குரூப் 2ஏ தேர்வு நேர குறிப்புகள் போட்டி தேர்வு எழுதுவோர்க்கான வழிகாட்டல்

Posted By:

போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் அனைவரும் தேர்வு நேரத்தில் பின்ப்பற்ற வேண்டிய சில நடவடிக்கைகள் உங்களுக்கான சில தகவல்கள் கரியர் இந்தியா தொகுத்து வழங்குகிறது .
குருப் 2ஏ தேர்வில் நெருங்க நெருங்க தேர்வு எழுதுவோர்களுக்கு நெருக்கடி அதிகமாகும் . நீங்கள் நிறைய படித்திருந்தும் எதுவும் படிக்காததைபோல் இருக்கும் . புத்தகத்தை பார்க்க அதனை முடிக்க வேண்டும் என்ற பரபரப்பு அதிகரித்த வண்ணமே இருக்கும் .

குரூப் 2ஏ போட்டி தேர்வுக்கு கவனசிதறல்களை சிதறடித்து தேர்வுக்கு தயாராதல்

சென்னையில் மழை ஆதலால் அந்த சூழலுகேற்ப போட்டி தேர்வு எழுதுவோர் திட்டமிட்டு செயல்படுங்கள் . நன்றாக உறங்கவும், தேவையில்லாத சிந்தனையை தவிர்க்கவும் . போட்டி தேர்வு நேரத்தில் வீட்டில் அமைதி சூழல் படர வைக்க வேண்டும் . ஏதேனும் சண்டை சச்சரவு ஏற்படுவது போல் இருந்தால் அந்த சூழலை தவிர்க்கவும் . வீட்டில் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லையென்றால் அவர்களை அமைதியாக கவனிக்கவும் . என்னால் படிக்க முடியவில்லை தேர்வு நேரத்தில் இப்படி சிக்கலா என்ற அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. தேர்வு நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய எதிர்பாரா சில நிகழ்வுகள் மனதை அச்சமூட்டும் ஆனால் அதற்கு அவசியமில்லை.

போட்டி தேர்வினை எதிர்கொள்வோர்கள் கலக்கமோ என்ன ஆகுமோ கேள்விகள் எப்படியிருக்குமோ என்ற பய உணர்வை விடுங்கள் அதுவே சாலச்சிறந்தது . இரண்டு பால்பாயிண்ட் பெண்கள் எடுத்து வைத்து கொள்ளுங்கள் . நன்றாக சாப்பிடவும் தேர்வுக்கு செல்லும் பரபரப்பில்  சரியாக சாப்பிடாமல் இருக்க வேண்டாம்.

போட்டி தேர்வில் வெல்ல வேலைக்கு சென்று படிப்பவர்கள் சனிமுதல் வேலைக்கு விடுப்பு எடுத்து ஒய்வெடுங்கள் நீங்கள் படித்த ஒன்றை மட்டும் மீண்டும் ரிவைஸ் செய்யுங்கள் . ஆஃபிஸ் வேலைகள் , பிரச்சனை எதுவானாலும் அதுகுறித்து யோசிக்க வேண்டாம் . தேர்வு எழுதும் வரை அலுவலக சிக்கலை தள்ளி வையுங்கள் போதுமானது ஆகும் . கல்லுரி முடித்து புதிதாக தேர்வை எழுதுவோரும் வேலை வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்க வேண்டாம் . வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தவிர வேறு எதையும் பற்றி யோசிக்க வேண்டும் . வாழ்த்துக்கள்

சார்ந்த பதிவுகள்:

 போட்டி தேர்வு வெல்ல நடப்பு தேர்வுகளின் தொகுப்பு ரிவைஸ் செய்யுங்கள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேவையான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு 

English summary
above article tell about examination tips for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia