டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் பயிற்சியுன் ஸ்மார்டா நீங்களே கேள்விகள் தயாரிங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் தங்கங்களே நாளைய அரசு அலுவலர்களே உங்களுக்கான தேர்வு டிப்ஸ்கள் இதோ,,,
நேற்றுவரை கேள்வித்தாள் படிப்பது அறிந்தோம் இன்று கேள்வித்தாளிலிருந்து தொடங்குவோம் . கேள்வித்தாள்கள் ரிவைசிங் முறைகள் உங்களிடமிருந்தால் போட்டித் தேர்வில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறிர்கள் என்று அர்த்தமாகும் .

கேள்வித்தாளுடன் சுயகேள்விகள் :

போட்டி தேர்வுக்கு கடின உழைப்போடு ஸ்மார்ட் ஒர்க் என்பதும் அவசியமாகும் . தொடர்ந்து போட்டி தேர்வின் கடந்தாண்டு கேள்விகளுடன் போட்டி போட்டு பதில் கூறுவதுடன் சுயமாக கேள்விகள் தயாரிக்க கற்றுகொள்ளுங்கள் . முக்கிய பாடங்களில் இருந்து கேள்விகள் வரும் சில கேள்விகள் கடந்தண்டு கேள்வித்தாள்களில் அடங்கிவிடும் சில கேள்விகள் எப்படி கேட்கலாம் என்று நீங்களே சிந்திக்க தொடங்குகள் , தொடங்குவதுடன் அவற்றை பயிற்சி செய்யுங்கள் அதுவே தேர்வின் எவ்வளவு கடினமான கேள்வியையும் எதிர்கொள்ளும் திறன் தானாகவே உள்ளத்தில் எழச்செய்யும் . இதனை பயிற்சி செய்து பார்த்து எனக்கு தெரிவியுங்கள் . ஆனால் சோம்பெரித்தனம் பட்டால் நான் பொருப்பல்ல .

டிஎன்பிஎஸ்சியில் வெல்ல முக்கியமாக நாளிதழ்கள் மற்றும் நடப்பு மாத இதழ்களை படியுங்கள்

 

நாளிதழ்கள் வாசிப்பு :

நாளிதழ்கள் வாசிப்பு என்பது கட்டாயமாகும் அதனை சரியாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான நடப்பு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். இல்லையெனில் மாத இதழ்கள் படியுங்கள் அத்தோடு நிற்க வேண்டாம், தொடர்ந்து அவற்றை ரிவைஸ் செய்யுங்கள் அதனை ஒன்றிற்கு மூன்று தடவை தேர்வு எழுதிபாருங்கள். முக்கிய நிகழ்வுகளை பிரபலங்களுடன் அல்லது நன்கு பழக்கப்பட்டவைகளுடன் இணைத்து நினைவில் வையுங்கள் . நீங்கள் தேர்வு எழுதும் போது அவை நிச்சயம் மறக்காது .

டிஎன்பிஎஸ்சியை பொருத்த வரையில் நாளிதழ்கள் மற்றும் மாத நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்து படிக்க வேண்டும் . டிஎன்பிஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் நீங்கள் எழுதும் தேர்வுக்கு முன்பு மாதம் முதல் ஒரு வருட நிகழ்வுகள், முக்கிய தினங்கள், தினங்களின் சிறப்புகள் , முக்கியத்தலைவர்கள் அவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது என அனைத்து விவரங்கள் விரல் நுணியில் வைத்திருக்கவும் . இதுபோதும் வெற்றிக்கான வழி இவையே ஆகும்.

 சார்ந்த தகவல்கள் : 

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள் ரிவைஸ் சரியா செய்யுங்க தேர்வில் வெற்றி பெறுங்க

மாயவலைவெல்வோம் டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வெல்வோம்

English summary
here article tell about practicing questions and self making questions for tnpsc success

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia