நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி...!! நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ் இதோ....!!

மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - National Eligibility cum Entrance Test) இந்த ஆண்டு மே 5-ம் தேதி அன்று நடக்கவிருக்கிறது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வருகின்றனர். அகில இந்திய அளவில் தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.

நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

NTA (National Testing Agency) என்னும் தனித்து செயல்படும் அமைப்பு தான் இந்தியாவில் நீட் தேர்வை நடத்துவது தொடங்கி அதற்கான முடிவுகளை வெளியிடுவது வரை நீட் தொடர்பான செயல்பாடுகளை கவனித்து வருகிறது. இந்த அமைப்பை இந்தியாவின் கல்வி அமைச்சகம் (முன்னதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரில் இருந்து வந்தது) தான் உருவாக்கியது. முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வே பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, உருது, பெங்காலி, தெலுங்கு, கன்னடா, அஸ்ஸாமி மற்றும் குஜராத்தி ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும். 2021-ல் இருந்து பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வை எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956-ன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி அகில இந்திய அளவிலான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது (நீட் தேர்வு) நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வானது, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.

இதன்படி 5 மே, 2013 முதல் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வு முகமை (என்டிே) நடத்துகிறது.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு

2020-ம் ஆண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் +2 வரை படித்த மாணவர்களுக்கு, அதிமுக தலைமையினான தமிழ்நாடு அரசு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது.இதனால் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்டு தற்போது மருத்துவப் படிப்புகளை படித்து வருகின்றனர்.

மேலும், நடப்பு 2021 ஆண்டு முதல் அகில இந்திய இடஒதுக்கீட்டில் தேர்வாகும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடும் வழங்கி இந்திய அரசு ஆனையிட்டுள்ள்து.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி...!! நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ் இதோ....!!

தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை

தற்போதைய (2018 ஆம் ஆண்டு) நடைமுறைப்படி, இத்தேர்வில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் நீட் தேர்வில் 45 வினாக்கள் கேட்கப்பட்டு மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் 3 முறை மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதிற்குள் மூன்று முறையும், மற்றவர்கள் 25 வயதிற்குள் மூன்று முறையும் இத்தேர்வை எழுத முடியும்.

இதேபோல், தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility Entrance Test (Postgraduate) (அல்லது NEET (PG) நீட் பிஜி தேர்வும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகள் (MD/MS/PG Diploma Courses) படிப்பதற்கு இந்த தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியத்தால் அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்வில் தேறியவர்களுக்கு ஆலோசனை மற்றும் படிக்கும் கல்லூரி ஒதுக்கீடு இந்திய அரசின் சுகாதரப் பணிகளின் தலைமை இயக்குநர் வழங்குவார். இத்தேர்வுகள் 2013-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் எம்.எஸ்., எம்.டி போன்ற படிப்புகளை எம்பிபிஎஸ் முடித்த மாணவர்கள் படிக்கமுடியும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள், இந்தத் தேர்வுக்கு ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது என்பதற்கு நிபுணர்கள் எளிதான டிப்ஸ் வழங்கியுள்ளனர். அதை கீழே பார்க்கலாம்.

மருத்துவ பட்டப் படிப்புக்குக்கான நீட் தேர்வு எழுத அப்ளை செய்யும்போது
தயாராக எடுத்து வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்:

- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

- போஸ்ட்கார்டு சைஸ் போட்டோ (இரண்டுமே வெள்ளைநிற பின்புறத்துடன் இருக்க வேண்டும்)

- கையெழுத்து

- கைரேகை

- ஓபிசி/EWS/மற்ற வகுப்புச் சான்றிதழ்

- 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

- 12-ம் வகுப்பு முடித்திருப்பவர்கள் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

இந்த ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி...!! நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ் இதோ....!!

எப்படி விண்ணப்பம் செய்வது?

படி 1

- www.neet.nta.nic.in என்ற வெப்சைட்டுக்கு செல்லவும். அங்கு Registration for NEET (UG) - 2024 என்ற பகுதி காட்டப்பட்டு இருக்கும். இதனை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.

படி 2

- உள்ளே சென்றதும் புதிதாக ஒரு பக்கம் திறக்கும். அதில் New Registration என்ற பகுதியை க்ளிக் செய்யவும். அடுத்து திறக்கப்படும் பக்கத்தில் அப்ளை செய்வதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை உள்வாங்கிப் படித்த பின், கீழே இருக்கும் click here to proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

படி 3

- க்ளிக் செய்த பின் திறக்கும் பக்கத்தில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி மற்றும் உங்களின் அடையாள அட்டை ஏதேனும் ஒன்றின் விவரங்கள் கேட்கப்படும். அதனை மிக சரியாகப் பார்த்து, அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்த பின்னர் சரியான முறையில் நிரப்பவும். இதில் உங்கள் registration-க்கான password கேட்கப்படும். அதனை கவனமாகக் கொடுத்த பின் submit பட்டனை அழுத்தவும். அதன் பின் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு கூறப்படும். மீண்டும் ஒருமுறை சரிபார்த்த பின் Submit and Send OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

படி 4

- அதன் பின் திறக்கப்படும் பக்கத்தில் உங்களுடைய OTP கேட்கப்படும் இடத்தில், உங்களுடைய செல்போன் எண்ணுக்கு வந்திருக்கும் OTP யை பதிவு செய்யவும். தொடர்ந்து Submit Registration Form என்ற பகுதியை க்ளிக் செய்தால். உங்களுடைய Registration முழுமையடைந்துவிடும். உங்களுக்கான register ID மற்றும் password-ஐ குறித்து வைத்துக்கொள்ளவும்.

படி 5

- இதைத் தொடர்ந்து Application form-ஐ நிரப்ப வேண்டும். Application form-ல் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், ஆதார் அட்டையின் விவரங்கள், தேர்வு எழுதும் இடம், கல்வி விவரங்கள், மற்ற விவரங்கள், அதன் பின் ஆவணங்கள் பதிவேற்றம் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கவனமாக நிரப்பவும். ஒவ்வொரு பகுதியும் முடியும் முன் விவரங்களை சரிபார்த்த பின் submit and next கொடுத்து விவரங்களை நிரப்பிக்கொள்ளவும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி...!! நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ் இதோ....!!

படி 6

- ஆவணங்கள் பதிவேற்றம் பகுதியில் உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கைரேகை மற்றும் போஸ்ட்கார்டு சைஸ் போட்டோ போன்றவை 10kb - 200kb (jpg) அளவிலும், உங்கள் கையெழுத்து 4kb - 30kb (jpg) அளவிலும், பத்தாவது மதிப்பெண் சான்றிதழ் 50kb - 300kb (pdf) என்ற அளவிலும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

படி 7

- பதிவேற்றம் முடிந்த பின் save & next என்ற பகுதியை க்ளிக் செய்த பின், அப்பக்கத்தில் உங்களுடைய விவரங்கள் காண்பிக்கப்படும். அவற்றில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவற்றை திருத்திய பின் அனைத்தையும் ஒருமுறை செக் செய்து கொண்டே வரவும். செக் செய்த பின் particulars checklist to be verified என்ற இடத்தில செக் செய்த அனைத்தையும் டிக் அடித்த பின் declaration படித்துப் பார்த்து I agree என்று கொடுக்கவும். பின், final submission of application-ஐ க்ளிக் செய்யவும்.

படி 8

- அடுத்து இ-மெயில் ஐடி-ஐ சரிபார்க்க, உங்களுடைய இ-மெயில் விவரத்தை உள்ளிடவும். பின் உங்கள் இ-மெயில் ஐடி-க்கு OTP அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பின் உங்கள் இ-மெயில் ஐடி சரிபார்க்கப்படும். தொடர்ந்து click here to go home என்பதை க்ளிக் செய்யவும்.

படி 9

- தற்போது நீங்கள் தேர்வுக்கான பணத்தை செலுத்த வேண்டும். பணத்தை உங்களுடைய டெபிட், கிரெடிட் கார்ட் உள்ளிட்ட வழிகளின் மூலமாக செலுத்தலாம். பணம் செலுத்திய பின் உங்களுடைய அப்ளிக்கேஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும். அத்துடன் உங்களது விண்ணப்பப் படிவத்தை அப்ளை செய்யும் பணிகள் முடிவடைந்துவிட்டன.

கட்டணம் செலுத்துதல்...

பொதுப்பிரிவினர் - ரூ.1500/- ஓ.பி.சி மற்றும் பொது - இ.டபிள்யூ.எஸ் பிரிவினர் ரூ.1400/- எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ.800/- என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையினை, தேர்வு நாளுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக https://neet.nta.nic.in/எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த நுழைவுத் தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் https://neet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்வையிடலாம், அல்லது, [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியில், அல்லது, 011-40759000 எனும் எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
வாழ்த்துகள் மாணவர்களே!

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
National Testing Agency has commenced NTA NEET UG 2024 registration. The registration link for National Eligibility cum Entrance Test is available to interested candidates on the new website of NTA NEET at neet.ntaonline.in. The last date to apply is till March 9, 2024. National Testing Agency, NTA will close the CUET PG 2024 correction window on February 13, 2024. Candidates who want to make changes in the application form can do it through the official website of NTA CUET PG at pgcuet.samarth.ac.in. The correction window was opened on February 10, 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+