சரியா 9.30க்கு நண்பனிடம் இருந்து ஒரு அழைப்பு. மச்சி காலையில் 10 மணிக்கு ஒரு இன்டெர்வியூ இருக்கு நேரா ஆபிஸ் வந்திரு. என்னடா இண்ணும் அரைமணி நேரம்தான்டா இருக்கு எப்படி முடியும் என்று கேள்வி எழுகிறதா? முடியும் உங்களுக்கானதுதான் இது.
25 நிமிடத்தில் எப்படி இன்டெர்வியூக்கு ரெடியாவது என்பதை பார்ப்போம்...

1. வேலை ஒரு பார்வை:
முதல் 5 நிமிடம் என்ன வகையான பதவிக்கு விண்ணப்பிக்க போகிறோம், முக்கியமாக இதற்கு என்ன தகுதிகள் கேட்கப்பட்டுள்ளது.
2. நிறுவனம் ஒரு அலசல்:
அடுத்த 10 நிமிடம் இந்த 10 நிமிடத்தில் நிறுவனம் பற்றிய பொதுவான விஷயங்கள். விண்ணப்பிக்கும் பணியிடத்திற்கான வேலை என்ன. அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள், துணை நிறுவனங்கள். நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் யார்? அதன் போட்டியாளர்கள் யார்? போன்ற விஷயங்களை அறிய மறக்காதீர்கள்.
3. முன் அனுபவத்தை வேலைக்கு ஏற்றார் பதில் அளிக்க மாற்றுதல்:
அடுத்த 5 நிமிடம், இதில் நம் இதுவரை கத்துகிட்ட மொத்த வித்தையும் எப்படி இந்த இன்டெர்வியூவில் பயன்படுத்துவது என்பதை தயார் செய்து கொள்ளுங்கள்.
முன்னதாக இன்டெர்வியூவில் நீங்களே உங்களை விற்பனை செய்யப்போகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
4. திரும்ப திரும்ப கேட்கும் கேள்விகள் ஒரு அலசல்:
அடுத்த 5 நிமிடம், பொதுவாக இந்த நிறுவனம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், நிறுவன தயாரிப்புகள் பற்றி என்ன தெரியும் போன்ற வழக்கமான கேள்விகளுக்கு முன்னதாக ஒதுக்கப்பட்ட 10 நிமிடத்தில் தயாராகி இருப்பீர்கள், அதையும், சில வழக்கமான கேள்விகளை எதிர்கொள்வது எவ்வாறு என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
5. நேரம்:
கடைசி 1 நிமிடத்தில் இன்டெர்வியூ டைம் பிக்ஸ் பண்ணிட்டு போய்கிட்டே இருக்கலாம். உண்மையாக வேலை தேடும் நோக்கில் இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
கடந்த பல வருடங்களுக்கு முன் இன்டெர்வியூ சென்றவர்கள் இணைப்புகளில் காணும் வழிமுறைகள் எல்லாம் ரெஸ்யூமில் சரியாக உள்ளதா என்று ஒன்றுக்கு இரு முறை பொறுமையாக பார்த்த பின் நேர்முகத்தேர்வுக்கு செல்வது பயன் அளிக்கும்.


Click it and Unblock the Notifications












