கனவு வேலையை 30 நாளில் தன் வசமாக்கும் சீக்ரெட்!

கல்லூரி படிப்பை முடிக்கும் எல்லாருக்குமே ஒரு நல்ல வேலையில செட்டில் ஆகணுங்கிறது கனவாக இருக்கும்.ஆனால் இதற்கு இடையில் பெற்றோர்களின் அட்வைஸ், உறவினர்களின் விசாரிப்பு என அலுப்புதட்டினாலும், இதற்காக பணம்

By Kani

கல்லூரி படிப்பை முடிக்கும் எல்லாருக்குமே ஒரு நல்ல வேலையில செட்டில் ஆகணுங்கிறது கனவாக இருக்கும். ஆனால் இதற்கு இடையில் பெற்றோர்களின் அட்வைஸ், உறவினர்களின் விசாரிப்பு என அலுப்புதட்டினாலும், இதற்காக பணம் செலவழித்து கோர்ஸ் போகவேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை.

சரியாக 30 நாட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் முயற்சி செய்தால் மட்டுமே போதுமானது. 31 வது நாள் அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் நம்ம கையில இருக்கும்.

இந்த ஒவ்வெரு டிப்ஸையும், நம் அன்றாட வாழ்கையில் பயன்படுத்த முனையும் போது நாம் எளிதாக வெற்றி பெற முடியும்.

10.கெட் ஸ்டார்ட்

10.கெட் ஸ்டார்ட்

இது முக்கியமான ஸ்டேஜ் இந்தப்பகுதியில் நீங்கள் தயார் செய்யவேண்டியது ரெஸ்யூம், மற்றும் வேலை தேட நம்மை நாமே தயார் செய்து செய்து கொள்ளுதல் மட்டுமே. நாம் எந்த துறையில் பணிபுரிய போகிறோம். அதற்கான வழிமுறைகளை என்ன என்பதை ஆராய்தல் வேண்டும்.

9. நெட்வர்க்கை புதுப்பித்தல்

9. நெட்வர்க்கை புதுப்பித்தல்

'நீங்க ஜஸ்ட் இன்டெர்வியூ மட்டும் அட்டன் பண்ணுங்க ப்ரோ, ரெபரென்ஸ் யாருனு கேட்டா என் பேரை சொல்லிடுங்க' என்று தக்க சமயத்தில் உதவும் ஆக்டிவ் நெட்வர்க்வுடன் இணைந்திருப்பது அவசியம் இதற்கு லிங்க்டு இன், டுவிட்டர் போன்ற தளங்கள் உதவிபுரிகின்றன.

8. தேடுதல் வேட்டை

8. தேடுதல் வேட்டை

இப்போது நீங்கள் வேலைக்கான தேடுதலை தொடங்கலாம். முன்பே யோசித்து வைத்தார் போல் நீங்கள் தேடும் வேலையை எந்த வகையான நிறுவனங்கள் வழங்குகின்றன.

எந்ததெந்த துறைகளில் தற்போது பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவர்களின் முகவரி என்ன என்பது போன்ற முழுத்தகவல்களையும் இந்த ஸ்டேஜில் முடித்து விட வேண்டும்.

 

7. நெட்வர்க்கை உயிர்ப்பிப்பது

7. நெட்வர்க்கை உயிர்ப்பிப்பது

இப்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள துறைகளில் பணிபுரியும் நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் பணி விவரம் குறித்து தேர்வு முறைகள் குறித்து விளக்கம் பெற வேண்டும்.

உங்கள் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என போனில் உள்ள எண்களுக்கும் அல்லது சமூக வலைதளம் வாயிலாக உங்களது நண்பர்களை தொடர்பு கொள்வது அவசியம்.

 

6. பட்டியல் இடுங்கள்:

6. பட்டியல் இடுங்கள்:

கிடைக்கப்பெற்ற துறை வாரியான பணி விவரங்கள் முழுவதையும் பட்டியலிடுங்கள். இதை தவித்து எங்கு எங்கெல்லாம் பணி தொடர்பான வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்பதை பட்டியல் இட மறவாதீர்கள்.

 

5. வேலை வாய்ப்பு முகாம்

5. வேலை வாய்ப்பு முகாம்

பொதுவாக நாம் பதிவு செய்த அல்லது குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்துமட்டும் அழைப்பு வரும் என்று கடைசிநேரம் வரை காத்திராமல் எந்தப்பகுதிகளில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்பதை கூர்மையாக கவனிக்க வேண்டும் இது நமது வேலை தேடலை மிக எளிமையாக்கும்.

4. இன்டெர்வியூ

4. இன்டெர்வியூ

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வேலை உங்களை தேடி வர ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் நேர்த்தியான உடைகளுடன் களத்தில் இறங்கி விட வேண்டியதுதான்.

இன்று எங்கு இன்டெர்வியூ இதன் அருகில் எங்கெல்லாம் இன்டெர்வியூ நடக்கிறது என்பதை கவனமாக குறித்து வைத்து கொள்வது அவசியம் இது ஒரே நாளில் மற்றொரு இடத்திலும் நேர்காணலுக்கு செல்ல வழிவகுக்கும்.

 

3.  நட்பு வட்டத்தை மீண்டும் புதுபித்தல்

3. நட்பு வட்டத்தை மீண்டும் புதுபித்தல்

இப்போது நமக்கு கொஞ்சம் கூடுதலாக நட்பு வட்டம் கிடைத்திருக்கும். எப்படி என்றால் ஏற்கனெவே இருக்கும் நட்பு வட்டத்துடன் தற்போது இன்டெர்வியூ சமயத்தில் கிடைத்த அறிமுகங்கள் எங்கு இன்டெர்வியூ உள்ளது என்று கூற ஆரம்பித்திருப்பார்கள்.

அப்படி ஏதும் தகவல் இல்லை என்றால் அவர்களிடம் இன்று எங்கு இன்டெர்வியூ நண்பா என்று கேட்டால் அது உங்கள் வேலை தேடலை எளிமையாக்கும்.

 

2. பலோ அப்

2. பலோ அப்

பட்டியல் இட்ட வேலைகளையும், நண்பர்கள் வட்டத்தையும் தொடர்ந்து 'பலோ அப்' பண்ணா மட்டும் போதும் வேலையை வீட்டில் இருந்தே தேடலாம். இதுமட்டும் போதாது. அதற்கான தயாரிப்பில் இருப்பது மிக மிக அவசியம்.

 

1. யூ ஆர் செலக்ட்

1. யூ ஆர் செலக்ட்

அப்புறம் என்ன அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் வாங்குவது மட்டும்தான் பாக்கி வேலை. ஆனால் மேற்கண்ட வழிமுறைகளை வழக்கமாக பரீட்சைக்கு படிப்பது போல் படித்தால் மட்டும் போதாது.

நாம் அனுதின இன்டெர்வியூ அனுபங்களை தினம் தினம் நாம் சந்திக்கும் நண்பர்களிடமோ, அல்லது குடும்ப உறுப்பினர்களிடமோ, அதுவும் இல்லை என்றால் கண்ணாடி முன் நின்றாவது பரிசோதனை செய்வது அவசியம்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் போதும் எளிதாக வேலையை தட்டிப்பறித்துவிடலாம்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
30 Days to Finding Your Dream Job contains 30 steps to help you find the job of your dreams. The tips are organized in a specific order, beginning with advice on how to start a job search, and ending with tips on how to decide whether to accept or reject a job offer.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X