டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம்

போட்டி தேர்வு எளிதானது என்னால் வெல்ல முடியும், நான் போட்டித் தேர்வில் வெல்ல முடியாதவன் என்றால் வேறு யாராலும் போட்டித் தேர்வை வெல்வது முடியாது எனும் போக்கை மனதில் நிறுத்துங்கள் .

By Sobana

டிஎன்பிஎஸ்சி கனவு வாரியத்தில் வெற்றிகரமாக பயணிக்கவே உங்களுக்காக இந்த பதிவுகளை பதிவிட்டுள்ளோம், போட்டி தேர்வு என்பது எளிதல்ல எனும் போக்கை கைவிடுவோம் . போட்டி தேர்வு எளிதானது என்னால் வெல்ல முடியும், நான் போட்டித் தேர்வில் வெல்ல முடியாதவன் என்றால் வேறு யாராலும் போட்டித் தேர்வை வெல்வது முடியாது எனும் போக்கை மனதில் நிறுத்துங்கள் .

ஒரு தேசத்தில் சிறந்த வில்லாளி ஒருத்தர் இருந்தார். அவர் யாராலும் வெல்ல முடியாதவராக இருந்தார் . அவர் ஒருநாள் துறவியொருவரை சந்தித்து தன்னை யாராளும் வெல்ல முடியாத வில்லாளன் என அறிமுகம் செய்தார். துறவியோ அவனை கண்டு சிரித்தார், அதனை கண்ட அந்த துறவியின் சிரிப்புக்கான காரணம் கேட்டான் வீரன் . துறவியை தன்னிடம் போட்டியிட அழைத்தான் துறவியும் அவனை அழைத்துகொண்டு மலை உச்சியில் இருந்த ஒரு சிறிய பாலத்தின் மீது நிறுத்தினார், கொஞ்சம் பிசகினால், தடுமாறி கீழே விழுந்துவிடுவது உறுதி அவ்வளவு பெரிய உச்சியில் துறவி எறிந்த ஒரு குச்சியானது சரியான இலக்கை அடைந்தது ஆனால் அந்த வில்லாளனால் அம்பை எய்ய இருந்த தடுமாற்றத்தால் அவனால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. காரணம் வீரனாக இருந்தாலும் மலை உச்சியில் இருந்து விழுந்துவிடுவமோ என்ற பயம் காரணமாகும். எவ்வளவு பெரிய வில்லெய்தும் திறனாளியாக இருந்தும் அவனது பயம் படப்படப்பு மனதில் இருந்த உறுதியற்ற தன்மை போன்றவை அவனை சரியான இலக்கு நோக்கி செயல்பட வைக்க முடியவில்லை. இந்த கதையில் ஒரு உண்மை புரிந்திருக்கும் .இதன் மூலம் போட்டி தேர்வுக்கு தயாராவோர் அனைவரும் எவ்வளவு படித்திருப்பீர்கள் அனைத்தும் தெரியும் ஆனால் கேள்வித்தாளில் இருக்கும் தந்திரம் சில உங்கள் திறனையே திசை திருப்பும் . அப்பொழுது மனதை திடமாக வையுங்கள் அதுதான் வெற்றியின் பாதையாகும் .

டிஎன்பிஎஸ்சி போட்டிதேர்வில் மனதை வலிமைப்படுத்தி வென்றுகாட்ட வழிமுறைகள்

நாம் போட்டி தேர்வுக்கு சரியாக படிக்கின்றோம் .சரியான பாதையில் பயணிக்கின்றோம் பிறகு என்ன தவறு நம்மிடையே ஏன் தேர்வுத்தாளில் உள்ள சில யுக்திகளை உடைக்க தெரியாமல் தவிக்கின்றோம். என்ன காரணமென்று கணிக்க முடிகிறதா முடிந்தால அதுவே நமது வெற்றியாகும். இதோ அதற்கான காரணம் விளக்குகின்றேன் .

தமிழில் இலக்கணம், இலக்கியம், உரைநடை, கதைகள் ,கவிதைகள் இவைகள் மட்டுமே 6முதல் 10 வகுப்புகள் வரையுள்ள புத்தகங்கள் கொண்டுள்ளன . நாம் நன்றாக அறிவோம் இதனை நன்றாக நினைவில் வைத்து படித்திருப்போம். அதனை நாம் சுயபரிசோதனையில் சரியாக செய்திருப்போம் இருந்தும் சில கேள்விகள் எங்கிருந்தோ கேட்கப்ப்ட்டதாக உள்ளதா அது ஏன் அப்படியிருக்கிறது, எந்த பகுதி அப்படியிருக்கிறதென புரிய வேண்டும் , அதுதான உங்கள் கேள்வியெனில் அதற்கான என் பதில் அந்த குறிப்பிட்ட கேளிவிகள் இலக்கண பகுதியில் இருந்துதான் கேட்கப்படும் காரணம் அது முற்றிலும் வேறுப்ப்ட்டது. அந்த இலக்கணத்தை எப்ப்டி கேட்டாலும் விடையொன்றே, என்ன குழப்பமாகின்றதா,,!! குழம்ப வேண்டாம் உதாரணத்திற்கு ஒரு வாக்கியத்தை கொடுத்து சந்திபிழையை கண்டறிக அல்லது அந்த வாக்கியம் செய்தி வாக்கியமா அல்லது அந்த வாக்கியத்தில் மரபு பிழையென்ன என்று பலகேள்விகள் கேட்கலாம். அந்த வாக்கியத்தை வைத்து பலகேள்விகள் கேட்கலாம் . அந்த பயிற்சியை நாம் சரியாக செய்ய வேண்டும்.கேள்வி புதியதோ பழையதோ ஆனால் விதிமுறையொன்றே ஆகும்.

அடுத்த கேட்கப்படும் கேள்விகளில் ஒரு சேர்ந்த கவிஞர்களை வைத்து குழப்பம் விளைவிப்பார்கள் அது எப்படியென அறிய வேண்டும். அந்த குறிப்பிட்ட கவிஞர்கள் குறித்து நீங்களே சுயமாக கிடுக்குபிடி கேள்விகள் தயாரித்து எழுதி பார்த்து தேர்வறைக்கு செல்லவும் பின் நீங்கள் நூற்றுக்கு நூறு பெறுவது எளிதாகும் .

சார்ந்த தகவல்கள் :

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம் டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article telling how to tackle difficult part of tamil in tnpsc exam
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X