தேர்வுகாலம் பெற்றோர்களே ஆசிரியர்களே உசாராக இருங்கள் !

Posted By:

பெற்றோர்கள் ஆசிரியர்களே உங்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துட்டது.
பெற்றோர்களே, ஆசிரியர்களே பொதுத் தேர்வு காலம் நெருங்கிவிட்டது அனைத்து அறிவிப்புக்கள் வெளிவந்துள்ள. பெற்றோர்களே ஆசிரியர்களே உங்களுடைய பங்கு என்ன என்பதனை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.

பொதுத் தேர்வு குறித்து அறிவிப்புகள் சிபிஎஸ்சி, தமிழ்நாடு மற்றும் நீட், ஐஐடி பிரிபரேசன்களால் மாணவர்கள் தீயாக படித்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் மாணவர்களுக்கு துணையாக இப்பொழுது பக்கபலமாக இருக்க வேண்டியது ஆசிரியர்கள மற்றும் பெற்றோர்கள் ஆவார்கள்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் எந்த அளவிற்கு பக்கபலமாக இருக்கின்றார்களோ அந்த அளவிற்கு மாணவர்கள் தங்களது ரிசல்டை காட்டுவார்கள் இதனை நாம் அறிந்து செயல்பட வேண்டும்.

தனி கவனம் செலுத்துங்கள் :

ஆசிரியர்கள் மாணவர்களிடம் தனி கவனம் செலுத்த வேண்டும். போர்டு எக்ஸாமுக்கு தயாராகும் மாணவர்களின் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க விரும்புவது இது ஒன்றே ஆகும்.
உங்கள் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் கவனம் எதில் இருக்கின்றது என்பதை அறிந்து செயல்படுங்கள். உங்கள் மாணவர்கள் தொடர்ந்து படித்து கொண்டிருக்கின்றனரா என்பதை கண்காணியுங்கள். அவர்களின் எண்ண ஓட்டம் உங்கள் பிடியில் இருக்க வேண்டும்.

உற்சாகப்படுத்துங்கள் :

உற்சாகப்படுத்துங்கள் உங்கள் மாணவர்களை தெளிவு படுத்துங்கள் அவர்களின் தேர்வு காலங்களில் நல்ல ஒரு பாதுகாப்பு வளையமாக இருங்கள்.
அவர்களின் ஒவ்வொரு செயலையும் உற்சகப்படுத்துங்கள். அவர்களுக்காக எப்பொழுதும் நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் " நாங்க இருக்கோம் நீ படிப்பா", என்ற மந்திரத்தை கொடுங்கள் அது போதுமானது ஆகும்.
மதிபெண் குறையும் பொழுது  உற்சாகப்படுத்துங்கள், பார்த்துகலாம் இன்னும் நம்ம கையில் நேரம் இருக்கு என்று நீங்கள் கொடுக்கும் அந்த அரவணைப்பு ஆறுதல் உங்கள் பிள்ளைகள் மற்றும் மாணவர்களை ஏழு கடல் தாண்டி செல்ல வேண்டுமானாலும் செல்ல வைக்க வலிமை உடையவராக்கும்

ஸ்பெசல் கிளாசில் கூடுதல் கவனம் :

ஸ்பெசல் கிளாசில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் அது நன்மை பயக்கும். மாணவர்கள் ஒழுங்கு முறைப்படி ஸ்பெஷல் கிளாஸ் வருகின்றனறா என்பதை அறிந்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் கலந்துறையாட வேண்டும். தங்களது பிள்ளைகளின் பர்பாமென்ஸ் எவ்வாறு இருக்கின்றது என்பதை தெரிந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். ஒருத்தர் மட்டும் தட்டினால் ஓசை வராது என்பது அறிந்து ஆக்டீவா இருங்கள்.

குறைபாடுகள் அறிந்து கொள்ளுங்கள் :

மாணவர்களின் குறைபாடுகள் எதேனும் இருப்பின் அதனை அவர்களுக்க்கு தெரியும் முன் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது அப்சர்வன்ஸ் எதில் குறைகின்றது என்பதை அறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த தேர்வு காலம் முழுவதும் கவசமாக இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்வின் மிகப்பெரிய பகுதிகளாவீர்கள் அதனை அறிந்து செயல்படுங்கள்

English summary
Here the article tells about tips to take care students while exam times

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia