சிறு தொழில் தொடங்க மத்திய அரசின் முத்ரா கடனுதவி திட்டம்

முத்ரா திட்டத்தின் மூலம் வங்கிகடன் பெற்றுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு

By Sobana

சுயதொழில் செய்ய லட்சிய கனவு கொண்ட சூப்பர்மேன்களே உங்களுக்கான முத்ரா கடன் திட்டம்
ஒன்றே செய்தால் அதை நன்றே செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
உள்ளத்தில் உள்ளதை உணர்ந்து செய்தால்
உனக்கில்லை என்றும் தாழ்வு.

முத்ரா கடனுதவி திட்டம் சிறு தொழில் புரிவோர்க்கு உதவிகரமாக இருக்கும்

சிறுதொழில் செய்து பெரும் தொழிலதிபராக கனவுண்டு, சரியான திட்டம் வகுத்துள்ளேன். செய்ய போற வியாபாரத்தின் அனைத்து நெளிவு சுழிவுகளும் தெரியும். செய்யப் போற தொழிலில் ஏற்கனவே வேலை செய்த அனுபவம் உண்டு. ஆனால் ஒரே பிராப்ளம் பணபற்றாகுறை முதலீடு இல்லை அல்லது நான் ஏற்கனவே முதலீடுக்கான பணம் தயார் செய்து வைத்திருந்தேன் ஆனால் எதிர்பாரதவிதமாக அவசர தேவைக்கு செலவு ஆகிவிட்டது. இனி தொழில் தொடங்க முதலீட்டிற்கு என்ன செய்வது என்ற குழப்பம், யாரிடம் உதவி கேட்பது என்ற தயக்கம். தொழில் தொடங்க திட்டமிட்டாச்சு ஆனால் முதலீட்டுக்கு திண்டாட்டமா இருக்கு.
கவலை வேண்டாம் தொழில் முனைவோரே, நீங்கள் உங்கள் துறையில் ஜொலிக்க உங்கள் கனவை நினைவாக்க முத்ரா இருக்கு. முத்ரா உங்கள் தொழில் தொடங்க துணையாயிருக்கும்.

முத்ரா திட்டம்:

முத்ரா திட்டம்:

முத்ரா வங்கித் திட்டம் என்பது மத்திய அரசு அறிவித்துள்ள வங்கிகடன் திட்டம் ஆகும். முத்ரா வங்கி திட்டம் என்பது புதிதாக தொழில் தொடங்குவோர்க்கு அரசு பத்து லட்சம் வரை கடன் கொடுத்து உதவும்.
முத்ரா திட்டம் எந்தவித சூயரட்டி எதுவும் இன்றி 10லட்சம் வரை கடனாக பெறலாம். 100 பேர் வங்கிகளிம் பிஸ்னஸ் லோனுக்கு விண்ணப்பித்தல் அவர்களில் நான்கு பேர்க்கு மட்டும்தான் வங்கிகடன் தொழில் தொடங்க கிடைத்து வந்தது.
ஆனால் முத்ரா கடன் திட்டம் மத்திய அரசு வழங்கிவரும் சிறுதொழில் செய்வோர்க்கான ஆதரவு அளிக்கும் திடட்ம்

தொழில் வகைகள் :

தொழில் வகைகள் :

முத்ரா கடன் பெற தகுதியான தொழ்ல்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபார தொழில்கள் சேர்ந்தோர்க்கு கடன் பெறும் வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
டாடா குட்டியானை வேன் பெறுவோர்கள், பட்டு தொழில், சிறு ரெஸ்ட்ராரெண்ட், பால் பண்ணை, மாடு வளர்ப்பு, மீன் பண்ணை, கோழி வளர்ப்பு, துணி வியாபாரம், சலூன் கடை, பேக்கரி, தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்வோர்கள் அனைவருக்கும் இந்த தொழில் கடன் பெறலாம்.

முத்ரா  கடன் நிராகரிப்பு:

முத்ரா கடன் நிராகரிப்பு:

முத்ரா கடன் தொகையானது திருமணம் வீட்டில் சுபகாரியங்கள் செய்ய, வீடுகட்டுவது, வீட்டு கட்டுவது, பர்சனல் லோன் பெறுபவர்களுக்கெல்லாம் முத்ரா கடன் திட்டத்தில் கடன் கிடைக்காது.

முத்ரா பெறும் முறைகள்:

முத்ரா பெறும் முறைகள்:

முத்ரா திட்டம் பெற 18 வயது இருக்க வேண்டும். 12% சதவிகிதம் வருடத்திற்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும். ஆதாவது மாதத்திற்கு 1% வீதம் வட்டி செலுத்த வேண்டிவரும். தொழில் செய்ய விருப்பமுள்ளோகள் அந்தந்த பகுதிகளிலேயே உள்ள வங்கிகளில் முத்ரா ஆபிசர்கள் இருப்பார்கள் அவர்கள் மூலம் வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்ட மூன்று வகைகளில் எந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பெறலாம் என்பதை வங்கி மேனேஜெர் தீர்மானிப்பார்.
ஒவ்வொரு வங்கியும் ஒராண்டில் 25 பேருக்கு இந்த கடன் வழங்க வேண்டும் இது குறித்து தமிழ்நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லை இந்த வாய்ப்பை தொழில் தொடங்கும் திட்டம் உடையோர் பயன்படுத்தலாம்.

முத்ரா திட்டம் கடன் பெற அடையாள அட்டைகள்:

முத்ரா திட்டம் கடன் பெற அடையாள அட்டைகள்:

முத்ரா கடன் பெற அடையாள அட்டைகள் ஆதார், லைசென்ஸ், வரி ரசீதுகள், ஓட்டர் ஐடி இருப்பிட சான்றிதழாக அங்கிகரிக்கப்படுகின்றது. முத்ரா திட்டத்தின் மூலம் விண்ணப்பாதர்கள் கட்ன் பெற சாதிச்சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் அந்த தொழில் செய்வோர் எந்த பிரிவை சார்ந்தவர்கள் என அறிய உதவும்.

திட்டங்கள் முத்ரா :

திட்டங்கள் முத்ரா :

முத்ரா திட்டத்தில் கடன் பெற செய்யப் போகும் தொழில் குறித்து சரியான திட்டங்கள் வரையறுத்து வைத்து அதனை தெளிவாக விளக்கவும்.
தொழில்செய்யும் இடங்கள் குறித்து முழுவதுமாக அறிவிக்க வேண்டும்
தொழில் செய்ய தேவையான டூல்ஸ் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.
வாங்குவது, கொடுப்பது, விற்பனை குறித்து தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.

முத்ரா ஆபிசர்:

முத்ரா ஆபிசர்:

முத்ரா கடன் குறித்து உங்களுக்கு சரியான விவரங்கள் கொடுக்கப்படவில்லை அல்லது முத்ராவினால் உங்களுக்கு கிடைக்க வேண்டியது முறையாக கிடைக்கவில்லை எனில் நீங்கள் சார்ந்த மாவட்டத்தில் முத்ரா ஆபிசர் என்பவர் இருப்பார் அவரிடம் தெரிவியுங்கள். உங்களுக்கான சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வங்கியில் முத்ரா லோன் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்
முத்ரா கார்டு வங்கியில் பெறலாம் அதன் மூலம் தொழில் உபகரணங்கள் 10%க்கு பெறலாம்.

சார்ந்த பதிவுகள் :

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tells about tips for the small entrepreneur
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+