அட கடவுளே கொசுவுக்கு ஹீட் இருந்தா நல்லதாம் ஐஏஎஸ் தேர்விலா !

Posted By:

ஐஏஎஸ் ஆகனும்னு ஆசையில்லாத ஆட்களை காண்பது அரிதாகும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மக்களின் தேவைகளை அரசு நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

கேள்விகளின் இருப்பிடம் இருக்க  அறிவோம் நன்றாக படிப்போம்

அரசின் நிர்வாகத்தை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட தேசமாக இருக்க வேண்டியது மிக முக்கிய கடமை ஆகும். அதற்கு பக்க பலமாக இருப்பது அரசு அதிகாரிகள் அந்த அரசு அதிகாரிகளை தேர்ந்தெடுக்க நாட்டில் தேர்வு அமைப்புகள் உண்டு. யூபிஎஸ்சி என அழைக்கப்படும் மத்திய தேர்வு ஆணையம் மூலம் நாட்டில் முக்கிய அதிகாரிகளான ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎப்எஸ் போன்ற அதிகாரிகளின் தேவையை வருடா வருடம் பூர்த்தி செய்வது    யூபிஎஸ்சி ஆகும்.

யூபிஎஸ்சியின் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வானது 24 பதவிகளை கொண்ட இந்த தேர்வானது மூன்று நிலைத் தேர்வினை கொண்டது. இது முதன்நிலை மற்றும் முக்கிய இண்டர்வியூ என அழைக்கப்படும் மூன்று நிலைகளை  கொண்டது.

முதன்நிலை தேர்வில் கேட்கப்பட்ட ட்ரிக்கி கேள்விகளும் அதனை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம் வாங்க.

நாமெல்லாம் கொசுவுக்கு ஜீவ காரூண்யம் பாக்குறதில்லை என்று டைலாக் டெலிவரி செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அழகாக யூபிஎஸ்சி வடிவமைத்துள்ள கேள்விகளுள் ஒன்று நறுக்கென்று யோசிக்க வைத்து விட்டது அது என்ன வெனில் எந்த நாட்டில் கொசு இல்லை என ஒரு கேள்வி கேட்க வாய்ப்புகள் உண்டு.

கொசு இல்லா நாடு :

கொசு இல்லாத நாடு எதுவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு முன்பு கொசுவுக்கு எது ஆகாது என்று நாம் தெரிந்திருக்க வேண்டும். அது என்ன ஆகாதுன்னா அதாம்பா கொசுவுக்கு எது அலர்ஜி என்று யோசிக்க வேண்டும்.

கொசுவுக்கு அலர்ஜி என்று பார்த்தால் காமன் மேன் நமகெல்லாம் நினைவுக்கு வருவது ஆல் அவுட் மற்றும் ஓடோமாஸ் அத்துடன் கொசுவத்தி ஆனால் யூபிஎஸ்சி படிக்கின்றவர்கள் எப்போதும் அப்படி யோசிக்க மாட்டார்கள் ஆமாம் காரணம் என்னவெனில் அவர்கள் ஒரு பொருளை பற்றி ஆராயமாட்டார்கள் ஆனால் அடிப்படை அறிந்து கொண்டிருப்பார்கள் அதுதான் டிரிக்கான தேர்வர்களின் அறிவு என அழைக்கப்படுகின்றது.

அப்பொ நமக்கெல்லாம் அறிவில்லையா என்றால் இருக்கு ஆனால் அவர்களுக்கு இணையா நாம் சிந்திக்கும் அவசியம் இருந்தது இல்லை அதுதான் காரணம் சரிவாங்க விடையை அறிவோம்.

 வெப்பம் நிலை கொசுவின் இருப்பிடத்திற்கும் அதன் இன்பெருக்கத்திற்கும் ஏற்ற இடம் ஆகும்.

கொசு இல்லாத நாடு ஐஸ்லாந்து என்பது சரியான விடையாகும். ஐஸ்லாந்து என்பது தெரியுமோ இல்லை ஆனால் கொசு இனப்பெருக்கம் செய்யும் தேவையான தட்பவெப்ப நிலை வெப்பம் ஆகும் ஆனால் ஐஸ்லாந்து வருடம் முழுவதும் குளிராகும் இருக்கும் நாடாகும் ஆகவே அங்கு கொசு வாழ்வது முடியாத ஒன்று. இப்படிதான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் தேர்வர்கள் சிந்திக்க வேண்டும். 

இப்படிதான் கேள்விகளின் அணிவகுப்புகள் இருக்கும் இதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஐஏஎஸ் கனவு கொண்ட தேர்வர்கள் இவ்வாறு ஒரு பொருள் அல்ல நிகழ்வின் அடிப்படை அறிந்து கொண்டு கேள்விகளுக்கு தயாராக வேண்டும்.

கொசுக்குவுக்கு இவ்ளோ பெரிய தமாஷ் என்றால் ஆம் இதுதான் படிக்கும் வழக்கம் ஆகும். இப்படிதான் கேள்விகளை பிரேம் செய்து படிக்க வேண்டும். கொசுவுக்கே இந்த பெரிய கேள்வியா என்றால் இதனைதான்  போகஸ் என்பார்கள் இப்படி போகஸ் பண்ணி படிங்க தேர்வை வெல்லுங்க ஐஏஎஸ் ஆகுங்கப்பா.

சார்ந்த பதிவுகள்:

யூபிஎஸ்சி நடத்தும் இந்திய இராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு

English summary
here article tells about preparation model for IAS exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia