போட்டி தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அரசியலமைப்பு பாடத்தில் அதிக மதிபெண் பெறுவது அறிவோம்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டிதேர்வுக்கு தயாராகும் உங்களுக்கான ஒரு எளிய டிப்ஸ்கள் ஒன் இந்தியா தொகுத்து வழங்கும் அடுத்த குறிப்பானது பொது அறிவு பாடத்தில் அறிவியல் பாடம், கணிதம், நடப்பு நிகழ்வுகள் இதுவரை பார்த்தோம். இனி பொது அறிவுபாடத்தின் அடுத்த ஆயுதமாக இந்திய அரசியலமைப்பை படிப்பது பற்றி அறிவோம் . பொது அறிவு பாடத்தின் ஒரு பகுதியான் இந்திய அரசியலமைப்பு சமுகவியல் அறிவோடு இனணந்து வழங்கப்படும் .
சமச்சீர் புத்தகதில் குடிமையியல் பாடத்தோடு இணைந்த இந்திய அரசியலமைப்பை படியுங்கள் எந்த கேள்விக்கும் பதிலளிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் பொதுஅறிவு பகுதியில் அதிகமதிபெண் பெறுவது அறிவோம்

டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதும் அனைவருக்கும் அரசியலமைப்பு பாடத்தில் படிக்க வேண்டியது என்று பார்த்தால் அனைத்தும் படிக்க வேண்டும் அத்துடன் நினைவில் வைக்க உங்களுக்கான பலயுக்திகளை கையாலலாம் . அரசியலமைப்பு கேள்விகள் கேட்கும் பகுதிகள் நன்கு அறிந்து கொள்ளுங்கள் .
அது பொருட்டு செயல்படுங்கள் அரசியலமைப்பை பொருத்தவரை கேட்கப்படும் கேள்விகள் பகுதிகள் என்று பார்த்தால் அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் அத்துடன் முகப்புரை அடிப்படை கடமைகள் , சரத்துகள், திருத்தம் , காஷ்மீர் , பஞ்சாய்த்து இவற்றிலிருந்து கேள்விகள் நிச்சயம் இடம்பெறும் .
அரசியலமைப்பு முழுவதுமாக படிக்க முடியவில்லை என்ற காரணம் கொண்டவர்கள் நான் மேலே குறிப்பிட்ட குறைந்தபட்ச பாடங்களையாவது படியுங்கள் போதுமானது . அவற்றினை நன்றாக தெரிந்துகொண்டால் வெற்றி குறைந்த பட்சம் ஐந்து முதல் ஏழு கேள்விகளுக்கு பதிலளிக்கலாம் . புரிந்து படிக்க வேண்டும் அதுதான் முக்கியம் புரிந்து படிக்கும்போது அதன் மீது ஆர்வம் பெருகும் மேலும் மீதமுள்ள மத்திய, மாநில, கூட்டாட்சி, கமிசன்கள் அனைத்தும் படித்தால் மொத்த 15 முதல் 20 கேள்விகளுக்கும் பதிலளிக்கலாம் .

முயற்சியுடன் பயிற்சி செய்யும்போது தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும் . விளையாட்டு வீரர்களை போல் போட்டிதேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் முறையான பயிற்சி அவசியம் ஆகும் . பயிற்சி என்ற படிக்கும் பழக்கம் இருக்கும்பொழுது வெற்றி பெறுவது எளிதாகும்.

சார்ந்த படிப்புகள் : 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான பொது அறிவு குறிப்புகள் 

போட்டி தேர்வு எழுதுவோர்க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி கேள்விகள் முயற்சி செய்யுங்க

சீரான வேகம் நிலைத்த் முயற்சி வெற்றிக்கு வழியாகும்

English summary
above article telling tips to be strong in GS part of tnpsc examination
Please Wait while comments are loading...