வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்..!! டிஆர்பி தேர்வில் வெற்றி பெறுவதற்கான டிப்ஸ் இதோ...!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர், இளைஞிகளின் கனவாக உள்ளது. இந்தத் தேர்வுக்கான பாடங்களை சரியாகத் திட்டமிட்டுப் படித்து எழுதினால் தேர்வு நிச்சயம் என்கிறார்கள் வல்லுநர்கள். முறையான பயிற்சி, தேவையான புத்தகங்கள், தினசரி கால அட்டவணை, விடாமுயற்சியால் டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் அமர்ந்து கோலோச்ச முடியும் என்று நிபுணர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) விரைவில் பிஜி டிஆர்பி (PG TRB) எனப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை விரைவில் நடத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு 2000க்கும் அதிகமான காலியிடங்களுக்கு நடத்தப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்காக ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்.

டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தான் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களை தேர்வு செய்கிறது. இதுதவிர ஆசிரியர் தகுதித்தேர்வையும் (டெட்) டிஆர்பி தான் ஆண்டு தோறும் நடத்தி தேர்வு செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், துறைவாரியாக எவ்வளவு பணியிடங்கள், தேர்வு தேதி, அறிவிப்பு வரப்போகும் மாதம் போன்ற தகவல்களை டிஆர்பி கால அட்டவணையாக வெளியிடும். அதனை பார்த்து தான் போட்டித்தேர்வுக்கு தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.

வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்..!! டிஆர்பி தேர்வில் வெற்றி பெறுவதற்கான டிப்ஸ் இதோ...!!!

ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும், விரைவிலேயே ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதனால் டிஆர்பி தேர்வர்கள் குஷியில் உள்ளனர்.

முக்கிய அறிவிப்பு என்ன....
டிஆர்பி வெளியிட்டு அறிவிப்பின்போது, 1,766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்லூரி கல்வியியல் ஆகியவற்றில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என டிஆர்பி அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியாக உள்ளது. தேர்வு ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது.

200 முதுநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆகஸ்டு மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என டிஆர்பி அறிவித்துள்ளது. முதலமைச்சர் கூட்டுறவு ஆராய்ச்சியாளர் பணியிடங்களில் உள்ள 120 இடங்களுக்கு ஜூன் மாதம் அறிவிப்பாணை வெளியாகிறது. செப்டம்பரில் அதற்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 26 மூத்த விரிவுரையாளர்கள், 103 விரிவுரையாளர்கள், 10 இளநிலை விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது.

அரசு சட்டக்கல்லூரியில் உள்ள 56 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு நவம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. தேர்வை பொறுத்தவரையில், அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது. இவை அனைத்துமே 2024-ம் ஆண்டில் நடைபெறவுள்ளது என்பதுதான் கூடுதல் சிறப்பம்சமாகும்.

தற்போது 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியிடங்களுக்கான டெட் தகுதித் தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பாணை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 1,766 பணியிடங்களை கொண்ட 2ம் நிலை ஆசிரியர் பணிக்கான (SGT) தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதமும், தேர்வு ஏப்ரல் மாதமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்..!! டிஆர்பி தேர்வில் வெற்றி பெறுவதற்கான டிப்ஸ் இதோ...!!!

தேர்வு முறை

இந்த பிஜி டிஆர்பி தேர்வானது, இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, இதில் 100 மதிப்பெண்களுக்கு 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இரண்டாம் தாள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு, உளவியல் மற்றும் பொது அறிவு பகுதியிலிருந்து 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

இந்த டிஆர்பி தேர்வுக்கு தயாராவது எப்படி?

தமிழ் மொழித் தகுதித் தேர்வை பொறுத்தவரை, 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ளுதல் நலம். முந்தைய ஆண்டு வினாக்கள் அல்லது இதுவரை அரசுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதில் எழுதி நல்ல முறையில் தயாராகிக் கொள்ளுங்கள்.

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் நீங்கள் ஏற்கனவே திறமையானவராக இருந்தாலும், போட்டித் தேர்வு கண்ணோட்டத்தில் நன்றாக படித்துக் கொள்வது அவசியமானதாகக் கருதப்படுகிறது. பாடங்களை குறைந்தப்பட்சம் 3 முதல் 6 முறையாவது நன்றாக படித்து வைத்துக் கொள்ளவேண்டும் என தேர்வு நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாடங்கள்

இந்தத் தேர்வுக்காக தினசரி படிக்க வேண்டிய நேரம், பாடங்கள் குறித்து ஒரு அட்டவணையைத் தயார் செய்யவேண்டும். பின்னர் அந்த தினசரி நேர அட்டவணையை பின்பற்றி தேர்வுக்குத் தயாராகுங்கள். படிப்பதற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய ஆண்டு வினாத்தாள்களை சேகரித்து, வைத்துக் கொள்வது நலம். அதனை நன்றாக அலசி ஆராய்ந்து, அதற்கு ஏற்றாற்போல் தயாராக வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும், ஒரு பகுதியினை படித்த பிறகு, அது தொடர்பான குறுகிய தேர்வை எழுதிப் பார்ப்பது சிறந்ததாக இருக்கும்.

உளவியல் மற்றும் பொது அறிவு பிரிவுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் தவிர தேவையான புத்தகங்களை தேடி படியுங்கள். படிக்கும்போது நன்றாக புரிந்து படித்துக் கொண்டு படிப்பு நல்லது.

தேர்வுக்கு தயாராவது எப்படி?

தமிழ் மொழித் தகுதித் தேர்வை பொறுத்தவரை, 6- 10 வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும். முந்தைய ஆண்டு வினாக்கள் அல்லது இதுவரை அரசுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அடிப்படையில் தயாராகிக் கொள்ளுங்கள்.

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் நீங்கள் ஏற்கனவே திறமையானவராக இருந்தாலும், போட்டித் தேர்வு கண்ணோட்டத்தில் நன்றாக படித்துக் கொள்வது அவசியம். பாடங்களை குறைந்தப்பட்சம் 3 முறையாவது நன்றாக படித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினசரி அட்டவணை

தினசரி நேர அட்டவணையை வகுத்து அதற்கேற்றாற்போல், தயாராகுங்கள். படிப்பதற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய ஆண்டு வினாத்தாள்களை சேகரித்து, வைத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக அலசி ஆராய்ந்து, அதற்கு ஏற்றாற்போல் தயாராகுங்கள். ஒவ்வொரு பாடத்திலும், ஒரு பகுதியினை படித்த பிறகு, அது தொடர்பான குறுகிய தேர்வை எழுதிப் பார்ப்பது நல்லது

உளவியல் மற்றும் பொது அறிவு பிரிவுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் தவிர தேவையான புத்தகங்களை தேடி படிக்கவேண்டும் படிக்கும்போது நன்றாக புரிந்து படித்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்க வழி:

தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.

மாதிரித் தேர்வு

தேர்வர்கள் மாதிரித் தேர்வுகளை அடிக்கடி எழுதிப் பார்க்கவேண்டும். ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். இதற்கு மாதிரித் தேர்வுகள் உதவும்.
மேலும், தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம்.

மாதிரி வினாத்தாள்

மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை தேர்வர்கள் நாடவேண்டும்.

வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம்

பாடப்புத்தகங்களை படிப்பது, மாதிரித் தேர்வு எழுதுவது, வினாத்தாள் வங்கியைச் சேகரித்து பயிற்சி பெறுவது, முக்கியமான கைடுகளை வாங்கிப் படித்தல், தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெறுதல் போன்றவற்றால் எளிதில் நாம் டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் அமர முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். வெற்றி நிச்சயம்...இது வேத சத்தியம் என்று அவர்கள் நம்பிக்கை தருகின்றனர்.
தனியார் பயிற்சி மையத்தில் சேர முடியாதவர்கள் அரசு நடத்தப் போகும் இலவச பயிற்சி மையங்களில் சேர்ந்து போட்டித் தேர்வுக்குத் தயாராகலாம் என நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
To crack PG TRB, Candidates should have completed PG Degree with B. ED from UGC recognised university. This exam totally consists of 150 objectives questions with of NO negative marks. To appear for this exam candidates need not have any Prior working Experience. Understanding the basic concepts is very important. The most important categories asked in the test are Educational Methodology and General Knowledge. If you are a beginner you should definitely study these questions in the Basic Study Plan For TN TRB Exam to make your foundations stronger.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+