நேரடிதேர்வை எதிர்கொள்ள சில அடிப்படைத்தகுதிகள் மிக அவசியமாகும் .

Posted By:


நேரடிதேர்வை எதிர்கொள்ள சில அடிப்படைத்தகுதிகள் மிக அவசியமாகும் .அத்தகைய தகுதிகளை வேலைதேடுவோர் பெற்றிருந்தால் வேலை பெறுவது எளிதாக இருக்கும் .

 

 • இண்டர்வியூ எதிர்கொள்ளும் முன் கம்பெனி நேச்சர் மற்றும் கம்பெனி கேள்விகளுக்கென சுயபயிற்சி செய்து செல்லும்போது சிறப்பாக செயல்பட முடியும் . 
 • நேர்த்தியான உடை அணியவேண்டியது அவசியமாகும் ஃபார்மல் உடை ஆண்களுக்கு பெண்களுக்குமான கட்சித பொருத்தமாக உங்கள் வேலைகேற்ற பொருத்தமான உடை அணிய வேண்டும் . 

தலைமுடி ஒழுங்குடன் சரிசெய்து உடைகேற்ற காலணி அணிய வேண்டும் . அத்துடன் நேர்முகதேர்வுக்கு செல்லுமுன் உணவு அந்த நேரத்தில் உன்பதை தவிர்கலாம் . அடுத்து ஆண்களும் சிகரெட் பழக்கமிருப்பவர்கள் தவிர்க்க வேண்டும் .

நேரடிதேர்வு எதிர்கொள்ளும் முறை

 

 • உள்ளே நேர்முக அறைக்கு செல்லுமுன் அனுமதி கேட்டுசெல்ல வேண்டும் . அமரும்படி நேரடிதேர்வு உறுப்பினர்கள் கூறியபின் நன்றி சொல்லி நிமிர்ந்து அமர வேண்டும் . கால்கள் சரியாக நேராக வைக்க வேண்டும் . 
 • கவனம் முழுவதும் தேர்வாளர்கள் மீது இருக்க வேண்டும் அதிகமாகவோ குறைவாகவோ பேசுவதை தவிர்த்து சரியாக தேவைப்படும் அளவு பேசினால் போதுமானது ஆகும் . 
 • கேள்விகளுக்கான விடைதெரியவில்லையெனில் விடைகூற மழுப்புவதைவிட தெரியவில்லை என ஒத்துகொள்வது சரியானதாகும் . 
 • நேர்முக தேர்வில் விடைகூறும் போது குரலில் கம்பீரமும் , நம்பிகையும் இருத்தல் வேண்டும் . 
 • வேலை செய்ய உங்களுடைய திறமையை சோதிக்கும் விதமாகவே கேள்வியிருக்கும் ஆகவே தேவையற்ற படபடப்பு  அவசியமற்றது  . 
 • ஆங்கில அறிவு அளவாக பயன்படுத்துங்கள் மேதமையை விட சாமர்த்திய பேச்சு முக்கியம் ஆகும் .
 • ஒழுங்குடன் உடல்மொழியான பாடிலேங்வேஜ் இருக்க வேண்டும் . 
 • நேர்முக தேர்வொன்றே உங்கள் திறன் வெளிப்படுத்தும் முதல் களம் ஆதலால் அதனை மனதில் வைத்து உறுதியோடு விடையளியுங்கள் நீங்கள் செல்லும் வேலைக்கான பட்டறிவுடன் , கம்பெனி வேலைக்கான சில பயிற்சி கொடுக்கும் ஆதலால் தேவையற்ற குழப்பநிலை , படப்படப்பு தவிர்த்து உங்களை வெளிப்படுத்துங்கள்.
 • இண்டர்வீயூ முடிந்ததும் நேர்முக தேர்வு குழுவுக்கு நன்றி சொல்லுங்கள் . நம்பிக்கையுடன் வெளியே வரும் பொழுது குறுநகையுடன் வெளியேறுங்கள் . 
 • கேள்விகளுக்கு தெளிவாக விடைகொடுக்க வேண்டும் அத்துடன் சுய விவரங்களையும் அதுசார்ந்த கேள்விகளை எதிர்நோக்கி பயிற்சி செய்து செல்லும் போது பதில் கொடுக்க எளிதாக இருக்கும் .

English summary
here article mentioned about interview tips

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia