KECT பொது நுழைவுத் தேர்வுக்கு சிறப்பாக தயாராவது எப்படி?

கேசிஇடி எனப்படும் கர்நாடக பொது நுழைவுத் தேர்வு கர்நாடக கல்வி வாரியத்தால் மாநில அளவில் நடத்தப்படும் தேர்வாகும்.

கேசிஇடி எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கர்நாடக கல்வி வாரியத்தால் மாநில அளவில் நடத்தப்படும் தேர்வாகும். இந்தத தேர்வு மருத்துவப் பாடப்பிரிவு, ஹோமியோபதி, பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவு மற்றும் வேளாண் துறை சார்ந்த பாடப்பிரிவில் முதலாம் ஆண்டில் சேருவதற்காக நடத்தப்படுகிறது. இது 2017ம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வாகும்.

கேசிஇடி தேர்வு எழுதுவதில் ஆர்வமாக உள்ள ஆர்வலர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

KECT பொது நுழைவுத் தேர்வுக்கு சிறப்பாக தயாராவது எப்படி?

தேர்வு நடைபெறும் விதம் மற்றும் தேர்வுத்தாளின் விபரம் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப நீங்கள் திட்டமிடுங்கள்.

நீங்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதையும் எந்த நேரத்திற்குள் படித்து முடிக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்து அதை ஒரு சார்ட்டில் தயார் செய்து படிக்கும் அறையில் ஒட்டி வைத்து விடுங்கள். அதில் அனைத்துப் பாடங்களின் தலைப்பையும் மறவாமல் குறிப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு உதவியாக இருக்கும், நிர்ணயம் செய்த காலத்திற்குள் படித்து முடிக்க முயற்சி செய்யுங்கள்.

முழுக்கவனத்துடன் படியுங்கள். எல்லா பாடங்களையும் முழுமையாக படியுங்கள். முக்கியமான வார்த்தைகளை ஞாபத்தில் வைத்துக்கொண்டு படியுங்கள், கீ வோர்டுஸ் எனப்படும் முக்கியமான வார்த்தைகளை எழுதி பாருங்கள். மேலும் இதுவரை தேர்வு எழுதிய வினாத்தாள்களையும் வைத்துப் படியுங்கள். படிக்கும் போது மறுபடி மறுபடி சொல்லிப் பார்ப்பது மற்றும் எழுதிப் பார்ப்பது உங்களது படிக்கும் திறமையை மிகவும் துல்லியமானதாக்கும்.

கேசிஇடி எனப்படும் பொது நுழைவுத் தேர்வு கர்நாடகாவிலுள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்வதற்காக நடத்தப்படும் முக்கியமானத் தேர்வாகும். இது உங்கள் இலக்கை நிர்ணயிக்கக் கூடிய தேர்வாகும். ஆதலால் முழு முயற்சியுடன் படியுங்கள்

80 நிமிடங்களில் 60 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். எனவே அதற்கேற்ப நீங்கள் பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும்.

அனைத்து முக்கிய குறிப்புகளையும் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு இறுதித் தேர்வின் போது கைகொடுக்கும். தேர்விற்கு முந்தைய நாள் அனைத்துப் பாடங்களையும் உங்களால் படிப்பது கடினமாகும். அப்போது இந்தக் குறிப்போடு பயனுள்ளதாக இருக்கும்.

முந்தைய ஆண்டு வினாத்தாள்களை நீங்கள் எழுதிப் பார்க்கும் போது அது உங்களுடைய பலவீனமான பகுதியை உங்களுக்கு எளிதில் அடையாளம் காட்டும். உங்கள் பலவீனம் என்ன என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் போது அதை சரிசெய்வதும் உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். மேலும் உங்களுடைய நேர மேலாண்மை திறனை அதிகரித்துக் கொள்ளுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்,

எப்போதும் படித்துக் கொண்டே இருப்பது மட்டும் வெற்றிக்கு காரணமாக அமைவதில்லை. நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக பொழுதுபோக்கிற்கு சிறிதும் நேரம் ஒதுக்காமல் இருப்பது நல்லதல்ல. அதிக படிப்பு உடலுக்கு களைப்பு. எனவே சிறிது நேரம் பொழுது போக்கிற்காகவும், விளையாட்டிற்காகவும் நேரம் செலவு செய்யுங்கள், அது உங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் அது உங்களை மீண்டும் உற்சாகமான நிலைக்கு கொண்டு வரும்.

மேலே உள்ள குறிப்புகள் கட்டாயம் உங்களுக்கு ஒரு நேர்மறையான எண்ணத்தை அதாவது பாஸிட்டிவ் அட்டிடுடை ஏற்படுத்தும். இது உங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை கொண்ட நீண்ட பாதையில் பயணம் செய்வதற்கு பாதையை வழிவகுக்கும். மேலும் இந்த டிப்ஸ் உங்களை உங்கள் பந்தயத்தில் வெற்றி பெறச் செய்யும்.

தேர்வு நடைபெறும் முறை:

கேசிஇடி பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி பார்ப்போம்.

பொது நுழைவுத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்ந்தெடுககப்படுவார்கள். மதிப்பெண் பட்டியலின் படி ரேங்க் பட்டியலும் நிர்ணயிக்கப்படும். மேலும் சென்ட்ரலைஸ்டு கவுன்சில் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது பொது மையமாக்கப்பட்ட ஆலோசனைக்குழுவின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
KCET is a common entrance examination conducted by the Karnataka Examinations Authority (KEA) of the Government of Karnataka. The examinations is conducted for admissions into various courses like Medical, Engineering, Architecture, Dental, etc. The following are a few useful tips that will help aspiring students ace the KCET 2017 examination.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X