சில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி?

இன்டெர்வியூவில் சில சமயம் டெக்னாலஜிகளையும் தாண்டி, நமது மெண்டல் பேலன்ஸை பரிசோதிக்க பல கேள்விகள் கேட்கப்படலாம். எனவே, இந்த சமயத்தில் கோபத்தை தவிர்ப்பது நலம். கோபப்பட்டால், சரியான வாய்ப்புகளை இழக்க நேர

By Kani

இன்டெர்வியூவில் சில சமயம் டெக்னாலஜிகளையும் தாண்டி, நமது மெண்டல் பேலன்ஸை பரிசோதிக்க பல கேள்விகள் கேட்கப்படலாம். எனவே, இந்த சமயத்தில் கோபத்தை தவிர்ப்பது நலம். கோபப்பட்டால், சரியான வாய்ப்புகளை சில சமயம் இழக்க நேரிடும்.

நொடிக்கு நொடி பல சவால்களை கொண்டதுதான் இந்த உலகம். இவை, அனைத்தையும் எதிர்கொள்ள எப்போது தன்னை தயார் படுத்திக்கொண்டால் மட்டுமே, நம்மை வெற்றியாளாராக பிரகடனப்படுத்த முடியும்.

சில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இந்த கேள்விகளை சமாளிப்பது எப்படி?

இன்டெர்வியூவில் சில சமயங்களில் ஜாலியாக கேட்கப்படும் கேள்விகள், கோபம், தடுமாற்றம் அடையச்செய்வதாக இருக்கும்.

எல்லத்தையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், அதே சமயம் ஜாலியாகவும் நினைக்காமல் கேள்வி என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டு சாதுர்த்தியமாக பதில் அளிப்பது அவசியம்.

சில விஷயங்களை நுனுக்கமாக அனுமானிக்கவே இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டால் போதும் எளிதாக கடக்கலாம் ஓராயிரம் கேள்விகளை...

கேள்வி: உங்களுக்குப் பிடித்த நடிகைகள் யார்? பிடித்த திரைப்படம் எது?

இதுபோன்ற கேள்விகளை, சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், சாதாரணமாக பதில் அளியுங்கள். நீங்கள் அளிக்கும் பதிலில் இருந்து எதிர்கேள்விகள் வரலாம். பொதுவாக ரசனையும், ரசிப்புத்தன்மையும் எல்லோருக்கும் ஒன்றாக அமைவதில்லையே. என்று மிகச் சாதரணமாக பதில் அளிக்கலாம்.

கேள்வி: எப்போதாவது நீங்கள் பொய் சொன்னதுண்டா?

நம்ம என்ன அரிச்சந்திரனா! இது ஒரு குதர்கமான கேள்வியாக இருந்தாலும், யோசித்துதான் பதில் சொல்லவேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. அதே சமயம் டக்கென்று ஆமா சார். என்று சொல்லிவிட்டு போய்டே இருக்க கூடாது.

சிறு வயதில்..., எப்போதவது தண்டனையில் இருந்து தப்பிக்க, பொறுப்புகளின் நிமித்தம் என நாசுக்காக பதில் அளிக்கலாம். தப்பி தவறி கூட இல்லை என்று கூறி மாட்டிக்கொள்ளாதீர்கள்.

கேள்வி: உங்களுக்குப் பிடித்த தலைவர்கள் யார்?

இந்த கேள்விக்கு உங்களுக்கு மிகவும் பிடித்த தலைவர்களை கூறலாம். ஓன்றுக்கும் மேற்பட்ட தலைவர்களை பட்டியலிட்டு புதுக்கேள்விகளுக்கு வழிவகுக்காதீர்கள்.

ஒரு தலைவரை கூறுங்கள், அவர்களை ஏன் பிடிக்கும்? என்று அடுத்த கேள்வி எழுந்தால் அவர்களின் ஆளுமை, திறமை போன்ற தனித்திறமைகளை பட்டியலிடலாம். சில சமயம் எனக்கு நானே ரோல் மாடல் என்று கூறிக் கூட கேள்வியை முடிக்கலாம்.

கேள்வி: நீங்கள் ஆபாசப் புத்தகம் படித்திருக்கிறீர்களா?

நண்பர்களுடன், தவிர்க்க முடியாத சூழலில், அதைப் படித்திருக்கிறேன் என்று பதில் அளிக்கலாம்.

இல்லை என்றால், அது போன்ற புத்தகங்களை இதுவரை படித்தது இல்லை என்று கூறிவிடலாம். இது ஒரு தேவையில்லாத கேள்வியாக இருந்தாலும் கூட அந்த இடத்தில் கோபப்படுவதையோ, பதட்டப்படுவதையோ தவிர்ப்பது நலம்.

இது போன்ற கேள்விகள், நீங்கள் எவ்வாறு பதட்டமான சூழ்நிலையை கையாள்கிறீர்கள் என்பதை அளவிடக்கூடக் கேட்கப்படலாம்.

கேள்விகளை அணுக கற்றுக்கொள்ளுங்கள், ஒரு தேர்வை எவ்வாறு எழுதுவது என கற்றுக்கொண்டால், பரீட்சையா பாத்துக்கலாம் என்ற மனபக்குவம் வருவது போல், கேள்விகளை அணுக கற்றுக்கொள்ளும் போது இன்டெர்வியூவில் மட்டுமின்றி அனுதினமும் வாழ்கையிலும் ஜெயிக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
How To Impress In An Interview With 4 Easy Tips
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X