தேர்வுக்கு திட்டமிடலின் மேலாண்மையை அறிந்து செயல்படுவோம் மாணவர்களே

Posted By:

மார்ச் மாதம் தேர்வு எழுத போகின்ற மாணவர்களே ! என்ன தேர்வுக்கு படிக்கும் வேலை எப்படி போகின்றது.

2018 ஆம் ஆண்டிற்கான ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ் ஒன் மாணவர்களே உங்களின் முதல் ஸ்டேட் போர்டு தேர்வு எப்படியிருக்குமோ என அச்சப்பட அவசியம் இல்லை.

ஸ்டேட்போர்டு எக்ஸாமுக்கு எப்படி படிப்போம் என்பது பார்த்து செயல் படுவோம்

முதல் முறை :

பிளஸ் ஒன் மாணவர்களே உங்களுக்கான கேள்வித்தாள் தொகுப்புகள் பற்றிய பிரிவுகள் கொடுத்திருப்பார்கள் அதனை முன்மாதிரியாக வைத்துதான் நீங்கள் படியுங்கள்.

ஆசிரியர்கள் கணிப்பை பின்ப்பற்றவும் :

ஆசிரியர்கள் அறிவித்துள்ள கணிப்பை பின்ப்பற்றவும் நன்றாக படிக்கவும். மார்ச் மாதம் தேர்வு இன்னும் நிறைய படிக்கனுமே என்று மண்டையை உடைக்காதிர்கள். உங்கள் ஆசிரியர்கள் என்ன கற்றுக் கொடுக்கின்றார்களோ அவ்வாறே அவர்கள் தெரிவிக்கும் முக்கிய பாயிண்ட்களை குறித்து படிக்கவும்.

ஆரோக்கியத்தில் கவனம் :

தொடர்ந்து படித்து மண்டையை சூடாக்க வேண்டாம். மன உலைச்சலை அதிகம் கொடுத்து ஃபெட் அப் ஆகாதிர்கள். தொடர்ந்து படித்து மீதமுள்ள நேரத்தில் ஒரு பிரேக் எடுத்து காலார நடந்து செல்லுங்கள். காலார நடக்கும் பொழுது எது குறித்தும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பிரிஸ்க் வாக் போய் பாருங்க உடலில் சக்தி பெருகும் அத்துடன் மனம் அமைதி அடையும்.

உடலில் உள்ள சக்தியை எப்போதும் தொடந்து பாஸ்டீவ் வழியில் பயன்படுத்துங்கள் அது எப்பொழுதும் ஆரோக்யமாக இருக்க வேண்டும்.

உணவு :நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடுங்கள் ஆனால் பசித்து புசியுங்கள் அதுவே நலம் பயக்கும்.

சுய உற்சாகம்:

கண்ணாடி முன்பு உங்களை நீங்களே எப்பொழுதும் உற்சாகப்படுத்துங்கள் அதுவே சாலச்சிறந்தது . உங்களுக்கே தெரியாமல் நீங்கள் மிகுந்த வீரமுடன் செயல்படுவீர்கள். வெற்றி பெறுவேன் நான் வெற்றியாளன் என ஒவ்வொரு முறையும் உங்களுக்குள் உங்கள் ஆசையை சொல்லுங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் .

நீங்கள் எதனை சாதிக்க விரும்புகின்றிர்களோ அதனை சாதிக்கலாம். சுய டானிக் என்பது நீங்கள்தான் அதனை புரிந்து செயல்படுங்கள் மாணவர்களே. சாதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் இதனை இணைத்து கொள்ளுங்கள் வெற்றி பெறலாம்.

நேர மேலாண்மையுடன் கூடிய செயல்பாடுகள்:

நேர மேலாண்மையை ஒரு கண்ணாக வைத்து விழிப்புணர்வுடன் இருந்தால் மாணவர்களே தேர்வுக்கான வெற்றியை நீங்கள் எளிதாக பெறலாம்.

திட்டமிடலின் தோல்வி குறித்து ஆராயுங்கள் எது உங்கள் திட்டமிடலின் தோல்விக்கு காரணம் எது என்பதை ஆராய்ந்து அந்த குறிப்பிட்ட காரணத்தினை சரிசெய்யுங்கள் அதுவே உங்களை வெற்றி பெறச் செய்யும்.

சார்ந்த பதிவுகள்:

ஆண்டு தேர்வுக்காக படிக்கும் மாணவர்களே உங்களுக்கான குறிப்பு

மாணவர்களுக்கான போர்டு எக்ஸாம் குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

English summary
here article tells about tips for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia