவையில்லை மற்றும் விமர்சனங்களும் தேவையில்லை. ஆனால் மாயவலைக்குள் செல்ல முடியாத எலியாக இருங்கள் உங்களை வெல்ல எந்த புலியாலும் முடியாது .

இந்த பதிவில் எலியாக மாற கற்றுகொள்ளுங்கள் பிறகு நீங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வென்றதும் புலியாக மாறிவிடுவீர்கள் அதுதான் வேண்டும். டிஎன்பிஎஸ்சியை பொருத்தவரை கட் ஆஃப் உங்களை காயப்படுத்துகிறதா, " ஒரு மார்க், இச்ச அஞ்சு மார்க், பத்து மார்க் விட்டுட்டனே ",என்று வேதனை படுத்துகிறதா கவலை வேண்டாம் நாளை நமதே இந்த நாளை நமதே என்ற எண்ணம் மட்டும் மனதில் வையுங்கள் . நிச்சயம் நீங்கள்தான் என்றும் உங்கள் ராஜா/ராணி . அந்த புரிதல் வேண்டும் உங்களை பற்றிய அந்த புரிதல் வேண்டும் அதற்காகத்தான் இந்த டிப்ஸ் நீங்கள் முழுமையாக உங்களை அறியும் போது உங்களால் தேர்வை வெல்ல எளிதாகும் .

என்னை அறிந்தால் :

"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் "

அதேதான் அந்த வரிதான் அவர்தான் நம் கண்ணதாசன் தான் கற்றுகொடுத்தார் எனக்கும் என்னை அறிந்தால் ,என்னை அறிந்ததால் தான் இன்று உங்களை அறிந்து கொள்ள சொல்கிறேன் . குழம்ப வேண்டாம் ஏன் உங்களை நீங்கள் அறியவேண்டும் என்றால் நீங்கள் தேர்வில் வெல்ல வேண்டும் அதற்கு உங்களை பற்றி நீங்கள் அறிய வேண்டும். எப்பொழுது தூங்குவீர்கள், எப்பொழுது எழுவீர்கள் , நீங்கள் சுடு சோம்பேறியா அல்லது சோம்பேறியா அல்லது ஏதேனும் சூழல் உங்களை செயல்பட வைக்க விடுவதில்லையா என்ன பிரச்சனை உங்களுகென்று தெரிந்து கொள்ளுங்கள், வேலை செய்து படிக்க முடியவில்லையா அல்லது குடும்பம் அல்லது மன உலைச்சலா எது உங்கள் பிரச்சனை என்பதை  அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொன்றாக பட்டியலிடுங்கள் ப்ளிஸ் பட்டியலிடுங்கள் உங்களுக்கான வழி நிச்சயம் கிடைக்கும். பட்டியலிட்டு உங்களது குணம், படிக்கும்போது எழும் டேக் டைவர்ஸன் இதையெல்லாம் எப்படி ஓவர் டேக் பண்ணலாம் என்று சிந்தியுங்கள் பிறகு அதற்கொரு பட்டியலிடுங்கள் .அதுவே உங்களை செதுக்கும் உங்கள் செயலை மெறுக்கேற்றும். நீங்கள் உங்களை மாற்றி படிக்கவும், சுயதேர்வுக்கு தயார்ப்படுத்தும். வெற்றி பெறுவீர்கள் டின்பிஎஸ்சி மட்டுமல்ல உங்கள் வாழ்வின் அனைத்து இலக்குளையும் வெல்வீர்கள். நான் பதிந்தை மறுபரிசீலனை செய்து பாருங்கள் போட்டிதேர்வாளர்களே . அடுத்த பதிவிற்கு நான் தயாரகனும் மீண்டும் சந்திப்போம் ..

" மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்,
ஒருமாசுகுறையாத மன்னவன் இவன்/இவளனென்று போற்றி புகழ வேண்டும் " இது அடுத்த பதிவிற்கு ,,,,

சார்ந்த தகவல்கள்:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்

English summary
here article tell about how to win tnpsc along with self analysis

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia